“ஓம்” என்று எதனால் பெயர் வந்தது?
மேற்கண்ட சுப்ரமணியர் ஞானம் நூலில் “ஆதியிலே
பராபரத்திற் பிறந்த சத்தம்” என்ற வரியின் மூலம் முதன்
முதலிலே. ஒலி தோன்றியது என்று கூறினார். ஒலி
உண்டாவதற்கு உரிய முதல் அதிர்வு நிலையே 'அ' காரம்
எனப்படுவது. இரண்டாவது அதிர்வு நிலை. நீட்டிப்புக்கு 'உ'
காரம் எனப் பெயரிட்டனா். மேற்கண்ட இரண்டு அதிர்வு
நிலைகளையும் ஒரு எல்லைக் கோட்டிற்குள் காத்து நிற்கும்
அதிர்வு நிலையை 'ம' காரம் எனப் பெயரிட்டனர்.
'அ' காரம் சாதாரண வாழ்க்கையில் மனிதன். முதல்
ஜீவராசிகள் வாயைத் திறக்கின்றபோது எழுகின்ற ஓசையே
௮! காரம் எனப்படுவது. அதைத்தான் வள்ளுவர் “அகரமுதல
எழுத்தெல்லாம் ஆதிபகவன் முதற்றே உலகு" என்றார்.
மேற்கண்ட வள்ளுவர் குறள் மூலமும் ஆதிபகவானாகிய
ஜோதியில் தோன்றிய ஒவியையே “த/காரம் என்று
குறிப்பிடுவதைக் காணலாம். இதன்முலம் ஆதியில் தோன்றிய
ஒலிக்கு “அகாரம் என்று பெயர் வைத்தனர் என்பது
மிகளினாகிறக.
‘அ’ மேற்கண்ட அகர ஒலி பிறந்ததும் அந்த ஒலி
நிற்கும் வரை ஒலிக்கின்ற சத்தத்திற்கு ஊங்காரம் என்று பெயர்,
'அ' காரம் வாயைத் திறக்கும். ஒலி திறந்த பின்பு ஏற்படும்.
அதிர்வு ஒலி ‘உ’ காரம் ஆகும் என்பதை புரிந்து கொள்ள
வேண்டுகிறோம்.
“ம’ மேற்கண்ட 'அ' ௨', கார ஒலிகள் அதிர்வுகள்
இரண்டையும் தாங்கி நிற்கின்ற அதிர்வு நிலை ஓன்று உண்டு.
அதுவே 'ம' காரம் எனப்படும்.
மேற்கண்ட விசயத்தை எப்படி நிரூபணம் செய்வது?
என்ற கேள்வி எழுவது இயல்பு, அண்டத்தில் உள்ளது
பிண்டத்திலும் உண்டு என்பது யதார்த்தமான யாவரும் அறிந்த
உண்மை அந்த அடிப்படையில் அ’௨'ம' காரங்கள்
பிண்டத்தில் எப்படி செயல்படுகிறது? என்பதைப் பார்ப்போம்.
பிண்டத்தில் “அ, உ, “ம” காரம் விளங்கும் இடம்:
நமது மூக்குத் துவாரத்தின் இடது நாசியில் ஒருகின்ற
சுவாசத்திற்கு “அ’ காரம் எனவும் வலது நாசியில் ஓடுகின்ற
சுவாசத்திற்கு உ' காரம் எனவும் கூறப்படுகிறது.
இடகலையின் (இடதுநாசி) அதிர்வு நிலை 'அ' காரம்.
பிங்கலை (வலதுநாசி) அதிர்வு நிலை 'உ' காரம் எனப்படும்.
நாம் பேசத் துவங்கும்போது இரண்டு நாடிகளும் அதிரும்.
இதனால் மண்டை ஓட்டின் நடுவில் ஒரு ஒலி அதாவது. அதிர்வு
தோன்றும், அதுவே ம' காரம் ஆகும். இந்த மூன்று
அதிர்வுகளும் சேர்ந்த இடமே ஓங்காரம் அதாவது பிரணவம்
ஆகும். இதுவே நடு ஒலியின் பிறப்பிடமான சுழிமுனை ஆகும்.
இது இயங்குகின்ற உச்சி முடிவே மண்டை ஓட்டின் நடுவிலுள்ள
கபாலமாகும்.
