Type Here to Get Search Results !

Translate

எந்த நாட்களில் உப்பு வாங்கினால் லட்சுமி கடாட்சம் பெருகும்?

Astro Jothidam

எந்த நாட்களில் உப்பு வாங்கினால் லட்சுமி கடாட்சம் பெருகும்?

நாம் சாப்பிடும் உணவில் சேர்க்கப்படும் உப்பு எவ்வளவு அவசியம் என்பதை உப்பில்லாத பண்டம் குப்பையிலே என்ற பழமொழி நமக்கு உணர்த்துகிறது.

செல்வங்களுக்கு அதிபதியான லட்சுமி பாற்கடலில் தோன்றியவள்.

லட்சுமி தோன்றிய அந்தக் கடலில் தான் உப்பும் கிடைக்கிறது.

அதனை வெள்ளிக்கிழமை வாங்குவது நல்லது.

இதனால் தான் கடலில் கிடைக்கும் உப்பை லட்சுமியின் அம்சமாக போற்றுகிறார்கள்.

எனவே தான் கிரகப் பிரவேசத்தின் போது புதிய வீட்டிற்கு முதலில் எடுத்துச் செல்லும் பொருட்களாக உப்பு முதன்மை பெறுகிறது.

லட்சுமிக்கு உகந்த நாள் வெள்ளிக்கிழமை ஆகும். அந்த நாளில் லட்சுமிக்கு அம்சமாக விளங்கும் உப்பை வாங்கினால், நமக்கு இரட்டிப்பு பலன் கிடைப்பதோடு, நமது வீட்டிலும் லட்சுமி கடாட்சம் என்றும் நிறைந்து இருக்கும்.

அதனால் உப்பை கல் உப்பாக வாங்கி வீட்டில் வைத்திருப்பது நல்லது.

வீட்டில் பணவரவு அதிகரிக்க, வெள்ளிக்கிழமைகளில் காலை 6.00 மணி முதல் 6.15க்குள்ளும், மதியம் 1.00 மணி முதல் 1.15க்குள்ளும், இரவு 8.00 மணி முதல் 8.15க்குள்ளும் கடையில் உப்பு வாங்கி வரவேண்டும்.

இப்படி வாரா வாரம் சிறிதளவு உப்பு வாங்கி வர, செல்வச் செழிப்பு அதிகரிக்கும். கல் உப்பு மகாலட்சுமியின் அம்சமாகும். எந்த வீட்டினுள் நுழைந்ததும், துர்நாற்றம் இல்லாமலிருக்கிறதோ, நறுமணம் கமழுகிறதோ, அங்கே செல்வச் செழிப்பு அதிகரித்துக் கொண்டே செல்லும்.

உப்பால் மனிதர்களுக்கு கிடைக்கும் பலன்கள் :

குளிக்கும்போது நீரில் உப்பை கலந்து குளித்தால் உங்களை அண்டியிருக்கும் கெட்ட சக்திகள் விலகிப் போவதை கூட உங்களால் உணர முடியுமாம். உப்பு, நெகட்டிவ் எனர்ஜியை வெளியேற்றும் சக்திகொண்டது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad