Type Here to Get Search Results !

Translate

எல்லா விதமான பிரச்சனைகளையும் தீர்க்கும் எளிய பரிகாரங்கள் !!


எளிய பரிகாரங்கள்
எளிய பரிகாரங்கள் 

எல்லா விதமான பிரச்சனைகளையும் தீர்க்கும் எளிய பரிகாரங்கள் !!

எல்லா விதமான பிரச்சனைகள் மற்றும் கஷ;டங்களை போக்கும் எளிய முறையில் பலன் தரக்கூடிய பரிகாரங்கள் உள்ளன. அவற்றில் சிலவற்றை பார்க்கலாம்.

வாழை மரத்தை வாசலில் கட்டுவார்கள். இதற்கு காரணம் வாழைக்கு திருஷ;டி தோஷங்களை ரூடவ்ர்த்துக் கொள்ளும் குணம் உண்டு என்பதுதான்.

கெட்ட எண்ணங்களை திசை திருப்புவதற்கு பெரிய முகம் பார்க்கும் கண்ணாடியை வரவேற்பரையில் அல்லது வீட்டின் உள்வாசலில் வைக்கலாம்.

மீன்தொட்டி வைத்து அதில் கருப்பு, சிகப்பு மீன்களை வளர்க்கலாம். வாசலில் கண் திருஷ;டிக்கு கணபதி படத்தையும் மாட்டி வைக்கலாம்.

வாசலில் கற்றாழை, சப்பாத்திக்கள்ளி, முள் அதிகம் உள்ள செடிகள், மஞ்சள் ரோஜா செடி ஆகியவற்றை வளர்க்கலாம். ஆகாச கருடன் என்று ஒரு வகை கிழங்கு உள்ளது. அதை வாங்கி மஞ்சள், சந்தனம், குங்குமம் வைத்து கருப்பு கம்பளி கயிற்றில் கட்டி வீட்டின் வாசலில் தொங்க விடலாம். அவ்வாறு செய்தால் கண் திருஷ;டி விலகும்.

அமாவாசை, பௌர்ணமி, அஷ;டமி மற்றும் நவமி போன்ற நாட்களில் காலை, மாலை இருவேளையும் சாம்பிராணி பொடியுடன், கருவேலம்பட்டை பொடி, வெண் கடுகுத்தூள் ஆகியவற்றை கலந்து வீடு, கடை அலுவலகத்தில் புகை காட்ட திருஷ;டியும், தீய சக்திகளும் வெளியேறும்.

வியாபாரத் தலங்களில் திருஷ்டி நீங்க எலுமிச்சம்பழத்தை அறுத்து ஒரு பகுதியில் குங்குமத்தை தடவியும், மற்றொரு பகுதியில் மஞ்சள் பொடியைத் தடவியும் வைக்கலாம். இதை ஒவ்வொரு செவ்வாய்க்கிழமை அன்றும் செய்து வருவது நலம் தரும். பழத்தை மாற்றும்போது முதலில் வைத்த பழத்தை மூன்று முறை கடையை சுற்றி தெருவில் வீசிவிடவும்.

வாரம் ஒருமுறை கல் உப்பை குளிக்கும் தண்ணீரில் கலந்து குளித்து வர திருஷ;டியால் ஏற்படும் உடல் அசதி, சோம்பல் நீங்கும். குறிப்பாக அவரவர் பிறந்தக்கிழமை அல்லது செவ்வாய்க்கிழமையில் இவ்வாறு குளிக்கலாம்.

முடக்கற்றான், பச்சை கற்பூரம், கஸ்தூரி மஞ்சள் மற்றும் ஜவ்வாது ஆகியவைகளை சேர்த்து அரைத்து அந்தப் பொடியை பசு கோமியத்தில் கரைத்து வீட்டிலோ, வியாபார ஸ்தலத்திலோ, தெளிக்க தீய சக்திகள் மற்றும் கண் திருஷ்டி நீங்கி செல்வ செழிப்பு பெறலாம்.


கடன் தொல்லை போன்றவை இருந்தால், விநாயகரின் ஆலயத்தில் அவர்களின் பெயரில் அர்ச்சனை செய்து, தேங்காய் எண்ணெயையும், தன் குலத்தை காக்கும் குலதெய்வத்திற்கு பிடித்தமான விளக்கெண்ணையும் ஒன்றாக கலந்து, அர்ச்சனை செய்த தேங்காயில் ஊற்றி தீபம் ஏற்றினால் பிரச்சனைகள் விலகும். நம்முடைய முன்னேற்றம் தேங்காமல் விருத்தியாகும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad