சித்கர்கள் என்பவர்கள் யார்? பிறப்பு ரகசியம் என்ன ?
சித்தRகள் கண்ட உண்மைகளை ஆய்வு செய்யும்போது
சித்த்களைப் பற்றி தெளிவாகத் தெரிந்து கொண்டால்தான்
நாம் சொல்லும் சொல்லுக்கு ஒரு உத்வேகம் பிறக்கும். வரலாற்று
ஆராய்ச்சியாளர்கள் பல்வேறு காலத்தில் பல்வேறு அகத்தியர்
பிறந்தார் எனவும் 86 அகத்தியர் வாழ்ந்தார்கள் எனவும்
கூறுகின்றனர். இன்னும் சிலர் 14-ம் நூற்றாண்டிலும் 16 ஆம்
நாற்றாண்டிலும் தோன்றியவர்கள் தமிழ் சித்தர்கள் என்று
கூறுகின்றனா. இதுவெல்லாம் இன்றைய ஆராய்ச்சியாளா்கள்
தன்னுடைய அறிவுக்கு எட்டிபவைகளைக் கூறுகின்றனர்.
குருமுனி என்று அழைக்கப்படும் அகத்தியரின் வயதை போக
மாமுனி சொல்லுவதை கீழ்க்காணும். பாடலில் காணலாம்.
“பகருவேன் அகத்தியருக்கு வயது ஏதென்றால்
பட்சமுடன் துகை கணக்கு கூறொண்ணாது
நிகரமுடன் சொல்வதற்கு யாராலாகும்
நீதியுடன் நூல்களில் உரைத்த மார்க்கம்
து, கரமென்ற அட்சரமும்: அவரால் ஆச்சு
அப்பனே நாலுயுகம் கடந்த சித்து
*ச'.கரமெல்லாம் தான் துதிக்கம் கும்பயோனி
சதுரான அகத்தியா என்று அறையலாமே
- போகா சப்தகாண்டம் 57:57
மேற்கண்ட பாடல் மூலம் முதல் நான்கு வரிகள்
அகத்தியரின் வயகை துகை, கணக்கு என்று (பாராலும், சொல்ல
முடியாது. நாலுயுகம் கடந்து வாழ்ந்து கொண்டிருக்கின்ற
சித்தர் என்று கூறுகிறார். உண்மையிலேயே வாழ்ந்து
கொணடருக்கின்றார்களா? என்ற அறிவியலாளர் மத்தியிலே
கேள்வி எழுவது இயல்பு. இதைப்பற்றி கொங்கணச் சித்தர்
என்ன சொல்கிறார் என்பதைப் பார்ப்போம்,
திரைத்தவனை மால் தொடங்கி பிடித்து வாங்கி
சீராகப் பரப்பினதோர் திறமுங் கண்டேன்
சரைத்தனனும் மிராவணனும் ராமனாகச்
சூழ்ந்து பத்துப் பதினைந்தும் கண்டேன்! கண்டேன்!
முரைத்தவனும் கோபால திருஷ்ணனாகி
மூவாறு பாரதமும் முடியக் கண்டேன்
கரைத்தவனே மால் பிரமா மாண்டு மாண்டு
காட்டியதோர் கூத்தெல்லாம் கண்டீடன் நானே
கொங்கணர் வா: காவியம். 3000. (414)
மேற்கண்ட பாடல் முலம் நாதத்துவம் (மால்) தொடங்கி
அனைத்து ஜீவராசிகளும் தோன்றி பத்துப்பதினைந்து
இராவணன், இராமன் இப்படி தோன்றி தோன்றி மறைந்தார்கள்
கண்டேன். அதேபோல கிருஷ்ணன் தோன்றி 18 பாரதமும்
முடிவதைப் பார்த்தேன் என்றும், எத்தனையோ! திருமால், பிரும்மா
மாண்டு மாண்டு போன இந்த கூத்தையெல்லாம். கண்டேன்
நானே என்று கூறகிறார்கள். என்றால். இவர்களுக்கு சாவு
இல்லை. மரணமில்லை என்றல்லவா தடறுதியாகத் தெரிகிறது.
அண்டங்கள். பிண்டங்கள் அழிவதைப் பாத்துக் கொண்டூ
இருக்கின்ற இந்த சித்தர்கள் எங்கிருந்து பார்க்கிறார்கள்? எப்படி
பார்க்கிறார்கள்? என்பது கேள்வி. இதைப்பற்றி அகத்தியரிடமே
கேட்போமே! அகத்தியர் தன்னுடைய மாணவனான
புலத்தியருக்கு ரிஷி முனிவர் பிறப்பைப் பற்றி கூறும்போது
“காணமே சிவஞானம் உணர்ந்தோர் தானும்
கருணையுள்ள மாதவத்தோர் பெருமை தானும்
பேணவே தாலமகதைச் சூட்சுமமாக்கி
பிலமான சூட்சுமத்துக் காரணமாய் நின்று
தோணவே ஆதி அந்தம். ஒன்றாய் நின்று
துலங்குகின்ற சுடரொளியில் சோதியாகிப்
பேணவே பூமியில் வந்து அவதரிப்பார்
பிறந்தாலுஞ் சிவயோகி யாவார் பாரே!
-செளமிய சாகரம் - 111
மேற்கண்ட பாடலின் பொருளானது சிவஞானம்
உணர்ந்தவர்கள் அதாவது வெட்டவெளி பிரபஞ்ச ரகசியம்
உணர்ந்தனர்கள் கருணையுள்ள அந்த தவப்பெரியோர்கள்
பெருமையை வாய்விட்டுச் சொல்லமுடியாது. அவர்களெல்லாம்
தன்னுடைய தூல உடலை சூட்குமமாகி
அதாவது இலள் இஞ் ஆக்கி, அந்த சூட்சும உடலுக்கு
ஆதாரமாக, காரணமாக இருக்கின்ற முதலும், முடிவுமாக
இருக்கின்ற ஜோதியில், ஜோதியாகி இருப்பார்கள். இந்த
பூமியில் வந்து அவதரிக்கின்றபோது சிவயோகியாக ஆவார்கள்
என்று கூறுகின்றார்.
மேற்கண்ட பாடல் விளக்கத்தின் மூலம் சித்தாகள்
வெட்டவெளியில் ஜோதியில் ஜோதியாக கலந்து நின்று
மரணமில்லாத பெருவாழ்வைப் பெற்று வாழ்கின்றார்கள் என்பது
ஆதாரபூார்வமாகத் தெரிகிறது. ஆகவே சித்த்கள் வயதை
நிரணயம் செய்வதற்கு எந்த மனிதனுக்கும் அருகதை கிடையாது
என்பது தெள்ளத் தெளிவாகும்.
x