![]() |
ஒற்றுமையுடன் வாழ |
வாழ்நாள் முழுவதும் உடன் பிறந்தவர்களுடன் ஒற்றுமையாக வாழ
ஒருவர் வாழ்நாள் முழுவதும் உடன் பிறந்தவர்களுடன் ஒற்றுமையாக மகிழ்ச்சியாக வாழ வேண்டுமெனில் அவருடைய ஜாதகத்தில் சகோதர தோஷம் இல்லாமல் இருக்க வேண்டும். சகோதரர்கள் ஒற்றுமையோடு வாழ வைக்கும் கிரகம் செவ்வாய்.
ஒருவருடைய ஜாதகத்தில் செவ்வாய் ஆட்சி, உச்சம் நட்பு சமம் ஆகிய பலன்கள் பெற்ற வீடுகளில் வந்தால் சகோதரர்கள் ஒற்றுமையோடு வாழ்வர். செவ்வாய் பகை வீட்டில் இருந்தால் சகோதரர்களிடையே ஒற்றுமை இருக்காது. சகோதர தோஷம் ஏற்பட்டு விடும்.
அதேபோல் மேஷம் விருச்சகம் ஆகிய லக்னங்களில் பிறந்தவர்களுக்கு செவ்வாய் 8 6 ம் அதிபதியாக வருவதால் சகோதரர்களிடையே ஒற்றுமை குறைவு ஏற்படும். இவ்வாறு ஜாதகம் அமையப் பெற்ற ஜாதகர்கள் உங்கள் வீட்டிற்கு அருகில் உள்ள முருகன் கோவிலுக்கு ஒவ்வொரு மாதமும் வளர்பிறை சஷ்டி திதியில் சென்று சகோதரர்கள் ஒற்றுமை வேண்டும் என்று தொடர்ந்து வேண்டுதல் செய்து வந்தால் கடைசி வரை சகோதரர்கள் ஒற்றுமையுடன் வாழ்வார்கள்.
சில நேரங்களில் சகோதரர்களிடையே சண்டை வந்துவிடும். அந்த நேரங்களில் சகோதரர்களில் யார் மூத்தவரோ அவர் திருச்செந்தூர் முருகனை வழிபட்டு வந்தால் சண்டை போட்ட சகோதரர் ஒன்றாகி விடுவார். சகோதர தோஷம் விலகும். சகோதரர்களுக்கு உடல் நிலை சரியில்லை என்றால் நலமாக இருக்கும் சகோதரர் திருச்செந்தூர் சென்று முருகனை வணங்கி வேண்டி வந்தால் சகோதரரின் உடல் ஆரோக்கியம் பெறும்.