Type Here to Get Search Results !

Translate

இல்லற வாழ்க்கையில் பிரச்சனைகள் நீங்க இந்த பரிகாரம் செய்யுங்கள் !!

 

இல்லற வாழ்க்கை
இல்லற வாழ்க்கை 

இல்லற வாழ்க்கையில் பிரச்சனைகள் நீங்க இந்த பரிகாரம் செய்யுங்கள் !!

ஒருவருக்கு இல்லற வாழ்க்கை மகிழ்ச்சியாக அமைய வேண்டும் என்றால், அவருடைய ஜாதகத்தில் 7-ம் இடம் என்னும் களத்திர ஸ்தானம் சிறப்பாக அமைந்திருக்கவேண்டும். ஒருவேளை ஜாதகத்தில் களத்திர தோஷம் இருந்தால், திருமணம் நடைபெறுவதில் தாமதமும், திருமணத்திற்கு பிறகு இல்லற வாழ்க்கையில் சில குறைபாடுகளும் ஏற்படக்கூடும்.

குரு, சுக்கிரன் : இவர்களை வழிபாடு செய்வதன் மூலம், நல்ல கணவன் அல்லது மனைவி அமைவர். இனிய இல்லறம் ஏற்படவும் வாய்ப்பு உண்டு.

சூரியன் :

7-ல் அமர்ந்து நீசம் பெற்றிருப்பின், திருமணம் நடைபெறுவதில் தாமதம் ஏற்படும். இதற்கு அந்த ஜாதகர், சூரியனை வழிபாடு செய்ய வேண்டும். சூரியனுக்கு வழிபாடு செய்யும்போது, ஆதித்ய ;ருதயம் படிக்கலாம்.

சந்திரன் :

சந்திரனுக்கு வலிமை குன்றி, அவர் 7-ல் இருப்பின், தாமதத் திருமணம் மற்றும் இல்லற வாழ்க்கையில் குறைகள் ஏற்படும். பௌர்ணமிதோறும் அம்மனை வழிபட்டு வந்தாலும் நற்பலன்கள் கிடைக்கும்.

புதன் :

புதன் 7-க்கு உடையவராகி, பலம் குன்றி ஜாதகத்தில் இருந்தால், அதுவும் தோஷம் தான். அதற்கு, ஜாதகர் புதனை வழிபட்டு வருவதுடன், மகா விஷ;ணுவை வழிபாடு செய்ய வேண்டும். விஷ;ணு சஸ்ரநாம பாராயணமும் செய்யலாம்.

குரு :

குருபகவான் 7-ல் அமர்ந்திருந்தால், அதிக தோஷம் ஏற்படுகிறது. இதற்கு தட்சிணாமூர்த்தியை வழிபட்டு வந்தால், நல்லபடியாக திருமணம் நடைபெறும்.

செவ்வாய் :

செவ்வாயால் ஜாதகத்தில் தோஷம் ஏற்பட்டு இருப்பின், செவ்வாயை வணங்குவதுடன், சுப்ரமணியரையும் வணங்கி, சஷ;டி கவசம் படித்துப் பயன் பெறலாம்.

சுக்கிரன் :

சுக்கிரனால் ஜாதகத்தில் தோஷமிருப்பின், சுக்கிரனையும், இந்திரனையும், மாலட்சுமியையும் வழிபட்டு வந்தால், தடைகள் விலகி, நல்ல வரன் அமைந்து, திருமணம் நடைபெறும். இல்லற வாழ்க்கை சிறப்பாக அமையும்.

சனி :

சனி 7-ல் இருந்தாலும், 7-க்கு உடையவருடன் சேர்ந்தாலும், 7-ம் வீட்டைப் பார்த்தாலும் திருமணம் நடைபெறத் தடையும் தாமதமும் ஏற்படும். இதற்கு சனிபகவானை வணங்கி வர வேண்டும். சனி மந்திரம், சனி காயத்ரி கூறி வழிபடவும்.

ராகு அல்லது கேது :

ராகு அல்லது கேது 7-ல் இருந்தாலும், லக்னத்துக்கு 2-ம் வீடு, 8-ம் வீடு இவற்றில் இருந்தாலும் நாகதோஷம் ஏற்படுகிறது. அதன் காரணமாக திருமணம் நடைபெறக் காலதாமதம் ஆகும். இதற்கு ராகுகேதுவை வழிபடுவதுடன், சர்ப்பேஸ்வரன், விநாயகர், துர்க்கை அம்மன் ஆகியோரையும் வழிபாடு செய்து வந்தால், சங்கடங்கள் விலகி, நல்ல திருமண வாழ்க்கை அமையும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad