![]() |
திருமண தடை நீங்க பரிகாரங்கள் |
திருமண தடை நீங்க பரிகாரங்கள்
திருமணம் என்பது ஆயிரங்காலத்துப்பயிர் என்று கூறுவர். சிலருக்கு திருமணம் நடைபெறுவதில் அடிக்கடி தடைகள் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். அதற்கான பரிகாரங்கள் இதோ..!!
ஒவ்வொரு தமிழ் மாதம் துவங்கும்போதும் உத்திரம் நட்சத்திரம் வரும் வளர்பிறை நாளில் அருகில் உள்ள சிவன் கோவில் சென்று சிவபெருமானுக்கு வில்வ மாலை சாத்தி அபிஷேகம் செய்து வழிபட வேண்டும். பிரதோஷ நாளில் நந்திபகவானுக்கு பால் தயிர் வாங்கி அபிஷேகத்துக்கு கொடுக்க வேண்டும். விரைவில் திருமணம் நடைபெறும்.
ஏற்றமான வாழ்வு அமைய விநாயகருக்கும் சனிபகவானுக்கும் மிகவும் பிரியமான மரம் வன்னி மரம். வன்னிமரத்தின் கீழ் உள்ள விநாயகரை வழிபடுவதால் சனி ராகு கேது தசாபுத்தி பாதிப்பு ஆயுள் விருத்தி நினைத்த காரியம் நிறைவேறல் பொன்பொருள் சேர்க்கை ஏற்றமான வாழ்வு அமையும்.
புத்திர பாக்கியத்திற்கு ஆறு தேய்பிறை அஷ்டமிகளில் சிவன் கோவிலில் உள்ள பைரவருக்கு சிவப்பு அரளி மலர்களால் அர்ச்சனை செய்து வந்தால் குழந்தை பாக்கியம் கைகூடும்.
கடும் குடும்ப பிரச்சனைகள் அகல :
தினமும் வீட்டின் அருகில் உள்ள பெருமாள் கோவிலில் உள்ள ஸ்ரீலட்சுமி நரசிம்மருக்கு சனிக்கிழமைகளில் நெய்தீபம் ஏற்றி வழிபட பாதிப்பு நீங்கும்.
பாவங்கள் போக்கும் ஸ்படிக லிங்க பூஜை :
ராமநாதசுவாமி மூலஸ்தானத்தில் ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த ஸ்படிக லிங்கம் இருக்கிறது. தினமும் காலை 5 மணிக்கு இந்த லிங்கத்திற்கு பாலபிஷேகம் செய்கின்றனர். இந்த அபிஷேகத்திற்கு பின்பே ராமநாத சுவாமிக்கு பூஜை நடக்கிறது.
அதிகாலையில் எழுந்து 21 தீர்த்தங்களிலும் நீராடி இந்த ஸ்படிக லிங்க பூஜையில் கலந்து கொண்டால் திருமணம் குழந்தையின்மை முன்னோர் சாபம் உள்ளிட்டவைகளில் இருந்து விரைவில் நிவாரணம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
தீர்த்த யாத்திரைக்கு பெயர் பெற்ற இக்கோவிலில் இந்த ஸ்படிக லிங்க பூஜை மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.