நம் உடலில் அரிப்பு, தடிப்பு, சிறு புண்கள்,
நமைச்சல் போன்றவை குணமாக
அரிப்பு குறைய
சுடுசாதத்தையும்,மஞ்சளையும் அரைத்து அரிப்பு உள்ள இடத்தில் தடவி வர அரிப்பு குறையும்.
உடலில் அரிப்பு, தடிப்பு குறைய
நிலாவாரை இலை, கடுக்காய்த் தோல் இரண்டையும் எடுத்து தண்ணீரில் கலந்து காய்ச்சி வடிகட்டிக் காலை ஒருவேளை மட்டும் குடித்து வந்தால் நீர் மயமாய்ப் பேதி உண்டாகும்.இதனால், உடலில் ஏற்படும் அரிப்பு, தடிப்பு குறையும்.
அரிப்பு குறைய
திருநீற்றுப் பச்சிலை சாற்றுடன் கற்பூரவல்லிச் சாறு சேர்த்து தடவி வர அரிப்பு குறையும்.
அரிப்பு குறைய
மக்காச்சோளம் மற்றும் ஓட்ஸ் எடுத்து தனித்தனியாக பொடி செய்து சிறிது நீர் விட்டு ஒன்றாக கலந்து அரிப்பு இருக்கும் இடத்தில் தடவி சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவி வந்தால் தோல் அரிப்பு குறையும்.
அரிப்பு குறைய
அரிப்பு ஏற்படும் இடங்களில் தேங்காய் எண்ணெயில் எலுமிச்சைச்சாறு கலந்து தடவி வந்தால் அரிப்பு குறையும்.
அரிப்பில் இருந்து விடுபட
மாதுளம் பழச்சாறை புழுவெட்டு உள்ள இடத்தில் தேய்த்து வர அரிப்பில் இருந்து விடுபடலாம்.
அரிப்பு,சிறுபுண்கள் போன்ற தொல்லைகளில் இருந்து விடுபட
கீழாநெல்லி இலைகளை அரைத்து உடம்பில் தேய்த்து குளித்து வர அரிப்பு,சிறுபுண்கள் போன்ற தொல்லைகளில் இருந்து விடுபடலாம்.