Type Here to Get Search Results !

Translate

பிரபஞ்ச இரகசியம் - ஜோதி என்பது யாது?

பிரபஞ்ச இரகசியம் - ஜோதி என்பது யாது?


பிரபஞ்ச இரகசியம்
பிரபஞ்ச இரகசியம்

ஜோதி என்பது யாது?



இன்று பெரும்பாலோர்‌ ஜோதி வழிபாடு என்று சொல்லி

விளக்கில்‌ எண்ணை ஊற்றி நெருப்பு பற்றவைத்து. திரியில்‌

எரியும்‌ நெருப்பை வழிபடுகிற காட்சியைக்‌ காண்கிறோம்‌.

விளக்கிலே எரிகிற நெருப்புக்கு சுடர்‌ என்று பெயர்‌. அதாவது

ஒளியின்‌ திரட்சி நிலைக்கு சுடர்‌ என்று பெயர்‌, ஒளியின்‌

படர்ந்த நிலைக்கு ஜோதி என்பது பெயா்‌, உதாரணமாக

இருட்டறையில்‌ விளக்கு ஏற்றி வைக்கிறோம்‌. விளக்குத்திரியில்‌

எரியும்‌ நெருப்பு சுடர் அறையில்‌ உள்ள பிரகாசமே ஜோதி.


சிவன்‌ என்றால்‌ ஜோதி என்று பொருள்‌. இதற்கு பல

பெயா்‌ இட்டு அழைக்கிறார்கள்‌. சித்தாகள்‌ வெளி, உச்சிவெளி,

தனிவெளி, ஏகவெளி, ஒளிவெளி, வெளியில்‌ வெளி, பரவெளி,

இந்திர ஞானவெளி. ஞானவெளி, பெருவெளி. உயாவேளி, நாதாந்த

வெளி, வேதாந்த வெளி, பாழ்வெளி, முப்பாள்வெளி, முதற்பாழ்‌...

சித்திரக்கூடம்‌, மணிமண்டபம்‌. என பலப்‌ பெயர்கள்‌ உண்டு.

ஆதியிலே வெட்டவெளியிலே தோன்றிய பிரகாசமே ஜோதி

என்று அமைக்கப்பட்டது. அதையேதான்‌ இறைவனாக சித்தாகள்‌

வழிபடுகிறார்கள்‌. இதைப்பற்றி குதம்பைச்சித்தர் என்ன கூறுகிறார்‌

என்று பார்ப்போம்‌:


“வெட்டவெளிதன்னை மெய்யென்று இருப்போர்க்கு

பட்டயம்‌ எதுக்கடி - குதம்பாய்‌

பட்டயம்‌ எதுக்கடி - குதம்பைச்‌ சித்தா”


மேற்கண்ட பாடல்‌ முலம்‌ வெட்டவெளி உண்மை ரகசியம்‌

அறிந்தவர்க்கு ஒன்றுமே தேவையில்லை. அதாவது பட்டங்கள்‌

பதவிகள்‌ தேவையில்லை என்று கூறுகிற காட்சியைப்‌

பா்க்கிமறோம்‌. இதைப்பற்றி நமது புரட்சிச்‌ சித்தா சிவவாக்கியார்‌

என்ன சொல்கிறார்‌ என்று பார்ப்போம்‌.


“கட்டையால்‌ செய்தேவரும்‌, கல்லினால்‌ செய்தேவரும்‌

மட்டையால்‌ செய்தேவரும்‌, மஞ்சளால்‌ செய்தேவரும்‌

சட்டையால்‌ செய்தேவரும்‌ சாணியால்‌ செய்தேவரும்‌

வெட்டவெளியதன்றி மற்று வேறு தெய்வமில்லையே''

சிவ வாக்கியர்‌


மேற்கண்ட பாடல்‌ மூலம்‌, கட்டையாலும்‌, கல்லினாலும்‌,

மஞ்சளாலும்‌, சட்டையால்‌, சாணியால்‌ உருவம்‌ செய்து வழிபட்டு

என்ன பிரயோசனம்‌? வெட்டவெளியைத்‌ தவிர வேறு

தெய்வங்கள்‌ எதுவும்‌ இல்லை என்று கூறுவதைக்‌ காணலாம்‌.


மேற்கண்ட பாடல்கள்‌ மூலம்‌ வெட்டவெளியான

ஜோதியைத்தான்‌ அனைத்து சித்தாகளும்‌ வணங்கினார்கள்‌,

போற்றினார்கள்‌ என்பது தெளிவு. சமீப காலத்தில்‌ வாழ்ந்த

வள்ளலாரும்‌ அதே ஜோதியைத்தான்‌ “அருட்பெருஞ்ஜோதி

தனிப்பெருங்கருணை” என்று வணங்கினார்கள்‌ என்பதிலிருந்து

இன்னும்‌ ஆணித்தரமாகப்‌ புரிந்து கொள்ளலாம்‌. மேற்கண்ட

சான்றுகள்‌ மூலம்‌ நமக்கு வெட்டமவளிதான்‌ ஜோதி ஜோதிதான்‌

வெட்டவெளி என்பது தெள்ளத்‌ தெளிவாகப்‌ புரிகிறது.

அதைத்தான்‌ வாழையடி வாழையாக வந்த அனைத்து

சித்தாகளும்‌ வணங்கினார்கள்‌ என்பது கடுகளவும்‌ சந்தேகம்‌

இல்லை.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad