Type Here to Get Search Results !

Translate

எந்த ராசிக்காரர்கள் கடன் அடைய என்ன மாதிரியான பரிகாரங்கள் செய்யலாம்

கடன் அடைய பரிகாரங்கள்
கடன் அடைய பரிகாரங்கள் 
கடன் எப்படி ஏன்?

கடன்பட்டார் நெஞ்சம்போல் கலங்கினான் இலங்கை வேந்தன் என்று கடன்பட்டவர்களின் மன வேதனையைப் பற்றி முன்பெல்லாம் சொல்வார்கள். ஆனால் தற்காலத்தில் எங்கும் கடன் எதற்கும் கடன் என்ற சூழ்நிலை நிலவுகிறது. ஒரு குறிப்பிட்ட சதவிகிதத்தினருடன் சில மகாபாக்யவான்களை தவிர மற்றவர்களுக்கு ஏதாவது ஒரு வழியில் கடன் சுமை ஏற்பட்டு விடுகிறது. இதில் சுப விரயமும் அசுப விரயமும் அடக்கம்.


எந்த ராசிக்காரர்கள் என்ன மாதிரியான பரிகாரங்கள் :

மேஷ ராசி

தயிரை கொண்டு ஏதேனும் மஞ்சள் நிற இனிப்பு பண்டம் தயார் செய்து ஒவ்வொரு வெள்ளியும் மாலை வேளையில் பசுவிற்கு கொடுத்து வர கடன்கள் நீங்கி வளம் பெறலாம்.

ரிஷப ராசி

ஜவ்வரிசி கொண்டு இனிப்பு தயாரித்து அதை வெள்ளியன்று பசுவிற்கு மாலை வேளையில் கொடுத்து வர கடன்கள் அடைந்து சுகம் பெறலாம்.

மிதுன ராசி

தினசரி சிறிது தயிர் சேர்த்து குளித்து வர கடன்கள் நீங்கும். மாலை வேளையில் சூரிய தரிசனம் அஸ்தமனத்திற்கு முன் செய்து வரவும்.

கடக ராசி

ஒவ்வொரு ஞாயிறும் சிறிது வெல்லக்கட்டியை ஓடும் நீரில் விடவும். ஞாயிறு அன்று அச்சு வெல்லக்கட்டியை குரங்குகளுக்கு கொடுத்து வரவும்.

சிம்ம ராசி

ஒவ்வொரு சனிக்கிழமையும் அரச மரத்தடியில் மண் அகலில் நல்லெண்ணெய் ஊற்றி கருப்பு திரி கொண்டு 8 விளக்குகள் ஏற்றி வர கடன்கள் அடைய வழி பிறக்கும்.

கன்னி ராசி

சனிக்கிழமைகளில் உளுந்து வடை தானம் செய்யவும் (நீங்கள் உண்ண கூடாது). மேலும் துளசிக்கு தினசரி நீர் வார்த்து ஒரு மண் அகலில் நல்லெண்ணெய் விளக்கேற்றி வைக்க ருண நிவாரணம் பெறலாம்.

துலாம் ராசி

சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையில் வரும் சதுர்த்தி திதி குளிகன் நேரத்தில் அசல் தொகையில் ஒரு பகுதியை கொடுத்தால் கடன் சீக்கிரம் அடைபடும்.

விருச்சக ராசி

மரணயோகம் உள்ள நாட்களில் வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுப்பதற்கு அந்த நாளைப் பயன்படுத்தலாம். கடன் தீர்ந்துவிடும்.

தனுசு ராசி

வீடிழந்தோருக்கு வீடு கட்ட செவ்வாய் கிழமைகளில் செங்கல்கள் முடிந்த அளவு வாங்கி கொடுக்க கடன்கள் அடைந்து நிம்மதி பெறலாம்.

மகர ராசி

சனிக்கிழமைகளில் எள்ளுருண்டை செய்து பலருக்கு தானமாய் கொடுத்து வர கடன் தொல்லை நீங்கும்.

கும்ப ராசி

வியாழன் மாலை 6 மணிக்கு குங்குமப்பூ சேர்த்த பாதாம் கீர் செய்து மகாவிஷ்ணுவிற்கு நிவேதனம் செய்து முதலில் தான் அருந்திவிட்டு பின்பு மற்றோருக்கும் தானமாய் பிரசாதமாய் கொடுத்து வர கடன்கள் அடைபடும்.

மீன ராசி

தொழு நோயாளிகளுக்கு சப்பாத்தியை தானமாக செவ்வாய்கிழமை மதியம் அல்லது இரவு 9 மணிக்குள் கொடுத்து வர கடன்கள் வேகமாக அடைய ஆரம்பிக்கும். குறைந்தது 9 சப்பாத்திகள் கொடுப்பது நலம்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad