எந்தெந்த ராசிக்காரர்களுக்கு அரசாங்க வேலை கிடைக்கும் யோகம் உண்டு
- மேஷம் :
மேஷ ராசிக்காரர்கள் எதையும் தைரியமாக எதிர்கொள்ளும் மனப்பக்குவம் கொண்டவர்கள். இவர்கள் போட்டி மனப்பான்மையுடன் அணுகினால் மட்டுமே பிரச்சனைகளை எதிர்கொள்ள முடியும்.
எனவே, மேஷ ராசிக்காரர்களுக்கு அரசு வேலை வாய்ப்பு கிடைப்பதில் சிரமம் ஏற்படும். ஆனால், தீவிரமாக முயற்சி செய்தால் அரசு வேலை கிடைக்கும் யோகம் உள்ளது.
- மிதுனம் :
மிதுன ராசிக்காரர்கள் திறமை நிறைந்தவர்கள். தங்களின் வாய்ப்பிற்காக காத்திருப்பவர்கள்.
இந்த ராசிக்காரர்கள் தொடர்ந்து போராடினால் அரசாங்க வேலை அல்லது பொதுமக்களுடன் தொடர்புடைய வேலை போன்றவற்றில் ஏதேனும் ஒன்று கிடைக்கும் யோகம் உண்டு.
- சிம்மம் :
சிம்ம ராசிக்காரர்களுக்கு அரசாங்க வேலை கிடைப்பதற்கான யோகம் இருக்கிறது.
ஆனால், சிம்ம ராசிக்காரர்கள் எப்போதும் போராடிக் கொண்டே இருப்பது போலவே தோன்றும்.
- விருச்சகம் :
விருச்சக ராசிக்காரர்கள் கடின உழைப்பாளிகள். அதனால் இவர்களிடத்தில் எப்போதும் உழைக்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கி இருக்கும்.
ஆனால், இவர்களுக்கு அரசு வேலை வாய்ப்பு கிடைக்கும் யோகம் ஒரு முறை மட்டுமே உள்ளது என்பதால், கவனமுடன் அந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.
- மகரம் :
மகர ராசிக்காரர்கள் எதையும் மிக எளிதாக புரிந்து கொள்ளக்கூடியவர்கள். இவர்களுக்கு சுற்றுச்சூழல் தொடர்பாகவும், இயற்கை தொடர்பாகவும் ஆர்வம் அதிகமாக இருக்கும்.
இவர்கள் தனக்கான பாதையை தேர்ந்தெடுப்பதில் மிகவும் வல்லவர்கள்.
இந்த ராசிக்காரர்கள் கொஞ்சம் முயற்சி செய்தால் அரசு வேலை கிடைக்கும் யோகம் உள்ளது.
- மீனம் :
மீன ராசிக்காரர்கள் முன் யோசனையுடன் செயல்படுவதில் மிகவும் சிறந்தவர்களாக விளங்குவார்கள். கற்பனைத் திறன் மிக்கவர்கள்.
இவர்கள் சோம்பேறித்தனத்தை விட்டு தொடர்ச்சியாக முயற்சி செய்தால் அரசு வேலை கிடைக்கும் யோகம் உண்டு.
மேற்குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து தகவல்களும் பொதுவானவையே ஆகும். ஒவ்வொருவரின் ஜாதகத்திற்கேற்ப பலன்கள் மாறுபடும்.