![]() |
பண கஷ்டம் நீங்க |
இன்றைய காலகட்டத்தில் அனைவருக்கும் பணம் மிகவும் அவசியமான ஒன்றாகி விட்டது. சிலர் நன்றாக சம்பாதிப்பார்கள். ஆனால், அவர்களிடம் பணம் தங்காமல் விரயமாகி விடும்.
இன்னும் சிலருக்கு எவ்வளவு தான் சம்பாதித்தாலும் கடன் தொல்லை மிகவும் அதிகமாக இருக்கும். இந்த நிலை மாறுவதற்கு மேற்கொள்ள வேண்டிய பரிகாரங்களைப் பற்றிப் பார்ப்போம்.
காஞ்சிபுரத்தில் அமர்ந்து அருள்பாலித்து வரும் காமாட்சி அம்மனுக்கு, ஒரு வளர்பிறை சித்திரை நட்சத்திரத்தில் பட்டுப்புடவை சாற்றி வழிபடுபவர்களுக்கு பண கஷ்டம் தீர்ந்து நிம்மதியான வாழ்க்கை அமையும்.
காலை வேளையில் குளித்து முடித்தவுடன் சிறிது சர்க்கரை எடுத்து வீட்டு வாசல் வெளியே தூவி வரவும். இது சிறு பூச்சிகள் மற்றும் எறும்புகள் உண்ண உணவாகும். இவைகள் உண்ண உண்ண உங்கள் கஷ்டங்கள் சிறிது சிறிதாக விலகி நன்மைகள் உண்டாகும்.
வியாழக்கிழமை அன்று கொஞ்சம் குங்குமம் வாங்கி அதை வெள்ளிக்கிழமையன்று அம்பாள் அல்லது தாயார் சன்னதியில் கொடுத்து வரவும். தொடர்ந்து 11 வாரங்கள் இவ்வாறு செய்து வந்தால் கடன் சுமை குறையும்.
கோதுமையை அரைக்க கொடுக்கும் பொழுது அதில் 7 துளசி இலைகள் மற்றும் சிறிது குங்குமப்பூ சேர்த்து அரைக்க கொடுத்து பின் வாங்கினால், அந்த மாவு வீட்டில் உள்ள வரை பண பிரச்சனைகள் குறைந்து நன்மைகள் உண்டாகும்.
தொடர்ந்து 5 வெள்ளிக்கிழமைகள் மகாலட்சுமி சன்னதியில் மல்லிகை மாலை சாற்றி வழிபட்டாலும் பண கஷ்டங்கள் தீரும்.
மாங்கல்ய தானப் பலன்கள் தான் சில வகையான ஐஸ்வர்ய தோஷங்களை தீர்க்கும் சக்தி பெற்றவை. ஆகவே, பண கஷ;ட நிவர்த்திக்கு மாங்கல்யம் மற்றும் மாங்கல்ய சரடு தானம் பெரிதும் துணை புரியும்.
செந்தாமரையில் அமர்ந்துள்ள தெய்வங்களை வழிபட பணம் பெருகும். சுத்தமான நீரில் வாசனை திரவியம் கலந்து இருவேளையிலும் லட்சுமி மந்திரம் கூறியபடி தெளித்திட செல்வம் சேரும்.
இந்துராணி மந்திரம் ஜெபம் செய்ய ராஜயோக வாழ்வு வாழ பணம் கிடைக்கும். வியாழக்கிழமையன்று குரு ஓரையில் தட்சணாமூர்த்தி வழிபாடு செய்ய செல்வம் கொழிக்கும்.