ஜாதகப்படி என்ன வேலைக் கிடைக்கும்
ஜாதகப்படி உங்களுக்கு என்ன வேலை கிடைக்கும்?
வேலை என்பது சமூகத்தில் ஒருவருக்கு அந்தஸ்தையும், மரியாதையையும் தீர்மானிக்கிறது. இன்றையை காலக்கட்டத்தில் ஒருவருக்கு வேலை கிடைத்தால் போதும் என்ற நிலையாகி விட்டது. தற்போது உள்ள நிலையில் வேலை தேடுபவர், வேலைக்காக காத்திருப்பவர், அரசு வேலைக்கு முயற்சிப்பவர் எண்ணற்றோர். நல்லா படிச்சு நல்ல மார்க்கும் எடுத்தேன். ஆனா வேலை தான் கிடைக்கல என புலம்புவோரும் உண்டு.
நமக்கு நல்ல வேலை கிடைப்பதற்கு ஜோதிடம் மிகுந்த பங்கு வகிக்கிறது. ஜோதிடத்தில் வேலைக்கென்று தனி இடம் உள்ளது. அது தான் பத்தாம் ஸ்தானம். இது வேலை ஸ்தானமாக பார்க்கப்படுகிறது. உத்யோக ஸ்தானம் என்பது இந்த பத்தாம் இடமே. இந்த பத்தாமிடம் செயலையும், செயல் திறனையும், செயலின் ஊக்கத்தையும், செயலின் வேகத்தையும் கூறுகிறது.
உழைப்பின் ஆழத்தை, தீவிரத்தை, ரூடவ்டுபாட்டை இந்த பத்தாம் இடம் சொல்லிவிடும். பத்தாம் இடத்தை வைத்து ஒருவர் வாழ்க்கையில் எவ்வளவு உச்சத்தை தொடப் போகிறார், யாருக்கு அரசு வேலை கிடைக்கும், நல்ல வேலை அமைய பெற்றவர் யார் என்பதை தெரிந்துக் கொள்ளலாம்.
ஜாதகத்தில் பத்தாம் இடத்தில் அமரும் கிரகங்களின் பொது பலன்கள் :
ஒருவரின் ஜாகத்தில் சூரியன் பத்தில் இருந்தால், அரசு உத்யோகத்தில் இருப்பார்.
சந்திரன் பத்தில் இருந்தால் டெக்ஸ்டைல் பிசினஸ், இஞ்சினியர், இன்டீரியர் என்று வேலை மாறும்.
செவ்வாய் பத்தில் இருந்தால் காவல்துறை, தீயணைப்பு துறை, உளவுத்துறை என பல்வேறு துறைகளில் அமர்த்துவார்.
புதன் பத்தில் இருந்தால் பத்திரிகையாளர், ஜோதிடர், ஆசிரியர் என பல வேலைகளைத் தருவார்.
குரு பத்தில் இருந்தால் பேராசிரியர், வங்கி மேனேஜர், ஆன்மிகப் பத்திரிகை என பல வேலைகள் அமையும்.
சுக்கிரன் பத்தில் அமர்ந்தால் நகை வியாபாரம் செய்வார். கவிஞனாகவும் வலம் வருவார்.
சனி பகவான் பத்தில் அமர்ந்தால் இரும்பு, உலோகம், தொழிற்சாலை சமந்தப்பட்ட வேலையில் அமர்த்துவார்.
ராகு பத்தில் அமர்ந்தால் ஏஜென்சி, புரோக்கர் போன்ற வேலையில் அமர்த்துவார்.
கேது பத்தில் அமர்ந்தால் அர்ச்சகர், மருத்துவராக வலம் வருவார்.
ஒருவருக்கு வேலை இன்றியமையாதது. ஒவ்வொரு ராசிக்கும் பத்தாம் இடத்தில் உள்ள ராசிக்கு யார் அதிபதி, அவர் அந்த ராசிக்கு நட்பா, பகையா, உச்சமா, நீசமா என்பதை ஆராய்ந்து தான் ஒருவருக்கு எத்தகைய வேலை கிடைக்கும் என்பது கூற முடியும்.