நனமை தரக்கூடிய நல்ல விஷியங்களை தியானிக்கின்ற தியானம்
![]() |
நன்மைக்கான தியானம் - Virtue Meditation |
ஓம். முழுமையான சாம மந்திரத்தைத் தியானம் செய்வது நன்மை தருவதாகும். எது நன்மையோ அது ஸாமம், எது நன்மை அல்லாததோ அது அஸாமம் என்று கூறப்படுகிறது.
{ விளம்பரம் :- சங்க கால முறையில் 100 % துல்லியமாக உங்கள் முழு ஆயுள் ஜாதகம் பார்க்க தொடர்பு கொள்ளவும் - ஜோதிடம் - மைசூர் அரண்மை ஆய்வுக்கு உட்பட்டது. மேலும் தொடர்புக்கு - நக்கீரன் - +917904599321 }
சாம மந்திரங்களை முழுமையாக ஓதுவதே நன்மை தருவது என்பது இந்த மந்திரத்தின் சாரம் ஆகும். நன்மை என்று இங்கே கூறியது நல்லவை அனைத்தையும் குறிப்பிடுகிறது; அதாவது, அழகு, தூய்மை, கம்பீரம், நேர்மை, நல்லொழுக்கம் போன்ற அனைத்தும் இங்கே சுட்டிக் காட்டப்படுகிறது.
இந்தப் பல்வேறு விஷயங்களைத் தொடரும் மந்திரங்கள் கூறுகின்றன.
'அவன் ஸாமத்தினால் இன்னவனை அணுகினான்' என்று கூறினால், ‘அவன் நல்ல வழிகளால் இன்னவனை அணுகினான்' என்று பொருள். 'அவன் அஸாமத்தினால் இன்னவனை அணுகினான்' என்று கூறினால், ‘அவன் தீய வழிகளால் அவனை அணுகினான்' என்று பொருள்.
இங்கே ஸாமம் என்பது 'நல்ல வழி' என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
நல்லவற்றைக் காணும்போது, 'ஓ, இது எனக்கு நல்லது' என்று கூற வேண்டுமானால், 'ஓ, இது எனக்கு ஸாமமாக உள்ளது' என்று கூறுகிறார்கள். தீயவற்றைக் காணும்போது, 'ஓ, இது எனக்குத் தீயது' என்று கூற வேண்டுமானால், 'ஓ, இது எனக்கு , அஸாமமாக உள்ளது' என்கிறார்கள்.
{ விளம்பரம் :- சங்க கால முறையில் 100 % துல்லியமாக உங்கள் முழு ஆயுள் ஜாதகம் பார்க்க தொடர்பு கொள்ளவும் - ஜோதிடம் - மைசூர் அரண்மை ஆய்வுக்கு உட்பட்டது. மேலும் தொடர்புக்கு - நக்கீரன் - +917904599321 }
ஸாமம் அல்லது முழுமையான ஸாம மந்திரத்தை இசைப்பது நன்மை தருவது என்று அறிந்து யார் தியானம் செய்கிறானோ அவனை எல்லா நல்ல பண்புகளும் விரைவாக வந்தடைகின்றன; அவனுக்குச் சேவை செய்கின்றன.
ஆழ்ந்த நம்பிக்கை மிகவும் முக்கியமானது; அதிலும் குறிப்பாக, ஆன்மீக சாதனைகளில் இத்தகைய நம்பிக்கை மிகவும் கைகொடுக்கக் கூடியது. ஸாம கீதத்தை இசைப்பதே நன்மை தருவது என்ற நம்பிக்கையுடன் அதனை இசைக்க வேண்டும் என்பது இங்கே சுட்டிக்காட்டப்படுகிறது.
நல்லதைக் காண வேண்டும், நல்லதையே கேட்க வேண்டும், நல்லதையே நினைக்க வேண்டும், நல்லதையே செய்ய வேண்டும் என்ற கருத்து இந்தத் தியானங்களின் வாயிலாக விளக்கப்படுகிறது. நற்பண்புகளும், நன்னடத்தையும், நல்லொழுக்க வாழ்க்கையுமே சமுதாயம் வளம் பெறுவதற்கான அடிப்படை ஆதாரம். எனவே எங்கும் நன்மை நிலவ வேண்டுவதையே இந்தத் தியானம் வலியுறுத்துகிறது.
{ விளம்பரம் :- சங்க கால முறையில் 100 % துல்லியமாக உங்கள் முழு ஆயுள் ஜாதகம் பார்க்க தொடர்பு கொள்ளவும் - ஜோதிடம் - மைசூர் அரண்மை ஆய்வுக்கு உட்பட்டது. மேலும் தொடர்புக்கு - நக்கீரன் - +917904599321 }