Type Here to Get Search Results !

Translate

ஆபத்தான ஆங்கில வைத்தியம்

ஆபத்தான ஆங்கில வைத்தியம்


ஆபத்தான ஆங்கில வைத்தியம்

மேற்கத்திய வல்லரசு நாடுகளில் தோன்றிய 'Allopathy' என்னும் ஆங்கில வைத்தியம் அசுர வளர்ச்சி பெற்று.... உலக நாடுகளின் சகல பாரம்பரிய வைத்தியங்களையும் தூக்கி வீசிவிட்டு மருத்துவ உலகில் முழு ஆதிக்கம் செலுத்தும் ஆபத்தான வைத்தியமாக வளர்ந்துள்ளது.

30 ஆண்டுகள் வாயைக் கட்டி வயிற்றைக்கட்டி சாமானிய மக்கள் சம்பாதித்த பணத்தை ஏதோ ஒரு நோயின் பெயரைச் சொல்லி முப்பதே நாட்களில் கொள்ளை அடிக்கும் வகையில் திட்டமிடப்பட்ட அபாயகரமான வைத்தியமாக இது உள்ளது. இந்த வைத்தியம்தான் அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட வைத்தியம் என்பதுபோல் ஒரு மாயை தோற்றுவிக்கப்பட்டுள்ளது.

இந்த வைத்தியத்தைப் படிப்பதற்கும் மிகப்பெரிய தொகையை முதலீடு செய்யும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த ஆங்கில வைத்திய நிலையங்களில் பயன்படுத்தப்படும் அத்தனை விலை உயர்ந்த கருவிகளும் மேற்கத்திய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. இவர்கள் தரும் அத்தனை ஆங்கில மருந்துகளும் மேற்கத்திய நாடுகளில் உற்பத்தி செய்யப்படுகின்றது.

எனவே, இந்த வைத்தியத்தின் வழியே மக்களிடம் கொள்ளை அடிக்கப்படும் பணம் முழுவதும் அந்த நாடுகளுக்கே சென்று சேர்கின்றது. எனவே, ஆதிக்க சக்திகளின் கையில் உள்ள இந்த வைத்தியத்தை 99% தவிர்ப்பது நல்லது.

மூன்றே மூன்று இக்கட்டான சந்தர்ப்பங்களில் மட்டுமே இந்த வைத்தியத்தை அணுகலாம்.

i. திடீரென்று ஏற்படும் விபத்துக்களின்போது முதலுதவி செய்வதற்காக அணுகலாம்.

ii. நம் கவனக்குறைவால் ஏதேனும் ஒரு நோய் உடம்புக்குள் வளர்ந்து உபாதை செய்தால் ஆய்வுகள் மூலம் அந்த நோயின் தன்மையையும் அளவையும் தெரிந்துகொள்ள இந்த மருத்துவத்தை அணுகலாம்.

iii. புற்று நோய்க் கட்டிகள் போல் ஏதேனும் ஒரு நோய் வளர்ந்து அறுவை சிகிச்சை இன்றி மற்ற மருத்துவத்தால் கரைக்க முடியாத நிலையை அடைந்திருந்தால் அறுவை சிகிச்சை மூலம் அவற்றை அகற்றுவதற்கு ஆங்கில வைத்தியத்தை அணுகலாம்.

இந்த மூன்று சூழ்நிலைகள் தவிர மற்ற நேரங்களில் இந்த மருத்துவத்தை அணுகுவது ஆபத்து.. ஆபத்து.. ஆபத்து!!!



கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad