பிரபஞ்சம் தோன்றியது எப்படி?
வெட்டவெளிதான் ஜோதி என்று பார்த்தோம். அந்த
ஜோதியிலிருந்து எப்படி பிரபஞ்சம் உண்டாயின என்பதைஅகத்தியர் என்ன கூறுகிறார் என்பதைப் பார்ப்போம்.
“கேளப்பா பராபரமாய் நின்ற சோதிக்
கிருபையுடன் சிவன் படைக்க நினைத்தபோது
மாளப்பா வல்ல பரந்தன்னிலேதான்
வளமான சிவமதுதான் உண்டாச்சுப்பா”
“செளமிய சாகரம் - : 121
மேற்கண்ட பாடல் மூலம் எங்கும் வியாபித்து
இருக்கக்கூடிய ஜோதியே சிவன் என்றும் அந்த சிவன் என்ற
ஜோதியிலே இருந்து சிவம் என்கிற ஆற்றல். உண்டானது.
வெட்டவெளி ஜோதியில் பிறந்த முதல் ஆஹ்றலுக்குப் பெயர்
சிவம் என்பது தெளிவாகப் புரிகிறது. இதைப்பற்றி திருமூலா,
அருள்மிகு சுப்ரமணியா என்ன சொல்கிறார் என்பதைப்
பார்ப்போம்.
சத்த முதல் ஐந்துந் தன் வழிசாரில்
சித்துக்குச் சித்தன்றிச் சோவிடம் வேறுண்டோ
- திருமூலர்
“ஆதியிலே பராபரத்திற் பிறந்த சத்தம்
அருவுரவாய் நின்றபடி சினமுமாகிச்
சோதியென்ற சிவனிடமாய்ச் சக்தியாகித்
தொல்லுலகி லெழுவகையாந் தோற்றமாகி
கூ ஞா. 32
மேற்கண்ட சுப்ரமணியர் பாடல் மூலம் எங்கும்
வெட்டவெளியாகிய சிவன் என்ற இடத்திலே ஒரு சத்தம்
அதாவது ஓசை உண்டாயிற்று. அந்த ஓசையிலேயிருந்து
உருவமும் இல்லாமல் அருவமாகவும் இல்லாமல் ஒர் ஆற்றல்
பிறந்தது. அதற்கு சிவம் என்பது பெயர். அதை தாங்கி
நிற்க சிவனிடம் இருந்து சக்தி என்கிற ஆற்றல் பிறந்தது.
ஆக இந்த சத்தம், சிவம், சக்தி, என்கிற மூன்று ஆற்றல்தான்
ஏழுவகையான தோற்றங்கள் உண்டாவதற்கு மூலகாரணமாக
இருந்தது என்பதை மேல்வரும் பாடல் மூலம் எளிதாகக்
காணலாம். இந்தப் பிரபஞ்சப் படைப்புக்கு மூலகாரணமான
மேற்கண்ட ஆஹ்றலுக்கு "ஓம் என்று பெயர் வைத்தனர். அதையே
பிரணவம், ஓங்காரம், மூலமந்திரம்: என்று பல்வேறு பெயரிட்டு
அழைப்பதைப் பார்க்கிறோம்.