மிருக தியானம் - Animal Meditations மிருக தியானம் - Animal Meditations
இயற்கையின் ஒரு முக்கிய அம்சம் மிருகங்கள். மிருகங்களின் துணையின்றி மனிதன் வாழ இயலாது. மிருகங்களுடன் இயைந்து வாழ்வதும் மிக முக்கியமானதாகும். ஐந்து பக்திகள் மனித வாழ்க்கையில் பயன்படுகின்ற, அதாவது, வீட்டு
விலங்குகளாகவும் மனிதனாகவும் தியானிக்கப்படுகின்றன
ஐந்துவித பக்திகளை ஐந்து வீட்டு விலங்குகளாகவும்
மனிதனாகவும் தியானிப்பது மிருக தியானம்.
- ஸாம பக்தி | வீட்டு விலங்குகள், மனிதன்
- ஹிங்காரம் - ஆடு
- பிரஸ்தாவம் - செம்மறியாடு
- உத்கீதம் - பசு
- பிரதிஹாரம் - குதிரை
- நிதனம் - மனிதன்
சரஸ்வதி, சிந்து, கங்கை நதிக்கரையோரங்களில் பிறந்தது வேதகால நாகரீகம். குளிர்ப்பகுதியாதலால் குளிரிலிருந்து காத்துக்கொள்ள மனிதனுக்குக் கம்பளி தேவைப்பட்டது. செம்மறியாட்டின் மயிர் கம்பளிப் போர்வைகளுக்குப் பயன் பட்டது. எனவே செம்மறியாடுகளும் வீட்டு விலங்குகளாக வளர்க்கப்பட்டன.
மனிதனும் மிருகங்களில் ஒன்றாக இங்கே வகைப் படுத்தப்படுவது கருத்தில் கொள்ளத்தக்கது. இது இரண்டு உண்மைகளை உணர்த்துகிறது--ஒன்று, மனிதன் மற்றப் பிராணிகளையும் தன்னைப்போலவே நேசிக்க வேண்டும்; இரண்டு, மற்ற மனிதர்களையும் தன்னைப்போலவே நேசிக்க வேண்டும்.
மிருகத் தியானத்தின் அடிப்படை உண்மைகளை அறிந்து தியானிப்பவன் ஏராளம் கால்நடைச் செல்வத்தைப் பெறுகிறான்
{ விளம்பரம் :- சங்க கால முறையில் 100 % துல்லியமாக உங்கள் முழு ஆயுள் ஜாதகம் பார்க்க தொடர்பு கொள்ளவும் - ஜோதிடம் - மைசூர் அரண்மை ஆய்வுக்கு உட்பட்டது. மேலும் தொடர்புக்கு - நக்கீரன் - +917904599321 }