தூப வழிபாடு... ஆன்மிக ரீதியாகவும்... அறிவியல் ரீதியாகவும்... தெரிஞ்சுக்கலாம் வாங்க...!!
மன அமைதி தரும் தூபம்..!!
👉தூபம் தெய்வீக மணத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. எவ்வாறு இசையால் மனதை ஒரு நிலைப்படுத்தவும், அமைதிப்படுத்தவும் முடிகிறதோ அதுபோலவே தூபத்தின் நறுமணத்தினால் மனதை ஒரு நிலைப்படுத்த முடியும்.
👉தினமும் நாம் செய்யும் வழிபாடுகளிலும், ஆலய வழிபாடுகளிலும் தூபத்துக்கு மிக முக்கியமான பங்கு உண்டு. இந்த தூப வழிபாடு குறித்து நம் முன்னோர்கள் நிறைய சொல்லியிருக்கிறார்கள்.
👉வீட்டில் தொடர்ந்து நோய்கள் வந்த வண்ணம் இருந்தாலோ, எப்போது பார்த்தாலும் வீட்டில் சண்டை சச்சரவு என்று இருந்தாலோ தூப வழிபாடு அவற்றை நீக்கும் என்கிறார்கள் பெரியோர்கள். காரணம், நேர்மறை எண்ணங்களை உருவாக்கவல்லது தூபம்.
👉ஆன்மிக ரீதியில் தூபம், தீய சக்திகளிடமிருந்து நம்மை காக்கிறது. அறிவியல் ரீதியாக, தூபம் சிறிய பூச்சிகள் மற்றும் கிருமிகளிடமிருந்து நமக்கு பாதுகாப்பு அளிக்கிறது. மேலும் மனம், உடல் மற்றும் ஆன்மாவின் ஆரோக்கியத்திற்கு உதவுகின்றன.
👉தியானத்தில் ஒருவர் அமர்கின்றபோது அவருடைய மனம் உடனடியாக ஒரு நிலையில் குவிந்து ஆழமான தியான நிலைக்கு செல்ல தூபம் தூண்டுதலாக இருக்கிறது. மேலும் அறிவியல் ரீதியில், சில குறிப்பிட்ட மூலிகைகளை கொண்டு தூபம் இடுவதால் தலைவலி, மன அழுத்தம் ஆகியவை நீங்குகின்றன.
👉பல வகையான மூலிகைகள் மற்றும் மூலப்பொருட்களை கொண்டு தூபங்கள் தயாரிக்கப்படுகின்றன. தரமான தூபங்களை நாம் பயன்படுத்தினால் அவை ஆஸ்துமா போன்ற தீராத நோய்களை சீராக்க கூட உதவிகரமாக அமையும்.
👉தூபம் என்றாலே நம் நினைவிற்கு வருவது சாம்பிராணி தான். சாம்பிராணி கொண்டு தூபம் போடுவதால் நமக்கும், நம் வீட்டிற்கும் ஏற்பட்டிருக்கும் கண் திருஷ்டி, நம் மீதான பிறரின் பொறாமை உள்ளிட்டவை நீங்கும்.
👉சாம்பிராணி போடும்போது அதில் எதை எல்லாம் சேர்த்து தூபமிட்டால் என்னென்ன நன்மை உண்டாகும்?
👉தூதுவளை சேர்த்து தூபமிடும்போது வீட்டில் இறைவனின் அருள் நிலைத்து, நிறைந்திருக்கும்.
👉சாம்பிராணியில் சந்தனத்தை சேர்த்து தூபமிட்டால் மகாலட்சுமி கடாட்சம் ஏற்படும்.
👉அருகம்புல் பொடியை சாம்பிராணியில் சேர்த்து தூபமிடும்போது சகல தோஷங்களும் நீங்கும்.
👉சாம்பிராணியுடன் வெட்டிவேரை போட்டு தூபமிட்டால் நினைத்த காரியம் வெற்றி அடையும்.
👉சாம்பிராணியில் வேப்பிலையை போட்டு தூபமிட்டால் பல நோய்களிலிருந்து நிவாரணம் பெறலாம்.
👉சாம்பிராணியில் ஜவ்வாது போட்டு தூபமிட்டால் திடீர் அதிர்ஷ்டம் ஏற்படும்.
👉சாம்பிராணியில் காய்ந்த துளசியை போட்டு தூபமிடும் போது செயல்களில் வெற்றி உண்டாகும். திருமணத்தடை நீங்கும்.
👉சாம்பிராணியில் கரிசலாங்கண்ணி பொடியை தூவி தூபமிட்டால் மகான்களின் ஆசீர்வாதம் கிடைக்கும்.
👉சாம்பிராணியில் நன்னாரி வேர் பொடியை சேர்த்து தூபமிட்டால் சகல ஐஸ்வர்யங்களும் உண்டாகும்.
👉சாம்பிராணியில் மருதாணி இலைப் பொடியை சேர்த்து தூபமிடும் போது மகாலட்சுமி அருள் கிடைக்கும்.