Type Here to Get Search Results !

Translate

சூரிய தியானம் பகுதி - 2 ,Sun Meditation , தியான பயிற்சி

சூரிய தியானம் ,Sun Meditation
சூரிய தியானம் ,Sun Meditation

சூரிய தியானம் பகுதி - 2


இந்தப் பகுதியும் சூரியனைத் தியானிக்கின்ற வித்யை
பற்றியே கூறுகிறது. ஆனால் மரணத்தைக் கடந்த, உபாசகனை யும் மரணத்தைக் கடத்துவிக்கின்ற தெய்வமாக சூரியனைத் தியானிக்குமாறு இந்த வித்யை உபதேசிக்கிறது. ஏழு பக்திகள் கொண்ட சாம மந்திரம் தியானம் செய்யப்படுகிறது. 'ஹிங்காரம் முதலிய வார்த்தைகளிலுள்ள சொற்களின் எண்ணிக்கையைப் பகுத்துக் காண்பதன் அடிப்படையை வைத்து இந்த வித்யை யின் பலன் கூறப்படுகிறது.

சம எண்ணிக்கையுள்ளதும், உபாசகனை மரணத்தைக் கடத்துவிப்பதுமான ஏழு பக்திகளை இனி தியானம் செய்ய வேண்டும். ஹிங்காரம் மூன்றெழுத்துடன் கூடியது; அவ்வாறே பிரஸ்தாவமும். எனவே அவை இரண்டும் சமம்.

  • ஹிங்காரம்' = மூன்றெழுத்து
  • ப்ரஸ்தாவம் = மூன்றெழுத்து இரண்டும் சமம்.


ஆதி இரண்டெழுத்து. பிரதிஹாரம் நான்கெழுத்து. பிரதிஹாரத்திலிருந்து முதல் எழுத்தை ஆதியுடன் சேர்த்தால் இரண்டும் மூன் றெழுத்துக்கள் உடையவை ஆகின்றன. இவ்வாறு இரண்டும் சமமாகின்றன.

  • ஆதி = இரண்டெழுத்து.
  • ப்ரதிஹாரம் = நான்கெழுத்து
ப்ரதிஹாரத்திலுள்ள 'ப்ர' என்ற முதல் எழுத்தை ஆதியுடன் சேர்க்க வேண்டும். அப்போது,

  • ஆதிப்ரா = மூன்றெழுத்து
  • திஹாரம் = மூன்றெழுத்து

இரண்டும் சமம்.

உத்கீதம் மூன்றெழுத்து. உபத்ரவம் நான்கெழுத்து. உபத்ரவத்தில் ஓர் எழுத்து எஞ்சியுள்ளது. அது உண்மையில் மூன்றெழுத்தே. எனவே எல்லாம்
சமமாகின்றன.

  • உத்கீதம் = மூன்றெழுத்து
  • உபத்ரவம் = நான்கெழுத்து


உபத்ரவத்தில் ஓர் எழுத்து அதிகமாக உள்ளது. ஆனாலும் இதனை மூன்றெழுத்தாகவே கொள்ள வேண்டும். இவ்வாறு எண்ணிக்கை சமமாகிறது. ('' தனியாக உள்ளது.)

நிதனம் மூன்றெழுத்து. இவ்வாறு நிதனமும் மற்ற பக்திகளுடன் சமமாகிறது. இவ்வாறு மொத்தம் 22 எழுத்துக்கள்.

7 பக்திகள்x3 எழுத்துக்கள் = 21; இதனுடன் '' என்ற வ' எழுத்து சேரும்போது 22 எழுத்துக்கள் ஆகின்றன.

சம எண்ணிக்கையுள்ளதும், மரணத்தைக் கடத்துவிப்பதுமான பக்திகளை, அவற்றின் உண்மையை அறிந்து யார் தியானிக் கிறானோ அந்த உபாசகன் 21-ஆல் சூரியனை அடைகிறான். இந்த உலகிலிருந்து எண்ணினால் சூரியன் 21-ஆம் இடத்தில் உள்ளார். எஞ்சியுள்ள 22-ஆம் எழுத்தால் அவன் சூரியனைக் கடந்த உலகை வெல்கிறான். அந்த உலகம் கவலைகளற்றது. அதாவது, ஏழு பக்திகளை இவ்வாறு தியானிப்பவன் சூரியனை வெல்கிறான், சூரியனைக் கடந்த உலகையும் வெல்கிறான்; சூரியனை வெல்கிறான், சூரியனைக் கடந்த உலகையும் வெல்கிறான்.

7 பக்திகளையும் சமமாகப் பிரிக்கும்போது 22 என்ற எண் வந்தது.


இந்த உலகிலிருந்து எண்ணிக்கையைத் தொடங்கினால் சூரியன் 21-ஆம் இடத்தில் இருப்பதாக இந்த மந்திரம் கூறுகிறது. இந்த எண்ணிக்கை கீழ்வருமாறு செய்யப்படுகிறது:

இந்த உலகத்தின் பிரதிநிதிகளாக மாதங்கள், பருவங்கள் மற்றும் உலகங்கள் எடுத்துக்கொள்ளப்படுகின்றன. அதாவது, 12 மாதங்கள் + 5 பருவங்கள் + 3 உலகங்கள் = 20. இந்த உலகிற்கு மேலே அதாவது, 21-ஆம் இடத்தில் சூரியன் உள்ளார்.

21-ஆம் இடத்தை, அதாவது, சூரியனை அடைவதால் அந்த உலகின் இன்பங்களை உபாசகன் பெறுகிறான். 21-ஐக் கடந்து 22-ஐயும் அவன் அடைவதால் சூரிய உலகைக் கடந்த உலகங்களின் இன்பங்களையும் பெறுகிறான்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad