இறந்தவனுடைய கதி
மனித லோகத்துக்கும் யமபுரிக்கு இடையில் 86 ஆயிரம் காதம் தூரம் உள்ளது
எமதூதர்கள் மூவர் விதி முடிந்த ஜீவனைப் பாசத்தால் கட்டிப் பிடித்து காற்றின் உருவமான தேகத்தில் அடைத்து கொண்டு எம லோகத்திற்கு சென்று எமதர்மராஜனின் முன்பு நிறுத்துவார்கள்
யமதர்ம ராஜனும் அக் கிங்கரர்களிடம் நன்று நன்று இவனை மீண்டும் கொண்டு போய் அவன் வீட்டில் விட்டு விடுங்கள்
பன்னிரண்டாவது நாள் கழிந்த பிறகு மீண்டும் நம் முன்பு நிறுத்துங்கள் என்று கட்டளையிடுவான் மீண்டும் அவனை ஒரு நொடியில் அவன் வீட்டின் முன்பு விட்டுவிடுவார்கள் எனவே இறந்தவனை உடனே புதைக்கவோ எரிக்கவோ கூடாது
மரித்த ஜீவன் மூன்று நாள் நீரிலும் மூன்று நாட்கள் அதிலும் மூன்று நாட்கள் ஆகாயத்திலும் ஒருநாள் தனது வீட்டிலும் ஆவி உருவில் வசிப்பான்
முதல்நாள் மூன்றாவது ஐந்தாவது ஏழாவது 11வது நாளில் நவ சிரார்த்தம் செய்ய வேண்டும் பதினோராவது நாள் இன்று பலகாரத்தோடு சோறு சமைத்து நாற்சந்தியில் கொட்டிவிட வேண்டும்