பண விரயம்.. கடன் பிரச்சனை.. தொழில் முடக்கத்திற்கு தீர்வு தரும் தாமரை மணிமாலை.
தீராத கடன் பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் தாமரை மணிமாலை..!!
மனிதர்களாக பிறந்த ஒவ்வொருவருக்குமே கட்டாயம் பணத் தேவை இருக்கின்றது. பணம் பல நேரங்களில் பலவிதமான அனுபவங்களை நமக்கு உணர்த்திவிடும். வாழ்க்கை என்றால் என்ன என்பதை காசு இருக்கும்போது நாம் கற்றுக் கொள்வதைவிட, காசு இல்லாத போது கற்றுக்கொள்ளும் பாடம் தான் நிறையவே இருக்கும்.
பணத்தின் தேவை ஒருபக்கம் இருக்க, மறுபக்கம் வாங்கிய கடனை அடைக்க முடியாமல் பலரும் திணறி வருகின்றனர்.
கடன்பட்டார் நெஞ்சம் போல் கலங்கி நின்றான் இலங்கைவேந்தன் என்ற பழமொழிக்கேற்ப கடன் பிரச்சனையால் பாதிக்கப்படாதவர் என யாருமே இருக்கமுடியாது. பணத்தை சம்பாதிக்க வேகமாக ஓடி கொண்டிருக்கும் நாம், இந்த இடத்தில்தான் ஓர் விஷயத்தை மறந்து விடுகிறோம். பணத்தை ஈர்க்கும் பொருட்களில் ஒன்றான தாமரை மணிமாலையை பயன்படுத்தி வருவதன் மூலம் பணத்தை எளிதாக ஈர்த்து கொள்ளலாம்.
- நிரந்தர வேலை இல்லாதவர்கள்..
- பல தொழில் முயன்றும் நிலையான தொழில் இல்லாதவர்கள்..
- தொழிலில் அடிக்கடி இழப்பை சந்திப்பவர்கள்..
- சொத்து அமையாதவர்கள்..
- வீடு கட்ட முடியாதவர்கள்..
- உத்தியோகத்தில் தொடர்ந்து பிரச்சனையை சந்திப்பவர்கள்..
- தாமரை மாலையை நம்பிக்கையுடன் பயன்படுத்தி வருவதன் மூலம் நீங்கள் எதிர்பார்க்கும் பலனை நிச்சயம் பெறலாம்.
லட்சுமிதேவி தாமரையில் வசிப்பதால் தாமரை விதைகளில் செய்யப்பட்ட தாமரை மணிமாலை வைத்திருப்பது லட்சுமிதேவியை நம்முடைய வீட்டிற்கு வரவழைக்க செய்யும். அளப்பரிய நேர்மறை சக்தியை கொண்ட தாமரை மணிமாலை பணம் ஈர்க்கும் மாலையாக மக்களுக்கு நல்லவற்றை அள்ளித்தருகிறது.
தாமரை மணிமாலை ஒரு வீட்டில் இருக்கிறது என்றால் அனைத்து ஐஸ்வர்யங்களும் அதிக அளவில் கிடைக்கும் என்பது அனுபவப்பூர்வமாக கண்டறியப்பட்ட உண்மை. பழங்காலம் முதல் தாமரை மணிமாலையை பயன்படுத்தி வந்திருக்கிறார்கள் என்பது கவனிக்கத்தக்கது. தெய்வீக அம்சம் பொருந்திய இந்த பணம் ஈர்க்கும் மாலை பல பிரச்சனைகளுக்கு தீர்வாகிறது.
குடும்பத்தில் ஏற்படும் பிணக்குகள், ஒற்றுமை இல்லாதது, சகோதரர்களுக்கு இடையேயான பிரச்சனை, பொருளாதாரத்தில் நலிவு, வேலை கிடைக்காமல் தொடர்ந்து தடை ஏற்பட்டு வருவது போன்ற பல பிரச்சனைகளுக்கு தீர்வு அளிக்கக்கூடியது.