![]() |
சூரிய தியானம் பகுதி - Sun Meditation |
சூரிய தியானம் பகுதி - 1 - Sun Meditation
- சூரிய பகவான் வேத காலம் முதல் இன்றுவரை கண்கண்ட தெய்வமாகப் போற்றப்படுகிறார். சிற்றுயிர்கள், விலங்குகள், பறவைகள், மனிதர்கள், தாவரங்கள் அனைத்திற்கும் வாழ்வளித்துக் காப்பவர் அவர். பருவ காலங்கள், தட்பவெப்ப நிலை மாற்றம் எல்லாம் அவரால்தான். சுருக்கமாகச் சொல்வ தானால், பிரபஞ்ச வாழ் வின் ஆதாரமே சூரிய பகவான்தான். அவரை அவரது ஏழு நிலைகளில் தியானிக்கச் சொல்கிறது இந்தப் பகுதி. கிழக்கில் உதித்து மேற்கில் மறையும் வரை சூரியனை ஏழு வெவ் வேறு காலங்களில் புகைப் எடுத்தது போன்ற ஒரு காட்சியை இந்தப் பகுதி தருகிறது
- சூரிய தியானத்தின் கூடவே பல்வேறு விலங்கு களையும் சிந்திக்குமாறு இந்தத் தியானம் அமைக்கப்பட் டுள்ளது.
- அந்தச் சூரியனை ஏழு பக்திகளாகத் தியானிக்க வேண்டும். அவர் எப்போதும் சமமாக இருப்பதால் ‘ஸாமன்' எனப்படுகிறார். ‘சூரியன் என்னைப் பார்க்கிறார்', 'சூரியன் என்னைப் பார்க்கிறார்' என்று ஒவ்வொருவரும் நினைப்பதால் அவர் எல்லோரிடமும் ஸமமாக இருக்கிறார். அதனாலும் ஸாமன் எனப்படுகிறார்.
- சூரியனை ஏன் சாம பக்திகளாக, அதாவது, சாம மந்திர மாகத் தியானிக்க வேண்டும் என்பதற்கு இங்கே காரணம் கூறப் படுகிறது. அவர் எல்லோரிடமும் சமமாக இருப்பதால் அவருக் கும் ஸாமன் என்ற பெயர் பொருந்தும். எனவே ஸாமனை சாம பக்திகளாகத் தியானிப்பது பொருத்தமானதே.
- இந்த எல்லா உயிர்களும் சூரியனைப் பார்த்துள்ளன என்பதை அறிந்துகொள்ள வேண்டும். உதயத்திற்கு முன்னால் அவரது நிலையே ஹிங்காரம், சாம மந்திரத்தின் பகுதியான ஹிங்கார நிலையையே மிருகங்கள் சார்ந்துள்ளன. அதனால்தான் அவை 'ஹிம்' என்று ஒலி எழுப்புகின்றன. எனவே அவை ஹிங்கார உபாசகர்கள்.
- உதய காலத்தில் சூரியனின் நிலையே பிரஸ்தாவம். சாம மந்திரத்தின் பகுதியான பிரஸ்தாவ நிலையையே மனிதர்கள் சார்ந்துள்ளனர். அதனால்தான் அவர்கள் போற்றுதலை விரும்புகிறார்கள்; புகழை நாடுகிறார்கள். எனவே மனிதர்கள் பிரஸ்தாவ உபாசகர்கள்.
- கதிர்கள் பரவுகின்ற வேளையில் சூரியனின் நிலையே ஆதி. சாம மந்திரத்தின் பகுதியான ஆதி நிலையையே பறவைகள் சார்ந்துள்ளன. அதனால்தான் அவை ஆதாரம் எதுவுமில்லாமல் அந்தரத்தில் பறந்து திரிகின்றன. எனவே பறவைகள் ஆதி உபாசகர்கள்.
- சரியான மதிய வேளையில் சூரியனின் நிலையே உத்கீதம். சாம மந்திரத்தின் பகுதியான உத்கீத நிலையையே தேவர்கள் சார்ந்துள்ளனர். அதனால்தான் அவர்கள் பிரஜாபதியின் பிள்ளைகளில் மிக மேலானவர்களாக உள்ளார்கள். எனவே தேவர்கள் உத்கீத உபாசகர்கள்.
