![]() |
தண்ணீர்-தியானம் - Water Meditation |
தண்ணீர்-தியானம் - Water Maditation
ஐந்து பக்திகளும் தண்ணீரின் வெவ்வேறு நிலை களாகத்
தியானம் செய்யப்படுகின்றன.
ஐந்துவித பக்திகளை ஐந்து வகை தண்ணீராகத் தியானிப்பது
தண்ணீர்-தியானம்.
ஸாம பக்தி – தண்ணீர்
- ஹிங்காரம் - திரள்கின்ற மேகம்
- பிரஸ்தாவம் - பொழிகின்ற மழை
- உத்கீதம் - கிழக்கில் பாய்கின்ற நதிகள்
- பிரதிஹாரம் - மேற்கில் பாய்கின்ற நதிகள்
- நிதனம் - கடல்
இந்தத் தியானங்களின் அடிப்படை உண்மைகளை அறிந்து
ஐந்து வித பக்திகளை ஐந்து விதத் தண்ணீராகத் தியானிப்பவன் ஒருபோதும் தண்ணீரில் மூழ்கி இறக்க மாட்டான். அவன் நீர்வளம் உடையவன் ஆவான்.
சூரியன், அக்கினி, வாயு, மழை, தண்ணீர் போன்ற இயற்கையின் பல்வேறு அம்சங்களைத்
தியானிக்குமாறு 2 முதல் 4 வரையுள்ள பகுதிகள் கூறுகின்றன. இயற்கையுடன்
மனிதன் இயைந்து வாழ வேண்டும், இயற்கையை நேசிக்க
வேண்டும் என்பதை இந்தத் தியானங்கள் வலியுறுத்துகின்றன.
இன்றும் இயற்கையுடன் இயைந்து வாழ்வதற்கு மனிதன் அறிவுறுத்தப்படுகிறான்.
இதற்காகப் பல்வேறு நூல்கள் எழுதப் படுகின்றன. ஆனால் வேதகால மனிதன் இயற்கையுடன்
இயைந்து வாழ்வதில் வெற்றி கண்டான். அவனுக்கு இயற்கை எல்லா வளத்தையும் அள்ளித்
தந்தது. இன்றோ எண்ணற்ற நூல்கள் எழுதிக் குவிக்கின்ற அதேவேளையில் அவன் மூர்க்கத்
தனமாக இயற்கையைச் சூறையாடவும் தயங்கவில்லை. எனவே அவன் தோல்வி காண நேர்கிறது.
வேத காலத்தில் நிலவிய மற்றும் தற்காலத்தில்
நிலவுகின்ற இயற்கைக் கண்ணோட்டத்தில் எங்கே வேறுபாடு?
தெய்வீகம் என்ற கண்ணோட்டத்தில்.
வேத காலத்தில் இயற்கை தெய்வமாக வழிபடப் பட்டது; இயற்கையின் அம்சங்கள் தியானப்பொருளாகத்
திகழ்ந்தன. எனவே மனிதன் இயற்கையைத் தெய்வமாக நேசித்தான்; தெய்வத்திற்குரிய மரியாதையைச் செலுத்தினான்.
தற்காலத்தில் இந்தத் தெய்வீகப் பின்னணி இல்லாததால்
மனிதன் இயற்கையை நேசிப்பதில் தோல்வி காண நேர்கிறது.
தெய்வீகத்தின், ஆன்மீகத்தின் வழியில்
அல்லாமல் வேறு எந்த வழியிலும் இந்தியாவில் எந்தத் துறையிலும் வெற்றி காண இயலாது
என்று சுவாமி விவேகானந்தர் சுட்டிக்காட்டுவது இங்கே கருத்தில் கொள்ளத்தக்கது.
{ விளம்பரம் :- சங்க கால முறையில் 100 % துல்லியமாக உங்கள் முழு ஆயுள் ஜாதகம் பார்க்க தொடர்பு கொள்ளவும் - ஜோதிடம் - மைசூர் அரண்மை ஆய்வுக்கு உட்பட்டது. மேலும் தொடர்புக்கு - நக்கீரன் - +917904599321 }