![]() |
ஐவகை தியானம் |
இயற்கையின் ஐவகை தியானம்
ஐந்து பக்திகள் அல்லது ஐந்து பகுதிகள் உடைய ஸாம மந்திரத்தை
முழுமையாகத் தியானிக்கின்ற பகுதி இது. ஒவ்வொரு பக்தியும் இயற்கையின் வெவ்வேறு
அம்சமாகத் தியானிக்கப்படுகின்றன. இவ்வாறு 25 தியானங்கள் இங்கே கூறப்படுகின்றன.
1. மேல்வரிசை இயற்கை
தியானம்
ஐந்து பக்திகளை இயற்கையின் ஐந்து அம்சங்களாகத்
தியானம் செய்ய வேண்டும்:
ஸாம பக்தி – இயற்கைஅம்சம்
- ஹிங்காரம் – பூமி
- பிரஸ்தாவம் - அக்கினி
- உத்கீதம் - வானம்
- பிரதிஹாரம் - சூரியன்
- நிதனம் - சொர்க்கம்
இது மேல்வரிசை தியானம் ஆகும் .
மேல் வரிசை என்பது உயர்ந்த இடத்தை நோக்கிச் செல்வதைக்
குறிக்கிறது. பூமியிலிருந்து அக்கினி, வானம், சூரியன் என்று படிப்படியாக, சொர்க்கத்தை நோக்கி
மேலே செல்வதாக இந்தத் தியானம் அமைந்துள்ளது.
{ விளம்பரம் :- சங்க கால முறையில் 100 % துல்லியமாக உங்கள் முழு ஆயுள் ஜாதகம் பார்க்க தொடர்பு கொள்ளவும் - ஜோதிடம் - மைசூர் அரண்மை ஆய்வுக்கு உட்பட்டது. மேலும் தொடர்புக்கு - நக்கீரன் - +917904599321 }
2. கீழ்வரிசை இயற்கை
தியானம்இதுவும் ஐந்து பக்திகளை இயற்கையின் ஐந்து அம்சங் களாகப் பாவித்துச் செய்கின்ற தியானம். ஆனால் சொர்க்கத்தி லிருந்து பூமியை நோக்கிப் படிப்படியாக வருவதாக இந்த தியானம் அமைந்துள்ளது. எனவே இது கீழ்வரிசை தியானம்.
ஐந்து பக்திகளை இயற்கையின் ஐந்து அம்சங்களாகத் தியானம் செய்ய வேண்டும்:
- ஹிங்காரம் – சொர்க்கம்
- பிரஸ்தாவம் - சூரியன்
- உத்கீதம் - வானம்
- பிரதிஹாரம் - அக்கினி
- நிதனம் - பூமி
இது கீழ்வரிசை தியானம்.
இந்த இரண்டு தியானங்களிலும் இயற்கையின் ஐந்து அம்சங்கள் எடுத்துக்கொள்ளப்படுகின்றன; முதல் தியானத்தில் அவை கீழிருந்து மேலாகவும், இரண்டாம் தியானத்தில் மேலிருந்து கீழாகவும் தியானிக்கப்படுகின்றன.
{ விளம்பரம் :- சங்க கால முறையில் 100 % துல்லியமாக உங்கள் முழு ஆயுள் ஜாதகம் பார்க்க தொடர்பு கொள்ளவும் - ஜோதிடம் - மைசூர் அரண்மை ஆய்வுக்கு உட்பட்டது. மேலும் தொடர்புக்கு - நக்கீரன் - +917904599321 }
தியான பலன்மேற்கண்ட இரண்டு தியானங்களின் பலன் என்ன என்பதை பாப்போம்.
மேல்வரிசை, கீழ்வரிசை தியானங்களின் அடிப்படை உண்மையை அறிந்து, சாம மந்திரத்தின் ஐந்து பக்திகளை இயற்கையின் இந்த ஐந்து அம்சங்களாக யார் தியானம் செய்கிறானோ அவனுக்கு மேலுலுகங்களும் கீழுலகங்களும் சொந்தமாகும்.
இந்தத் தியானங்களைச் செய்பவன் மேலுலகங்கள் மற்றும் கீழுலகங்களில் உள்ள இன்பங்களையும் சுகபோகங்களையும் அனுபவிப்பதற்கான தகுதி பெறுகிறான் என்று ஸ்ரீ ஆதிசங்கரர் விளக்குகிறார்.
{ விளம்பரம் :- சங்க கால முறையில் 100 % துல்லியமாக உங்கள் முழு ஆயுள் ஜாதகம் பார்க்க தொடர்பு கொள்ளவும் - ஜோதிடம் - மைசூர் அரண்மை ஆய்வுக்கு உட்பட்டது. மேலும் தொடர்புக்கு - நக்கீரன் - +917904599321 }