உணவு சாப்பிடும் பொது கவனிக்க வேண்டியவை
வாழை புன்னை மா பலா இலைகள் சிறந்தது ஆயினும் உணவு படைப்பதற்கு வாழை இலையை மிகச்சிறந்தது
வாழையிலையில் அடியில் சிறிது அரிந்து விட்டு கழுவிவிட்டு இலையைப் போட வேண்டும் சாப்பிடுபவர்களின் வலது கைப்பக்கம் இலையின் அடிப்பாகமும் இடது கைப்பக்கம் நுனிப்பாகம் இருக்கும்படி இலை போட வேண்டும்
எதையும் கையால் படைக்கக் கூடாது அப்பளம் போன்றவற்றை கையை கழுவிவிட்டு போட வேண்டும்
சோறு கறி முதலியவற்றை மண்பாண்டத்தில் வைத்தோ அல்லது அடுப்பில் வைத்த பாத்திரத்தை வைத்தோ படைத்தல் கூடாது
வீட்டுக்கு வந்து பொது மருகளையும் நோயாளிகளையும் கர்ப்பிணிப் பெண்களையும் குழந்தைகளையும் வயதானவர்களையும் முதலில் சாப்பிடச் சொல்ல வேண்டும்
சாப்பிடும் போது நீர் குடிக்கக் கூடாது உண்ட பின்பு குடிக்க வேண்டும்
உணவு அருந்திய பின் குளிக்கக் கூடாது மிகவும் தேவைப்பட்டால் இரண்டு மணி நேரம் விட்டு குளிக்கலாம்
ஒருவர் தலையில் முடிந்த பூவைத் தன் தலையில் வைக்க கூடாது தலையில் சூடிய மலரை தானே எடுத்துதெரியக்கூடாது
பெண்கள் விரதம் இருக்க தேவையில்லை கணவனுடைய அனுமதி பெற்றே விரதமிருக்க வேண்டும் திருமணம் ஆகாத பெண்கள் ருக்மணி கல்யாணம் சீதா கல்யாணம் இவற்றைப் பாராயணம் செய்தால் திருமணம் கூடிவரும்
வேள்வி தர்மசிந்தனை ஆன்மீக ஆர்வம் தவம் வாய்மை மன்னித்தல் கருணை பிறர் பொருளை விரும்பாமை இந்த எட்டும் நாம் பின்பற்ற வேண்டிய நற்குண பாதைகள் ஆகும்