ஒரு மனிதனுக்கு உயிர் பிரியும் தருவாயில் செய்ய வேண்டியது என்ன?
இறக்கும் தருணம் வந்து விட்டாள்
புண்ணிய தீர்த்தத்தில் நீராடி பிராமணருக்கு தானம் செய்யவேண்டும் மரணப்படுக்கையில் ஒருவர் இருந்தால் அவருக்கு பதிலாக அவருடைய பிள்ளைகளும் அவருக்கு கருமம் செய்பவர்களும் இதனை செய்யலாம்
ஒருவனுக்கு உயிர் பிரியும் தருவாயில் அவனை கட்டிலில் படுக்க வைக்க கூடாதுஉள் வீட்டிலும் படுக்க வைக்க கூடாது தரையில் தர்ப்பையை போட்டு அதன் மீது அவனை படுக்க வைக்கவேண்டும் கட்டிலில் படுத்துக் கொண்டே உயிரை விட்டதாள் பரிக்ஷிது ராஜா நரகத்தை அடைந்தார்.
ஒரு மனிதன் பிறக்கும் போதும் இறக்கும் போது பூமாதேவியின் மடியிலேயே நடக்கவேண்டும் தற்காலத்தில் வசதிக்காகவும் எளிதாக பிரசவம் பார்ப்பதற்காகவும் பெரும்பாலும் பிரசவம் விடுதிகளில் கட்டிலில் தான் பிரசவங்கள் நடைபெறுகின்றனஇறக்கப்போகும் மனிதனுக்கு துளசி சாலிகிராமம் போன்ற உத்தம பொருட்களை கண்ணில் காட்டவும் ராம ராம என்ற மந்திரத்தையோ சிவநாமத்தையோ அவரது வலது காதில் ஓத வேண்டும்
புண்ணிய சாலிகளுக்கு முகத்தில் உள்ள துவாரங்கள் மூலமாகவும் ஞானிகளுக்கு சிரசு வெடித்தும் பாவிகளுக்கு மலஜல துவாரம் வழியாகவும் உயிர் பிரியும்