Type Here to Get Search Results !

Translate

வீட்டில் பணப்புழக்கம் அதிகரிக்க செய்ய வேண்டிய எளிய பரிகாரங்கள்


பண புழக்கம் அதிகரிக்க
பண புழக்கம் அதிகரிக்க 

 

வீட்டில் பணப்புழக்கம் அதிகரிக்க செய்ய வேண்டிய எளிய பரிகாரங்கள் !!

இன்றைய வாழ்வில் மனிதருக்கு முக்கிய தேவை பணம் மட்டுமே. பணம் இல்லாமல் ஒரு மனிதன் வாழ்வதென்பது அரிது. அந்த பணப்புழக்கம் அதிகரிக்க சில பரிகாரங்களை இங்கே பார்ப்போம்.

செல்வத்தை அள்ளித்தருவதில் மகாலட்சுமிக்கு ரூடவ்டு இணை இல்லை என்று தான் கூறுவார்கள் நம் முன்னோர்கள்.

செல்வத்தினை சம்பாதிப்பதும், அதனை நம்மிடம் நிலைக்க வைப்பதும் வாழ்வில் ஒரு மிகப்பெரிய சவாலாகவே தான் உள்ளது.

பணப்புழக்கம் அதிகரிக்க செய்யும் சில பரிகாரங்கள் :

வடகிழக்கு மூலையில் குடிக்கும் நீரை வைத்து அதில் எலுமிச்சை ஒன்றை போட்டு வைக்கவும். தொடர்ந்து இரண்டு மாதங்கள் செய்து வந்தால் பற்றாக்குறை நீங்கி செல்வம் கொழிக்கும்.

முக்கியக்காரியமாக தொழில் விஷயமாக வெளியே செல்லும்போது அருகம்புல் நுனி ஒன்றையோ, திருநீற்றுப்பச்சிலை ஒன்றையோ பறித்து பையில் வைத்துக்கொள்ள, சென்ற காரியம் நிச்சயம் வெற்றிகரமாக முடியும்.

மகாலட்சுமி படத்திற்கு தினமும் காலை, மாலை நெய், தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய் ஏதாவதொன்றில் இரண்டு திரி போட்டு விளக்கு ஏற்றி வீடு, கடை முழுவதும் சாம்பிராணி புகை காட்டி வருவது பண விஷயத்தில் சிறந்த வசியமாகும்.

சாம்பிராணி, மருதாணி விதை, வெண்கடுகு கலந்து வீட்டில், வியாபார ஸ்தலத்தில் தூபமிட தீய சக்திகள், கண்திருஷ;டி, தோஷங்கள் நீங்கி தொழில் முன்னேற்றம் அடையும். அப்போது தான் மகாலட்சுமி நம்மிடத்தில் நடமாடுவாள்.

முக்கியமான காரியங்கள் பணம் சம்பந்தமான விஷயங்களுக்கு செல்லும்போது எலுமிச்சம் பழம் ஒன்றை ஓம் ஸ்ரீம் ;ரீம் ஸ்ரீம் சக்தியே அருள்வாய் போற்றி ஓம் என ஆறு முறை உச்சரித்து உடன் வைத்துக்கொள்ளவும்.

பசுமையான வெற்றிலை ஒன்றை எந்த நல்ல காரியங்கள், பணம் சம்பந்தமான காரியங்கள் போன்றவற்றிக்கு செல்லும் போதும் உடன் வைத்துக் கொள்ளவும்.



கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad