Type Here to Get Search Results !

Translate

லட்சுமி தேவி உங்கள் வீட்டில் வாசம் செய்ய வேண்டுமா?

Astro Jothidam

லட்சுமி தேவி உங்கள் வீட்டில் வாசம் செய்ய வேண்டுமா?

ஒவ்வொருவரும் தன் வீட்டில் செல்வமும், வளமும் நிறைந்ததாக இருக்க வேண்டும் என நினைப்பது வழக்கம். பண வரவும், உடல் ஆரோக்கியமும் அனைத்து பெற லட்சுமி தேவியை வழிபட வேண்டும்.

நமது அன்றாட பழக்க வழக்கங்களைப் பொறுத்தே நமது இல்லங்களில் லட்சுமி தேவி குடிகொள்வது அமைகிறது.

நமது வீட்டில் லட்சுமி தேவி குடிகொள்ள நாம் என்ன செய்யலாம், என்ன செய்யக்கூடாது?

என்ன செய்யலாம்?
  • தினசரி எழுந்ததும் முதலில் நமது உள்ளங்கைகள் அல்லது குழந்தையின் முகம் அல்லது சாமி படங்களை பார்க்கலாம்.
  • வீட்டில் நாள்தோறும் குறைந்தபட்சம் ஒருமுறையாவது விளக்கேற்றி சாமி கும்பிட வேண்டும்.
  • வாரத்திற்கு இருமுறையாவது வீட்டையும், பூஜையறையையும் சுத்தம் செய்ய வேண்டும்.
  • பூஜையறையில் சாமி படங்களுக்கு தினந்தோறும் பூக்களை படைக்க வேண்டும்.
  • வீட்டின் கதவு மற்றும் நிலைகளில் குங்குமம், மஞ்சள் வைக்க வேண்டும்.
  • பூஜை முடிந்ததும் பெண்கள் நெற்றியிலும், மாங்கல்யத்திலும் குங்குமம் கட்டாயம் வைத்துக்கொள்ள வேண்டும்.
  • வலம்புரிச் சங்கு வைத்திருக்கும் வீட்டில் வற்றாத செல்வம் வந்து சேரும். அந்தச் சங்கை நாள்தோறும் பயன்படுத்த வேண்டும்.
  • வீட்டில் துளசி மற்றும் வேப்ப மரம் வளர்ப்பது நல்லது.
என்ன செய்யக்கூடாது?
  • விளக்கேற்றியப்பின் வீடு பெருக்கக்கூடாது. வீடு பெருக்கும்போது செல்வத்தையும் சேர்த்து பெருக்குவது போலாகும்.
  • மாலையில் துளசிக்கு நீர் ஊற்றக்கூடாது. இதனால் துரதிர்ஷ;டம் உண்டாகும்.
  • மாலை சூரியன் மறைந்த பின், தலைமுடியை வாருவதால் உதிரும் முடிகள் தீய சக்திகளை ரூடவ்ர்ப்பவை. ஆகவே, வீட்டிற்குள் மாலை வேளையில் தலைமுடியை சீவக்கூடாது.
  • மாலையில் நகம் வெட்டுதல் வீட்டில் நேர்மறை சக்தியை குறைக்கும் சக்தி உண்டு. இது செல்வத்தை குறைக்க வழி செய்யும்.
  • மாலை வேளையில் அரசமரத்தை வலம் வரக்கூடாது.
  • கோவிலுக்கு கொண்டு செல்லும் எண்ணெயை கோவில் விளக்கிலேதான் ஊற்ற வேண்டுமே தவிர வேறொருவர் ஏற்றி வைத்த விளக்கில் ஊற்றக்கூடாது.
  • விளக்கேற்றிய பிறகு அடுத்தவர்களுக்கு பால், மோர், உப்பு, அரிசி, சுண்ணாம்பு போன்ற வெள்ளைப் பொருட்கள் கொடுப்பதைத் தவிர்ப்பது நல்லது.
  • விளக்கேற்றிய பிறகு துணி துவைக்கக்கூடாது.
  • தீபத்தில் மகாலட்சுமி வாசம் செய்கிறாள் என்பது ஐதீகம். எனவே, ஒரு வீட்டில் இருந்து மற்றொரு வீட்டிற்கு தீபத்தை கொண்டு செல்லக்கூடாது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad