Type Here to Get Search Results !

Translate

எட்டடுக்கு மாளிகையே நம் உடல்!

எட்டடுக்கு மாளிகையே நம் உடல்
எட்டடுக்கு மாளிகையே நம் உடல்


எட்டடுக்கு மாளிகையே நம் உடல்!

மனித உடல் என்பது 8 அடுக்குகளைக் கொண்ட ஓர் அற்புதமான இயந்திரம் .

i. கண், காது, மூக்கு, கை, கால் என உருவத்துடன் தெரியும் ஸ்தூல தேகமே முதல் அடுக்கு – 'Physical Body'

ii. மின்சார அணுக்களைப் பாய்ச்சிய வண்ணம் இந்த ஸ்தூல தேகத்தை இயக்கும்
உயிர் எனப்படும் சூக்கும தேகமே இரண்டாம் அடுக்கு 'Spiritual Body'

iii. ஸ்தூல தேகமாகிய உடலையும் சூக்கும தேகமாகிய உயிரையும் கண்காணிப்பில் வைத்திருக்கும் மனம் என்னும் காரண தேகமே மூன்றாம் அடுக்கு 'Causal Body'

iv. அனுபவங்களை அறிவாகப் பதிந்து வைத்திருந்து அவ்வப்போது மனதிற்கு வழங்கும் புத்தி எனப்படும் மகா காரண தேகமே நான்காம் அடுக்கு. 'Intellectual Body'

V ஒரு மனிதனின் பல பிறவிப் பதிவுகளைப் பதிந்து வைத்திருக்கும் சித்தம் எனப்படும் பரலோக தேகமே ஐந்தாம் அடுக்கு. 'Conscious Body' V.

vi. இந்த 5 அடுக்குகளுக்கும் தலைமையாய் விளங்கும் ஆன்மா எனப்படும் பிரம்ம தேகமே ஆறாம் அடுக்கு 'Super conscious Body'

vii. தெய்வங்கள், தேவதைகள், ஒளி உலகங்கள் என அண்ட சராசரம் முற்றும் வியாபித்து இருக்கும் பர பிரம்ம தேகமே ஏழாம் அடுக்கு 'Cosmic Body'

எட்டாம் அடுக்கு என்பது எல்லாம் வல்ல ஏக இறைவனின் பரிசுத்த வெளி... பேரின்ப உலகம்!... 'Blissful Space'!

{ விளம்பரம் :- சங்க கால முறையில் 100 % துல்லியமாக உங்கள் முழு ஆயுள் ஜாதகம் பார்க்க தொடர்பு கொள்ளவும் - ஜோதிடம் - மைசூர் அரண்மை ஆய்வுக்கு உட்பட்டது. மேலும் தொடர்புக்கு - நக்கீரன் - +917904599321 }

நமக்கு வாய்த்திருக்கும் இந்த ஏழு அடுக்கு தேகத்தின் முதல் அடுக்காகிய ஸ்தூல தேகத்தை மட்டுமே புறக் கண்களால் பார்க்க முடியும். மற்ற ஆறு தேகங்களைப் புறக் கண்களை மூடித் தவம் செய்து அகக்கண்ணாகிய ஞானக்கண்ணைத் திறந்தால் மட்டுமே பார்க்க முடியும்.

ஒருவருக்கு வரும் எந்த நோயும் ஸ்தூல தேகத்தில் வலியாகவும், மற்ற தேகத்தில் வேதனையாகவும் உணரப்படும்.

  • ஒரு நோய் முதல் அடுக்காகிய உடலைத் தாக்கும்போது அதற்குப் பெயர் 'உபாதை'.
  • இரண்டாம் அடுக்காகிய உயிரைத் தாக்கும்போது அதற்குப் பெயர் ‘பலவீனம்'.
  • மூன்றாம் அடுக்காகிய மனதைத் தாக்கும்போது அதற்குப் பெயர் 'குழப்பம்'.
  • நான்காம் அடுக்காகிய அறிவைத் தாக்கும்போது அதற்குப் பெயர் ‘புத்தி பேதலிப்பு'.

ஐந்தாம் அடுக்காகிய சித்தத்தைத் தாக்கும்போது அதற்குப்பெயர் சித்த சுவாதீனம் இன்மை அல்லது சித்த பிரம்மை.

எந்த நோயும் ஐந்தாம் அடுக்கைத் தாண்டாது. ஆறாம் அடுக்கும் ஏழாம் அடுக்கும் எந்தப் புறக்காரணங்களாலும் பாதிப்பு அடையாது.

யார் சித்தத்தில் தெளிவுடன் இருக்கிறார்களோ, அவர்களுக்கு எந்த நோயும் வராது. அதே வேளையில் பிறரது நோய்களை விரட்டும் ஆற்றலும் வரும். அதனால்தான் அவர்களுக்குச் ‘சித்தர்கள்' என்று பெயர். சாதாரண மக்களைச் சித்தர்களாக மாற்றும் முயற்சியே எம்முடைய தென்னாடுடைய சிவன் அரசின் முயற்சி.

சித்தத்தின் வழியே பிறரது துன்பத்தை உணர்ந்து சித்தர்கள் செய்யும் வைத்தியத்திற்குப் பெயர்தான் ‘சித்த வைத்தியம்'

{ விளம்பரம் :- சங்க கால முறையில் 100 % துல்லியமாக உங்கள் முழு ஆயுள் ஜாதகம் பார்க்க தொடர்பு கொள்ளவும் - ஜோதிடம் - மைசூர் அரண்மை ஆய்வுக்கு உட்பட்டது. மேலும் தொடர்புக்கு - நக்கீரன் - +917904599321 }


கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad