பருவகால-தியானம் - Seasons Meditations பருவகால-தியானம் - Seasons Meditations
ஸாமத்தின் ஐந்து பக்திகள் ஐந்து பருவகாலங்களாகத்
தியானிக்கப்படுகின்றன.
ஐந்துவித பக்திகளை ஐந்து பருவகாலங்களாகத்
தியானிப்பது பருவகால-தியானம்.
- ஸாம பக்தி - பருவ காலம்
- ஹிங்காரம் - வசந்தகாலம்
- பிரஸ்தாவம் - கோடைக்காலம்
- உத்கீதம் - மழைக்காலம்
- பிரதிஹாரம் - முன்பனிக்காலம்
- நிதனம் - குளிர்காலம்
பருவகாலத் தியானத்தின் அடிப்படை உண்மைகளை அறிந்து தியானிப்பவனுக்குப் பருவகாலங்கள் இதம் செய்கின்றன;
ஐந்து பருவகாலங்களிலும் கிடைக்கின்ற இன்பங்களை அவன் பெறுகிறான்.
இயற்கை நிலைகுலைந்து கிடப்பதால் தற்காலத்தில் பருவகாலங்களின் மாற்றங்கள் தெளிவாக நிகழ்வதில்லை. வேத காலத்தில் என்றல்ல, மிகச்சமீப காலம்வரை இந்தப் பருவகால மாற்றங்கள் தெளிவாக நிகழ்ந்து வந்தன. வளமான இயற்கையின் சின்னங்களே பருவகாலங்கள். பருவங்கள் மாற வேண்டுமானால் இயற்கை வளமாக இருக்க வேண்டும். இதனை வலியுறுத்துவதற்காக பருவகாலங்களையே தியானம் செய்யுமாறு இங்கே கூறப்படுகிறது.
{ விளம்பரம் :- சங்க கால முறையில் 100 % துல்லியமாக உங்கள் முழு ஆயுள் ஜாதகம் பார்க்க தொடர்பு கொள்ளவும் - ஜோதிடம் - மைசூர் அரண்மை ஆய்வுக்கு உட்பட்டது. மேலும் தொடர்புக்கு - நக்கீரன் - +917904599321 }