தீபம் ஏற்றுதலின் திசையும் திரியும் எண்ணையின் பலனும்
காலையில் உஷத் காலத்திலும் மாலையில் சூரிய அஸ்தமனத்துக்கு முன்பும் வீட்டில் தீபம் ஏற்ற வேண்டும்
எவர்சில்வர் விளக்கு ஆகாது இரண்டு திரி சேர்த்து முறுக்கி ஏற்றுவது உத்தமம்.
தீபத்தை கிழக்கு திசையிலும் மேற்கு திசையை நோக்கியும் வடக்கு திசை நோக்கியும் ஏற்ற வேண்டும்.
எமனுடைய திசையை ஆதலால் தெற்கே பார்த்து தீபம் ஏற்றக்கூடாது
ஒரு திரி ஏற்றுவோர் எப்போதும் கிழக்கு நோக்கியே இருக்க வேண்டும்
புதிய மஞ்சள் திரி போட்டு விளக்கு ஏற்றினால் செய்வினை பில்லி சூனியம் பேய் பிசாசு அண்டாது
பஞ்சு திரி போட்டு விளக்கேற்றினால் மங்களம் உண்டாகும்
வாழைத்தண்டு திரி போட்டு விளக்கேற்றினால் புத்திர பாக்கியம் உண்டாகும்
பட்டு நூல் திரி போட்டு விளக்கேற்றினால் எல்லாவித சுபகாரியங்கள் நடக்கும்
ஆமணக்கு எண்ணெய் தீபம் ஏற்றினால் அனைத்து செல்வமும் கிடைக்கும்
தேங்காய் இலுப்பை எண்ணெய் தீபம் ஏற்றினால் தேக ஆரோக்கியம் உண்டாகும்
நல்லெண்ணெய் தீபம் ஏற்றினால் எமபயம் அகலும்
தாமரை நூல் திரி ஏற்றினான் அஷ்டலட்சுமி கடாட்சம் ஏற்படும்
நெய் தீபம் ஏற்றினால் சகல சௌபாக்கியமும் உண்டாகும்.
நீர் நிரம்பிய பாத்திரத்தை பூஜை அறையில் வைக்க நல்லது
வெண்கல விளக்கு பாவத்தை தீரும்
அகல்விளக்கு சக்தியைத் தரும்
தீப சரஸ்வதி என்று மூன்று முறையும் தீப லட்சுமி என்று மூன்று முறையும் தீப துர்கா என்று மூன்று முறையும் குல தெய்வத்தை நினைத்து மூன்று முறையும் தீபத்தை பன்னிரண்டு முறை நமஸ்காரம் செய்ய வேண்டும்
தீபத்தை வாயால் ஊதி அணைக்காமல் ஒரு பூவின் காம்பால் அணைக்கவேண்டும்