Type Here to Get Search Results !

Translate

பிரபஞ்சம் இரகசியம் - ஞான மார்க்கம்‌ - பிறவாத நெறி ? சிவரூபம்‌ என்றால்‌ என்ன?

பிரபஞ்சம் இரகசியம் - ஞான மார்க்கம்‌ - பிறவாத நெறி ? சிவரூபம்‌ என்றால்‌ என்ன?

பிரபஞ்சம் இரகசியம்
பிரபஞ்சம் இரகசியம்

ஞான மார்க்கம்‌ - பிறவாத நெறி

பிறவாத நெறி, ஞானநெறி ஒன்று இருக்கிறது என்பதைக்‌
கேட்ட புலத்தியன்‌ விடுவானா? அறத்து அகத்தியரைக்‌
கேட்கிறார்‌ புலத்தியர்‌.

“பிறவாத நெறிகாட்டி அமிர்தம்‌ ஈந்து
மாறாத அடூமை படைத்து ஆளுமென்று”

-செளமிய சாகரம்‌ - 112

ஐயா அகத்திய மாமுனியே என்‌ குருவே இந்த
உலகத்தில்‌ ரிஷி, முனிவர்‌, சித்தரெல்லாம்‌. தவம்‌ பெற்ற
பெரியோர்‌ மகிமையைச்‌ சொன்னீர்கள்‌ மகிழ்ந்தேன்‌.
அடியேனையும்‌ இனி பிறக்காமல்‌ இருக்கும்‌ வழியைச்‌ சொல்லி
அருள வேண்டும்‌. நான்‌ தங்கள்‌ அடிமை வணங்கிக்‌ கேட்கிறேன்‌
என்று கேட்க அகத்தியா கூறுகிறார்‌:

“மகத்தான ரகஸ்யமடா ஞானமார்க்கம்‌
இணங்கியதோர்‌ அந்தரங்க மான சூட்சம்‌
ஏகாந்த சூட்சமென்ற கதையைக்‌ கேளு
குணங்குவிய ஆஜியந்தக்‌ குறியை நன்றாய்க்‌
கூர்மையுடன்‌ சொல்லுகிறோம்‌ குணமாய்க்‌ கேளு.

செளவுமிய சாகரம்‌ : 113

புலத்தியன்‌ அகத்தியரை வணங்கி நிற்கின்றபோது
அகத்தியா கூறுகிறார்‌: மகத்தான ரகசியமான  மார்க்கம்‌
ஞானமார்க்கம்‌. அது ஒன்றோடு ஒன்று இணைந்து. நிற்கின்ற
அந்தரங்கமான சூட்சம்‌  எங்கும்‌. நிறைந்து
இருக்கின்ற ஏகாந்தமான ரகசியத்தை அதன்‌ கதையை உன்‌
மனம்‌ தெளிய ஆதி அந்தக்‌ குறிப்பை கூர்மையுடன்‌
சொல்லுகிறோம்‌ நன்றாய்‌ தெரிந்து கொள்ளு, தேவாதி
தேவர்கள்‌, வேதமுதல்‌, சமயத்தோர்‌ அறியமுடியாத பொருள்‌
ஒன்று உணடு. அதுதான்‌ வெட்டவெளி. அந்த
பவட்டவெளித்குப்‌ பெயர்தான்‌ பரம்‌ என்று சொல்லுது. இந்த
வெட்டவெளி ரகசியத்தை முழுவதும்‌ அறிவதறுதான்‌ ஆதி அந்த
விளக்கம்‌ என்று சொல்லப்படுவது என்று அகத்தியர்‌ கூறியதை
கீழ்வரும்‌ பாடலில்‌ காணலாம்‌.


