Type Here to Get Search Results !

Translate

முக்கியமாக பெண்கள் கவனிக்க வேண்டியவை

பெண்கள் கவனிக்க வேண்டியவை


பெண்கள் கவனிக்க வேண்டியவை
  • பெண்கள் கணவன் தூங்கிய பின்பு தூங்கி கணவன் விழிப்பதற்கு முன்பு எழ வேண்டும்
  • சூரிய உதயத்திற்கு முன்பே எழுந்து முற்றத்தில் பெருக்கி சாணம் தெளித்து கோலம் இட வேண்டும்
  • கோலம் இடுவதற்கு மஞ்சள் கலந்த அரிசி மாவு பச்சை இலை பொடி குங்குமம் கலந்த அரிசி மாவு இவற்றால் கோலம் போடவேண்டும் சுபகாரியங்களுக்கு ஒரு கோடும் அசுப காரியங்களுக்கு இரண்டு கோடும் போட்டு கோலம் போடக்கூடாது.
  • பூஜை அறை சமையலறை சாப்பிடும் இடத்தை நாள்தோறும் கழுவுதல் வேண்டும்
  • அமாவாசை பவுர்ணமி கார்த்திகை மாதப் பிறப்பு வெள்ளிக் கிழமை சில விசேஷ தினங்களில் வீடு முழுவதும் கழுவ வேண்டும்
  • மண் பாண்டங்களை குளிக்கும் முன்பு தொடக்கூடாது
  • தாமிர பாத்திரங்களை புளியினாலும் வெண்கலம் பித்தளை பாத்திரங்களை சாம்பலாலும் ஈயப் பாத்திரங்களை சாணத்தினாளும் எவர்சில்வர் பாத்திரங்களை அரப்புப் பொடியினாலும் சுத்தப்படுத்த வேண்டும்


  • குளித்த பின்பு தான் குடிநீர் எடுக்க வேண்டும்
  • தண்ணீர் குடத்தை இடுப்பில் வைத்துக் கொண்டு வரவேண்டும் தோளிலும் தலையிலும் சுமக்கக் கூடாது
  • சூரிய அஸ்தமன சமயமான மாலை நேரங்களில் கைகால் கழுவி விளக்கேற்றி வைக்க வேண்டும்
  • உரல் அம்மி முறம் வாசற்படி உலக்கை இவற்றின் மீது உட்காரக்கூடாது
  • வீட்டு விலக்கான முதல் மூன்று நாட்கள் வீட்டு வேலை ஒன்றும் செய்யக்கூடாது நாலாவது நாளில் கணவனை வணங்கி விட்டு ஐந்தாம் நாள் குளித்துவிட்டு வீட்டுப் பணிகளில் ஈடுபடலாம் அன்று கணவனோடு சேர்வது சிறப்பு

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad