![]() |
எழுத்து-தியானம் - Letters -Meditation |
எழுத்து-தியானம் - Letters -Meditation
1 சாம மந்திரங்கள் ஏழு பக்திகள் கொண்ட
தொகுதியாக வும் (ஸாப்த பக்தி) பிரிக்கப்படுகின்றன. இதில் ஏற்கனவே உள்ள ஐந்து
பக்திகளுடன் ஆதி' என்பது மூன்றாவதாகவும், 'உபத்ரவம்' என்பது
ஆறாவதாகவும் சேர்க்கப்படுகின்றன.
ஏழு பக்திகளை வாக்காகத் தியானிக்குமாறு இங்கே கூறப்
படுகிறது. எழுத்துக்களின் தொகுதியே வாக்கு. எனவே ஏழு பக்திகள் ஏழு எழுத்துக்களாகத்
தியானிக்கப்படுகின்றன.
ஏழுவித பக்திகளை ஏழு எழுத்துக்களாகத் தியானிப்பது
எழுத்து தியானம்.
- ஸாம பக்தி | எழுத்துகள்
- ஹிங்காரம் - ஹும்
- பிரஸ்தாவம் - ப்ர
- ஆதி - ஆ
- உத்கீதம் - உத்
- பிரதிஹாரம் - ப்ரதி
- உபத்ரவம் - உப
- நிதனம் - நி
மொழிக்கு அடிப்படை வாக்கு; வாக்கிற்கு அடிப்படை எழுத்து.
எழுத்துக்களைத் தெளிவாக எழுதுவதும் தெளிவாக உச்சரிப்பதும் வளமான மொழிக்கு
அடிப்படையாகும். எழுத்துக்களை எழுதுவது மற்றும் உச்சரிப்பதை ஒரு தியானமாகச் செய்யுமாறு
இங்கே வலியுறுத்தப்படுகிறது.
எழுத்து தியானத்தின் பலன்
இந்தத் தியானத்தின் அடிப்படை உண்மைகளை அறிந்து
வாக்கை ஏழு எழுத்துக்களாகத் தியானிப்பவனுக்குத் தனது பலனான பாலை வாக்கு தருகிறது; அவன் ஏராளம் உணவைப் பெறுகிறான், உண்பவன் ஆகிறான்.