- மதியத்திற்குப் பிறகு, பிற்பகலுக்கு முன்னால் உள்ள சூரியனின் நிலையே பிரதிஹாரம். சாம மந்திரத்தின் பகுதியான பிரதிஹார நிலையையே கருவிலுள்ள உயிர்கள் சார்ந்துள்ளன. அதனால்தான் அவை தாங்கப்படுகின்றன; கீழே விழுவதில்லை. எனவே கருவிலுள்ள உயிர்கள் பிரதிஹார உபாசகர்கள்.
- மாலைவேளையில் சூரியன் மறையும் முன்பு உள்ள நிலையே உபத்ரவம், சாம மந்திரத்தின் பகுதியான உபத்ரவ நிலையைக் காட்டு விலங்குகள் சார்ந்துள்ளன. அதனால்தான் அவை மனிதர்களைக் கண்டால் காட்டிற்குள், பாதுகாப்பான குகைகளில் ஓடி விடுகின்றன. எனவே காட்டு விலங்குகள் உபத்ரவ உபாசகர்கள்,
{ விளம்பரம் :- சங்க கால முறையில் 100 % துல்லியமாக உங்கள் முழு ஆயுள் ஜாதகம் பார்க்க தொடர்பு கொள்ளவும் - ஜோதிடம் - மைசூர் அரண்மை ஆய்வுக்கு உட்பட்டது. மேலும் தொடர்புக்கு - நக்கீரன் - +917904599321 }
- சூரியன் மறைந்தபிறகு உள்ள நிலையே நிதனம். சாம மந்திரத்தின் பகுதியான நிதன நிலையையே பித்ருக்கள் சார்ந்துள்ளனர். அதனால்தான் அவர்கள் (சிராத்த வேளையில் சங்கல்ப உருவங்களாகக் குசப்புல்லின்மீது) படுக்க வைக்கப்படுகிறார்கள். எனவே பித்ருக்கள் நிதன உபாசகர்கள்.
- இவ்வாறு ஏழு பக்திகளைச் சூரியனாகத் தியானிக்க வேண்டும்.
பக்தி |
சூரியனின் நிலை |
சார்ந்துள்ள உயிரினம் |
ஹிங்காரம் |
உதயத்திற்கு முன்பு |
வீட்டு விலங்குகள் |
பிரஸ்தாவம் |
உதய காலம் |
மனிதர்கள் |
ஆதி |
கதிர்கள் பரவும் வேளை |
பறவைகள் |
உத்கீதம் |
நண்பகல் |
தேவர்கள் |
பிரதிஹாரம் |
மதியத்திற்குப் பின்னால் மாலைவேளைக்கு முன்னால் |
கருவிலுள்ள உயிர்கள் |
உபத்ரவம் |
மாலைவேளையில் சூரியன் மறையும் முன்னால் |
காட்டு விலங்குகள் |
நிதனம் |
மறைந்த பிறகு |
பித்ருக்கள் |
- சூரிய உதயத்திற்கு முன்னாலிருந்து சூரியன் மறைந்த பிறகு உள்ள நிலைவரை சூரிய தேவனைப் பல்வேறு கோணங்களில் தியானம் செய்வது இங்கே கூறப்படுகிறது.
- குறிப்பிட்ட உயிரினங்கள் குறிப்பிட்ட வேளையில் சூரியனைச் சார்ந்திருப்பதாக இந்த பகுதியில் தெரிவிக்கின்றன. இதன் விஞ்ஞானபூர்வமான உண்மை இதுவரை கண்டு பிடிக்கப்படவில்லை. ஆனால் இதன் பின்னாலும் உண்மை உள்ளது என்பதில் சந்தேகமில்லை.
{ விளம்பரம் :- சங்க கால முறையில் 100 % துல்லியமாக உங்கள் முழு ஆயுள் ஜாதகம் பார்க்க தொடர்பு கொள்ளவும் - ஜோதிடம் - மைசூர் அரண்மை ஆய்வுக்கு உட்பட்டது. மேலும் தொடர்புக்கு - நக்கீரன் - +917904599321 }