“௮” என்ற எழுத்து இடைநாடி இடது கண்பார்வையோடு
பொருந்தியது.
“௨” என்ற எழுத்து பிங்கலை நாடி வலது கண்பார்வையோடு
பொருந்தியது,
“ம” என்பது உச்சியில் (சிரசில்) உள்ள அதிர்வுநிலை.
இதுவே சுழிமுனை நாடியில் உள்ள ஆன்ம ஒளி
(அந்தரங்க தீட்சானிதி - 24)
அகவே பிண்டத்தில் ஏற்படுகின்ற அ, ௨, ம அதிர்வு
நிலையால் சரீரம் இயங்குகிறது. அதேபோல் அண்டத்தில். ஏற்பட்ட மூலமான
'அ, ௨, ம' என்ற முன்றும் சேந்து அண்டத்தை இயக்குகிறது
என்பதை எளிதாகப் புரிந்து கொள்ளலாம்.
அண்டங்கள், பிண்டங்கள், பேரண்டங்கள், பிரபஞ்சங்கள்
அத்தனைக்கும் முலகாத்தாவாக இயங்குவது அ, உ, ம. இந்த
முன்றும் சோந்த எழுத்தான 'ஓம்' என்கிற பிரணவமே .
அதைப்பற்றி அகத்தியர் என்ன கூறுகிறார் என்பதைப் பாப்போம்.
“ஓமென்றார் பிரணவமே ஆதி வஸ்து
உலகமெல்லாந் தானிறைந்த ஓம் சத்தி
தாமென்ற சத்தியடா எங்குந்தானாய்ச்
சதா கோடி மந்திரத்துக்கு உயிராய் நின்று
ஆமென்று வாடினது ஓங்காரந்தான்
அடிமுடியாய் நின்றதுவும் ஓங்காரந்தான்
நாமென்ற ஒங்காரந் தன்னிலேதான்
நாடிநின்ற எழுவகையும் பிறந்தவாரே''
- செளமிய சாகரம் - 186
மேற்கண்ட பாடல் மூலம் ஓம் என்கிற பிரணவம்தான்
ஆதி என்பது. அந்த ஆதி வஸ்துவே உலகமெல்லாம் நிறைந்து
நிற்கின்ற சக்தி, அந்த சக்தியே எங்கும் செயல்படுகிறது.
100 கோடி மந்திரத்துக்கும் உயிர் ஒங்காரம்தான். முதலும்
முடிவுமாக இருப்பதுவும், ஓங்காரம்தான் இந்த ஓங்காரத்திலே
இருந்துதான் எழுவகை பிறப்பு உண்டாயிற்று என்று விளக்கம்
புரிகிறது.
“ஓம்” என்கிற இந்த ஒங்காரம்தான் இந்த பிரபஞ்ச
அணிட, பேரண்ட, சகலஜிவராசிகளுக்கு மூலம். ஆகிறது. என்பதை
தெளிவாகக் காணமுடிகிறது.
இந்த “ஓம்” என்கிற ஆதிசக்தியை இன்றைய
விஞ்ஞானத்தோடு ஒப்பிட்டுப் பார்ப்போம்.
இந்தப் பிரபஞ்சம் தொடங்குவதற்கு முன்பாக அதன்
நிறம் ஜோதியாக இருந்தது என்பதைப் பார்த்தோம். ஜோதி
என்றாலே உஷ்ணத்தின் வெளிப்பாடாக இருந்தாக வேண்டும்.
இப்பிரபஞ்சத் தோற்றமான ஜோதியானது ஆவியாக கனலாக
இருந்திருக்க வேண்டும். அந்த ஆவிக் கனலானது பல
அடுக்குகள் கொண்ட அளவிடமுடியாத உஷ்ணத்தோடூ
கூடியதாக இருந்திருக்க வேண்டும். ஆதிசக்தியின்
உஷ்ணநிலையானது பல ஆயிரக்கணக்கான சூரியன்களின்
உஷ்ணத்தைவிட அதிகமாக இருந்திருக்க வேண்டும்.