“தேரப்பா தேடியறியாத வஸ்து
தெளிவான வெளியதுதான்‌ பரமதாகும்‌
ககளப்பா பரமான வஸ்து தன்னைக்‌
ஜிருபையுடன்‌ அறிவதுவே ஆஜி அந்தம்‌

செளவுமிய சாகரம்‌ : 114

மேற்சொன்ன பாடல்‌ மூலம்‌ வெட்டவெளியின்‌ ரகசியத்தை
அறிவதுதான்‌ ஆதி அந்தம்‌ என்பது  இந்த வேட்டவெளியை சிவபெருமான்‌ எனக்‌ கூறி அவள்‌ முடியை அறிவதற்கு பிரம்மா அன்னபட்சி உருவம்‌ கொண்டு மேலும்‌
மேலும்‌ பறந்தான்‌ எனவும்‌ சிவனின்‌ அடியைக்‌ காண விஷ்ணு
பன்றி அவதாரம்‌ எடுத்து கீழே கீழே சென்றான்‌ எனவும்‌ இருவரும்‌
அடியையும்‌ முடியையும்‌ காணமுடியவில்லை என்று
மக்களுக்காக கதையாக. உருவாக்கப்பட்ட செய்தி எனவும்‌
கீழ்வரும்‌ பாடல்‌ மூலம்‌ அகுத்தியா கூறியதைக்‌ காணலாம்‌.

“பாரப்பா அடிமுடியுந்‌ தேடிப்போன
பதிவான மாலயனுங்‌ காணாரென்று
நேரப்பா வேதமுரைக்கிட்ட செய்தி
நீள்‌ புவியில்‌ யாவாக்கும்‌ உரைத்திட்ட செய்தி

செளவுமிய சாகரம்‌: 118

அகத்தியா தன்‌ பாடல்‌ மூலம்‌ பிரம்மன்‌, விஷ்ணு, சிவனைக்‌
காண அடிமுடி தேடிப்‌ போனார்கள்‌ என்பது கட்டுக்கதை,
இன்னும்‌ சொல்லப்போனால்‌ பாமர மக்களுக்கும்‌ புரிய வேண்டுமே
என்பதற்காக கதை மூலம்‌ விளக்கினார்கள்‌ என்பதும்‌
தெரியவருகிறது. மேலும்‌ 


*வெட்டவெளி (பிரபஞ்சம் ) பற்றி அகத்தியா
என்ன கூறுகிறார்‌ என்பதைப்‌ பார்ப்போம்‌*

“யாரப்பா, அறிவார்கள்‌ பர சொருபம்‌
அந்தரங்கமான சிவ ரூபா ரூபம்‌”

செளவுமிய சாகரம்‌ : 123

என்ற மேற்கண்ட வரியின்‌ மூலம்‌ அந்த வெட்டவெளியில்‌ ஒரு
நிறம்‌ தெரிந்தது அந்த நிறத்திற்கு சிவ ரூபம்‌ என்று பெயர்‌
வைத்தனர்‌ என்பது தெளிவாகத்‌. தெரிகிறது.


சிவரூபம்‌ என்றால்‌ என்ன?
நிறம்‌? பொருள்‌ அறிய வேண்டாமா?

அதற்கு அகத்தியா என்ன சொல்கிறார்‌ என்பதைப்‌
பார்ப்போம்‌.

“கேளப்பா பராபரமாய்‌ நின்ற சோதிக்‌
கிருபையுடன்‌ சிவன்‌ படைக்க நினைத்த போது
மாளப்ப வல்ல பரந்தனிலே தான்‌
வளமான சிவமதுதான்‌ உண்டாச்சப்பா

செளவுமிய சாகரம்‌ : 121

மேற்சொன்ன பாடல்‌ மூலம்‌ அகத்திய வெட்டவெளியில்‌ தெரிந்த
காட்சி ஜோதி என்றார்‌ அதையே சிவன்‌ என்று குறிப்பிடுகிறார்‌.
ஆகவே சிவன்‌ என்பது வெட்டவெளியில்‌ காணும்‌ ஜோதியே
என்பதில்‌ நமக்கு ஐயம்‌ இல்லை. சிவன்தான்‌ ஜோதி,
ஜோதிதான்‌ சிவன்‌ என்பதை புரிந்து கொள்ள வேண்டுகிறோம்‌.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad