ருத்ராக்ஷ மணி மாலைகளின் பலன்களும் பயன்களும்
5. லட்சுமி மாலை
ஐந்து ருத்ராட்சங்கள் இணைந்த மாலை இது இதில் இரண்டு 7முகம் மணியும் மூன்று நான்கு முக மணியும் கட்டப்பட்டு இருக்கும் இந்த மாலையை அணிந்தால் எப்பேர்ப்பட்ட வறுமையும் அகலும் பொருளாதாரத் தடைகள் விலகும் தனமும் தானியமும் பெருகி குடும்பத்தில் சுபிட்சம் ஏற்படும்6. சரஸ்வதி மாலை
இதுவும் 5 ருத்ராட்சங்கள் இணைந்த மாலையாகும் இரண்டு நான்கு முக மணியும் இரண்டு ஆறுமுகம் அணியும் ஒரு எட்டு முக மணியும் கட்டப்பட்டு இருக்கும் இதனால் அறிவியல் தெளிவும் ஞானமும் ஏற்படும் மாணவர்கள் அணிந்தால் கல்வியில் தேர்ச்சியும் உயர்கல்வியில் வெற்றியும் வந்துசேரும் கல்வித்துறை வல்லுநர்கள் அணியலாம்
7. கார்த்திகேய மாலை
இது 36 மணிகள் இணைந்த மாலையாகும் இதில் 35 மணிகள் ஆறுமுக ருத்ராட்சங்களும் ஒரே ஒரு மணி இரண்டு முக ருத்ராட்சமும் நாயகமணியாக குஞ்சம் போலவும் இருக்கும் இதில் ஆறுமுகம் மணி முருகனின் அம்சம் இருமுகம் மணி சிவசக்தி இணைந்த அர்த்தநாரீச அம்சமாகும் இதனை அணிவதால் முருகனின் பேரருள் கிட்டும் சகலவிதமான நன்மைகளும் வாழ்வில் ஏற்படும்
8. ஹனுமன் மாலை
இது ஐந்து ருத்ராட்சங்கள் இணைந்த மாலை இதில் ஒரு நான்கு முக மணியும் ஒரு ஐந்து முக மணியும் இரண்டு மூன்று முகம் மணிகளும் ஒரு பதினோரு முக மணியும் கட்டப்பட்டிருக்கும் இதனை அணிந்தால் பிரம்மச்சரிய விரதத்தில் மன உறுதி ஏற்படும் பயம் விலகி தைரியம் கூடும் பேய் பிசாசு வைப்பு ஏவல் பில்லி சூனியம் போன்றவற்றினால் வரும் தீமைகள் அழியும்
9. நவகிரக மாலை
இது ஒன்று முதல் ஒன்பது முகம் வரை உள்ள 9 ருத்ராட்சங்கள் இணைந்த மாலை இதில் ஒரு வட்டமான ஒரு முக ருத்ராக்ஷம் நடுநாயகமாக இருக்க மற்ற இரண்டு முதல் எட்டு முகம் வரை எட்டு மணிகளும் வரிசையாக கோர்க்கப்பட்டிருக்கும் இதனை அணிந்தால் நல்ல மனநிலை மன உறுதி மன ஒருமைப்பாடு கிடைக்கும் நவ கிரகங்களால் வரும் தீமைகள் விலகி நற்பலன்கள் ஏற்படும் நோய்கள் விலகி ஆரோக்கியம் கிடைக்கும்
10. நட்சத்திர மாலை
இது 27 மணிகள் இணைந்த மாலையாகும் இதில் 1 2 3 4 5 6 7 8ம் இடங்கள் மற்றும் 13 14 15 16 17 மற்றும் 22 23 24 25 26ம் இடங்களில் 18 மணிகள் ஆறு முக ருத்ராக்ஷம் களும் 9 10 11 12 இடங்களில் 4 மணிகள் நான்கு முக ருத்ராட்சமும் 18 19 20 21 ஆம் இடங்களில் 4 மணிகள் ஐந்துமுக ருத்ராட்சமும் நடுநாயகமாக ஒரேஒரு ஏழுமுக ருத்ராக்ஷம் அணியும் சேர்த்துக் கட்டப்பட்டிருக்கும் இந்த நட்சத்திர மாலையை அணிவதால் ஜாதகத்தில் நட்சத்திர தேவதைகள் வந்த தோஷங்கள் விலகி கிரக கோளாறுகள் அகலும் சுகமும் சுபிட்சமும் செல்வமும் ஏற்படும்
11. சித்த மாலை
இந்த மாலை 28 மணிகளைக் கொண்டு உருவாக்கப்படுகிறது இதில் நடுநாயகமாக அரைச் சந்திர வடிவில் ஒரே ஒரு ஒரு முக ருத்ராட்சம் மணியும் அதற்குமேல் ஒரு கௌரிசங்கர் ருத்ராட்சமும் அதற்கு மேல் 2 முதல் 14 முகம் வரை உள்ள 13 மணிகள் இருபுறமும் ஒவ்வொன்று என்ற ஏறுவரிசையில் 26ம் மணிகளும் கோர்க்கப்பட்டிருக்கும் இதுவே சித்த மாலை எனப்படும் எந்த வீட்டில் சித்த மாலை உள்ளதோ அந்த வீட்டினர் எல்லா விதத்திலும் மேலோங்கி வாழ்வார்கள் திட்டமிடுதலில் வெற்றிகள் குவியும் குடும்ப மனிதர்கள் புகழ் அடைவர் சகல சவுபாக்கியங்களும் அந்த இல்லத்தில் வந்து சேரும் லட்சுமி கடாட்சம் தழைத்தோங்கும்
12. இந்திர மாலை
இந்த மாலையில் மேரு மணியாக ஒரு அரை சந்திர வடிவ ஒரு முக மணியும் அதற்குமேல் இருபுறமும் (3+3 =6 ) 6 கௌரி சங்கர் என்ற ருத்ராட்ச களும் அதன் பிறகு ஒரே ஒரு கணேஷ் ருத்ராட்சமும் பிறகு 2 முதல் 21 முகம் வரை உள்ள ருத்ராட்சங்கள் 20ஆம் வரிசையாக கோர்க்கப்பட்டிருக்கும் இதனை அணிவதால் தசேந்திரியங்கள் எனப்படும் 10 ஹரி கருவிகளும் சிறப்புடன் செயல்படும் அறிவு மேலோங்கி ஞானம் ஏற்படும் புலன்களில் கட்டுப்பாடு மிகும்
13. புத்தி மாலை
ஐந்து ருத்ராக்ஷ மணிகளை கொண்டது இது இந்த மாலையில் இரண்டு நான்கு முகம் மணிகளும் இரண்டு ஐந்து முக மணிகளும் ஒரே ஒரு ஆறுமுகம் அணியும் கட்டப்பட்டிருக்கும் இதனை அணிவதால் அபஸ்மாரம் எனப்படும் புத்தி தெளிவின்மை நோய் விலகி புத்தி கூர்மையான நிலை ஏற்படும் அறிவாளி ஆவான் ஞானம் வரும் கல்வித் துறைகளில் சிறந்து விளங்குவான்
14. தர்ம மாலை
மூன்று மணிகளைக் கொண்டது இது இந்த மாலையில் ஒரு ஐந்து முக மணியும் ஒரு எட்டு முக மணியும் ஒரு இரண்டு முக மணியும் கோர்க்கப் பட்டிருக்கும் இதனை பூஜை அறையில் வைத்து வழிபாடு செய்தால் பலவகை தர்மங்களை கடைபிடித்த பலனை எளிதாக அடையலாம்