இப்படிப்பட்ட பயங்கரமான உஷ்ணம் இருக்கின்ற இடத்தில்
எந்த. ஒரு பொருளும் மூலக்கூறுகளாகவோ அணுவாகவோ
இருந்திருக்க முடியாது. வெட்டவெளி ஜோதியின் உஷ்ணம்
குளிர்ந்தவுடன், நியூட்ரான்௧கள் உண்டாயின. நியூட்ரானிவிருந்து
எலக்ட்ரான் பிறந்தது பின்பு புரோட்டான் பிறந்தது. இவைகள்
ஒன்றோடு ஒன்று இணைந்து சுற்ற ஆரம்பித்து அணுக்களாக
மாறின. ஆதியிலே தோன்றியது அளவு கடந்த உஷ்ணத்தால்
ஏற்பட்ட கொந்தளிப்பால் கொப்பளித்து வெடித்தது. வெளிவந்த
ஆற்றலே மேற்கண்ட மூல அணு, இதைத்தான் சுப்ரமணியர்
ஞானத்திலே கூறுகின்றபோது “ஆதியிலே பராபரத்திற் பிறந்த
சத்தம்” என்று கூறுகிறார். . ஆசுவே. இந்த பிரபஞ்ச மூல
ஆற்றலானது ஆதியிலே அணுவாகவோ! துகளாகவோ! இல்லை
அவை உஷ்ண சத்தியான ஜோதியாக இருந்தது என்பதே
_ சித்தர்கள் வாக்கு. இன்றைய விஞ்ஞானம் இதை ஒத்துக்
.. கொண்டதாக வேண்டும். இதில் கடுகளவும் சந்தேகம். இல்லை.
ஆகவே நியூட்ரான், புரோட்டான், எலக்ட்ரான் மூன்றும் சேர்ந்து
"ஓர் அணு என்கிறோம். ஐந்தே அதே ஆற்றலான அ, ௨, ம மூன்றும்
சேர்ந்ததும் ஓம் என்கிற அணுவே. இங்கே ஓர் வித்தியாசம்
உண்டு. எலக்ட்ரான், நியூட்ரான், புரோட்டான் போன்ற
அணுக்களை மேலும் மேலும் பிரித்துக் கூறாக்கலாம். அனால்
“ஓம்” என்று கூறுகிற அணுவை பிரித்துக் கூறுபோட முடியாது.
இதுவே “பரமாணு” என்பது. பரமாணு என்றால் பிரிக்கமுடியாத
அணு என்று பொருள். இந்தப் பிரிக்க முடியாத ஆதி
அணுவிலிருந்துதான் அண்டங்கள், பேரண்டங்கள், பிரபஞ்சங்கள்
தோன்றியன. “ஓம்” என்பது பரமாணுதானா என்பது கேள்வி.
அதைப்பற்றி திருமூலா என்ன சொல்கிறார் என்பதைப் பார்ப்போம்,
அணுவில் அணுவினை ஆதிபிரானை”
அணுவில் அணுவினை ஆயிரங் கூறிட்டு
அணுவில் அணுவினை அணுகவல்லார்க்கு
அணுவில் அணுவினை அணுகலுமாமே!"
திருமந்திரம் - 200
மேற்கண்ட பாடல் மூலம் “அணுவில் அணுவினை
ஆதிபிரானை” என்ற வரியின் மூலம் பிரிக்க முடியாத
பரமாணுதான் ஆதிசக்தி என்பது நமக்குத் தெளிவாகப் புரிகிறது.
இந்தப் பிரபஞ்சம் தோற்றத்திற்கு காரணமான மூல அணுவை
விஞ்ஞானிகள் கண்டுபிடித்து ஆய்வுப் பொருள் ஆக்க 100
சதவிகிகம் முடியாது. ஒருவேளை ஆய்வுப் பொருள் ஆக்கி
கண்டுபிடிக்க நேர்ந்தால் உலகம் அழியும். கடுகளவும்
சந்தேகமில்லை.
*அ'உ'காரம் இன்னொரு விளக்கம்*
“ஆதியிலே பராபரத்திற் பிறந்த சத்தம்” என்று
சுப்ரமணியர் ஞானத்தில் படித்தோம். அந்த சத்தத்திற்கு
பெயர்தான் நாதம் என்று பெயர் வைத்தனர். சத்தம் பிறந்த
'இடத்திலே ஒளி நிச்சயமாகப் பிறக்கும். அதற்கு “விந்து”
என்று பெயரிட்டனர். எப்படி சத்தம் (ஒலி) பிறந்த. இடத்திலே
ஒளி பிறக்கும்? என்பது எல்லோருக்கும் எழுகின்ற கேள்வியே.
