ருத்ராட்சத்தின் முகங்களும் பலன்களும்
- 1 முகம் கொண்ட மணிகள் மிக மிக அரிதானவை இவை அதிகம் கிடைக்காது அதனால் இவ்வகை மணிகள் விலை அதிகமாக இருக்கும் இது சாட்சாத் பரத் தத்துவமான பரப்பிரம்ம ஸ்வரூபம் இதன் அதிதேவதை ஸ்ரீ பரமேஸ்வரன் ஆவார் இதன் கிரகம் சூரியன் இதனை அணிவதால் கொலை பாதகங்கள் நீங்கும் பிராமணரை கொன்ற பிரம்மகத்தி தோஷம் கூட பொடிப் பொடியாகும் பின்பு சிவஞானம் ஏற்பட்டு சிவகதி பெறுவர் பரபிரம்ம தோடு ஐக்கியமாக அவர்
- 2 முகம்* த்வி முக ருத்ராட்சம் அதாவது இரு முகமணி இந்த மணிகளும் மிகவும் அபூர்வமானவை இது சிவனும் சக்தியும் கூடிய ஸ்ரீ அர்த்தநாரீஸ்வரர் ஸ்வரூபம் ஆகும் இதன் கிரகம் சந்திரன் இதனை அணிவதால் விலங்குகளை கொன்ற கொலை பாவம் போகும் கொடும் பாவமான பசுவைக் கொன்ற கோஹத்தி தோஷம் கூட விலகும் மேலும் தம்பதியினருக்கு மிகுந்த நெருக்கத்தை உண்டு பண்ணும்
- 3 மூன்று முகமணி இந்த மணிகளும் அரிதானவை ஆகும் சோம சூரிய அக்னி என்னும் சிவனின் முக்கண் வடிவமானவை சூரியன் சந்திரன் அக்னி தேவன் மூவருமே இதற்கு அதிபதிகள் இதன் கிரகம் அங்காரகன் எனும் செவ்வாய் இதனை அணிவதால் பெண்களைக் கொண்ட ஸ்ரீ ஹத்தி தோஷம் கூட விலகும் பல வகைப் பாவங்கள் எரிந்து சாம்பலாகும் மேலும் இதனை அணிவதால் ஆன்மீகத்தில் மிக உயர்ந்த நிலைகளை எளிதாக அடைவான் சிவன் மகிழ்வார் அக்னி தேவர் நீங்கள் நினைத்த அருள் தருவார்
- 4 சதுர்முக ருத்ராட்சம் இந்த மணி பிரம்மதேவன் ஸ்வரூபம் ஆகும் இதன் கிரகம் புதன் அனைத்து துறைகளிலும் உள்ள படைப்பாளிகள் இதனை அணிந்தால் கற்பனை வளமும் படைப்புத் திறனும் மேம்படும் மனித கொலையான நரகத்தி தோஷம் விலகும் மேலும் பல வகை கொலை பாதகங்கள் தீர்ந்து கல்வி கலை திறன்கள் நுண்கலைகள் வளர்ச்சி பெறும்
- 5 பஞ்ச முக ருத்ராக்ஷம் இந்த மணிகள் அனைத்து இடங்களிலும் சாதாரணமாக கிடைக்கக்கூடியவை விலை மிகவும் மலிவு இது காலாக்னி ருத்ர ஸ்வரூபம் ஆகும் அகோரம் தத்புருஷம் வாமதேவம் சத்யோஜாதம் ஈசானம் என்னும் சிவனின் ஐந்து முகங்கள் இதற்கு அதிதேவதை இதன் கிரகம் குரு இதனை அணிவதால் மாமிசம் முதலான உண்ணத் தகாத உணவுகளை உண்ட பாவம் தீரும் பலவகை பாபங்கள் நசிந்து சிவரூபம் கிடைக்கும் உண்ணும் உணவில் உள்ள விஷ குற்றங்கள் விலகும் மேலும் சிவனின் பக்தி பெருகும்
- 6 சண்முக ருத்ராட்சம் இந்த மணிகள் சிவனின் மகனான சண்முகர் அம்சமாகவே கருதப்படுகிறது இதன் கிரகம் சுக்கிரன் இவ்வகை மணிகள் அணிந்துகொண்டாள் தமிழ் கடவுளான முருகன் அருள் பெருகும் பிராமணர்களை கொன்ற பிரம்மகத்தி கொலைப்பழி பாவங்கள் நீங்கி அனைத்திலும் வெற்றி கிட்டும் புகழ் பெருகும் புத்தி தெளிவு மெய்ஞானமும் பரிசுத்தமும் வாய்க்கும்
- 7 சப்த முக ருத்ராட்சம் இவ்வகை மணிகள் அரிதானவை பிரம்மதேவன் கட்டளையிட்டாள் கீழேழு உலகங்களை அதலம் விதலம் சுதலம் தராதலம் ரசாதலம் மகா தலம் பாதாளம் என்னும் சப்த லோகங்களில் உள்ள நாகர்களின் தலைவனாக இருந்து ஆயிரம் தலைகளோடு கூடி பூமியைத் தாங்கிய ஆதிசேஷன் அம்சம் ஆனவை இவ்வகை மணிகளை அணிவதால் பசுக் கொலை செய்த பாவமும் போகும் பிறர் பொருளைத் திருடி பாபங்கள் விலகும் மேலும் சப்த மாதர்களின் சப்த கன்னிகளின் பேரருள் கிட்டும் நாக தோஷங்கள் நிவர்த்தியாகும் கல்வி நுண்கலைகள் மேம்படும் யோக சக்திகள் கைவரும் சிலர் சப்த மாதர்கள் சப்த கண்ணிகள் கூட இதற்கு பிரதி தேவதை என்பார்கள்
- 8 அஷ்ட முக ருத்ராட்சம்* 8 முகங்கள் கொண்ட ருத்ராட்சம் பணிகள் மிகவும் அரிதானவை எளிதில் கிடைக்காத இவர்கள் ,ஸ்ரீ பல்லாளேச கணபதி, ஸ்ரீ வரத கணபதி ஸ்ரீ சிந்தாமணி கணபதி ஸ்ரீ மயூரேசர் கணபதி ஸ்ரீ சித்தி கணபதி ஸ்ரீ மகா கணபதி ஸ்ரீ விக்னேச கணபதி ஸ்ரீ கிரிஜாத்மஹ கணபதி என்ற அஷ்ட கணபதி ஸ்வரூபம் இதன் கிரகம் ராகு இந்த எட்டு முக ருத்ராட்சத்தை அணிந்து கொண்டால் அஷ்ட வசுக்களின் ஆசிகள் கிட்டும் குருவைக் ஒன்று குரு பத்தினியை தீண்டிய கொடும் பாவங்களும் விலகும் புண்ணியம் ஏற்படும் தங்கம் திருடிய குற்றங்கள் நீங்கும் அஷ்டமாசித்திகளும் வாய்க்கும் அஷ்டலட்சுமிகளின் பேரருள் கிட்டும் பல வகையில் வரும் காரியத் தடைகள் அகலும் கங்கை தேவி மகிழ்ந்து அருள் புரிவாள் தொழில் சிறப்படையும்.
இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில் பாப்போம்.