![]() |
புலன்-தியானம் -Senses -Meditation |
புலன்-தியானம் -Senses -Meditation
புற இயற்கையிலிருந்து தியானம் அக இயற்கைக்குத் திரும்புகிறது. நமக்குப் புற உலகிலிருந்து அறிவையும் தகவல்களையும் தருபவை ஐந்து அறிவுக் கருவிகள் (பஞ்ச ஞானேந் திரியங்கள்); அந்த அறிவிற்கு ஏற்பச் செயல்படுபவை ஐந்து செயற்கருவிகள் (பஞ்ச கர்மேந்திரியங்கள்). இவை இரண்டையும் இயக்குவது அகக் கருவியாகிய (அந்தக்கரணம்) மனம். இந்தக் கருவிகளாக அல்லது புலன்களாக ஐந்து பக்திகளைத் தியானிக்கச் சொல்கிறது புலன்-தியானம். இவற்றுள் வரிசைப்படி பிந்தையது முந்தையதைவிட மிகுந்த ஆற்றல் வாய்ந்ததாகத் தியானிக்குமாறும் கூறப்படுகிறது.
ஐந்து பக்திகளை, முந்தையதைவிட
பிந்தையது ஆற்றல் மிக்க வரிசையில் ஐந்து புலன்களாகத் தியானிப்பது புலன்-தியானம்.
- ஸாம பக்தி | புலன்கள்
- ஹிங்காரம் - மூக்கு
- பிரஸ்தாவம் - வாக்கு
- உத்கீதம் - கண்
- பிரதிஹாரம் - காது
- நிதனம் - மனம்
இந்தப் புலன்களில் வாக்கு, கர்மேந்திரியங்கள் ஐந்தையும் குறிக்கின்றன; கண், காது, மூக்கு ஆகியவை ஐந்து ஞானேந்திரியங்களைக் குறிக்கின்றன; மனம் அகப் புலன்.
இந்தத் தியானத்தின் அடிப்படை உண்மைகளை அறிந்து, ஐந்து பக்திகளை, முந்தையதைவிட பிந்தையது ஆற்றல் மிக்க வரிசையில் ஐந்து புலன்களாகத் தியானிப்பவன் சிறந்தவர்களில் சிறந்தவன் ஆகிறான்; சிறந்த உலகங்களின் இன்பங்களைப் பெறுகிறான்.
ஐந்து பக்திகளைத் தியானிப்பது இவ்வாறு நிறைவுறுகிறது
{ விளம்பரம் :- சங்க கால முறையில் 100 % துல்லியமாக உங்கள் முழு ஆயுள் ஜாதகம் பார்க்க தொடர்பு கொள்ளவும் - ஜோதிடம் - மைசூர் அரண்மை ஆய்வுக்கு உட்பட்டது. மேலும் தொடர்புக்கு - நக்கீரன் - +917904599321 }