உதாரணமாக இரண்டு பனிப்பாறைகள் மோதுவதை இடி என்று
சொல்கிறோம். இடி இடித்ததும். அதாவது பனிப்பாறைகள்
மோதல் உண்டானதும் முதலில் ஏற்படுவது சத்தம் (ஒலி)
அதன்பின்பு பனிப்பாறை மோதவினால் உண்டான வெளிச்சம்
(ஒளி) கையிலே இரண்டு வெண் கற்களை எடுத்துக் கொண்டு
மோதவிட்டால் முதல் மோதலில் சத்தம் அதன் பிறகு வெளிச்சம்
(நெருப்பு) உண்டாவதை எளிதில் காணலாம். பூமியிலிருந்து
பல்லாயிரக்கணக்கான மைல் உயரத்தில் பனிப்பாறை
மோதுகின்ற போது எழுகின்ற வெளிச்சம். உடனே நமது
கண்ணுக்கு தெரிகிறது. அதன் பின்பு இடி ஓசை அதாவது
தாமதமாக காதில் விழுகிறது , காரணம், ஒரிக்கதிர்கள்,
வேகமாகப் பரவும் தன்மை கொண்டவை. அதனால் இடியின்
ஒளி நமக்கு உடனே பார்க்க முடிகிறது. ஒசையின் தன்மை
வேகம் குறைவு அதனாலே நமது காதில் தாமதமாக விழுகிறது
என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
ஒலியை நாதம் என்றும் ஒளியை விந்து என்றும்
சித்தாகள் கூறினார்கள். ஒலி, ஒளி என்ற இந்த இரண்டு
ஆற்றல்தான் பிரபஞ்சத்தை இயக்குகின்றன. இவையே சில,
சக்தியாக சூரியர் சந்திரனாக, ஆண்சக்தி, பெண்சக்தியாக
வடிவமாய் இயங்குகின்றன. இதைப்பற்றி அகத்தியர் என்ன
கூறுகிறார் என்பதைப் பார்ப்போம்.
ஜீவாத்மா பரமாத்மா தத்துவம்
தானென்னற சூட்சமடா விந்து நாதம்
தனையறிந்து நாதமுடன் விந்து சேர்ந்து
கோவனன்ற குருவருளால் அங்குதித்து
கொண்டெழுந்த மடபதியை என்ன சொல்வேன்
ஊனென்ற மடபதிக்கு உறுதியான
உண்மையுள்ள அக்னியும் வாயுவுங் கூடி
தேனென்ற ஜீவாத்மா பரமாத்மாவாய்
மெசென்றிருந்து ஆதாரம் ஆனார் பாரே
- சௌமிய சாகரம். - 023
மேற்கண்ட பொருளானது விந்து, நாதம். என்பதே ஒரு
சூட்சுமமான சக்தி. அந்த சக்திகளான நாதம் (ஒலி) விந்து
(ஒளி) ஒலியோரு ஒளி சேருகின்ற போது ஒரு. வேதியியல்
மாற்றம் நடைபெறுகிறது. அந்த வேதியியல் மாற்றமே அக்னி,
வாயு என்ற இரண்டு. சக்திகள் அண்டங்களுக்கும்,
பிண்டங்களுக்கும் ஜீவன்களுக்கும். ஆதாரமாக. இயக்கத்தை
நடத்திக் கொண்டு இருக்கின்றன என்றார்.
மேற்கண்ட பாடல் மூலமும் அக்னியும், வாயுவும் தான்
பிரபஞ்சத்தை இயக்கிக் கொண்டு இருக்கின்றன என்பதை
அகத்தியர் கீழ்வரும் பாடல் மூலமும். காணலாம்.
“நேரப்பா அக்னிதான் ஜீவாத்மாவாய்
நிறைந்து நின்ற வாய்வதுதான் பரமாத்வாய்”'
பேரப்பா பெருகி நின்ற கடத்தினுள்ளே
பிலமாக நின்று திருவிளையாட்டாடி”'
என்பதைக் காணலாம்.
- செளமிய சாகரம். - 024
அக்னி, வாயு இரண்டூம். கூடித்தான் அண்டபிண்டங்களை
இயக்குகின்றன என்பதைப் பார்த்தோம்.