உத்கீத தியானம் - பகுதி - 3 (ஓங்காரம் செல்வ வளத்தைத் தருவது எப்படி)
![]() |
உத்கீத தியானம் |
ஓங்காரம் சம்மதத்தைத் தெரிவிக்கின்ற எழுத்தாகும். எதையும் ஏற்றுக்கொள்கின்ற ஒருவன் 'ஓம்' என்றே கூறுகிறான். ஏற்றுக் கொள்வதே செல்வ வளத்தை அடைவது. இவ்வாறு உணர்ந்து ஓங்காரத்தைத் தியானிப்பவனுடைய எல்லா ஆசைகளும் நிறை வேறுகின்றன.
ஓங்கார மந்திரம் மந்திரங்களின் அரசனாகப் போற்றப் படுகிறது. அதன் உச்சரிப்பு மற்றும் ஓசையைத் தியானிப்பது பற்றி சாம வேதம் பேசுகிறது; அதன் பொருளைத் தியானிப்பது பற்றி மாண்டூக்யம் பேசுகிறது.
அன்றாட வாழ்க்கையில், வைதீக கர்மங்களில், குறிப்பாக, யாகங்களில் எப்படி ஓங்கார மந்திரம் பயன்படுகிறது என் பதைத் தைத்திரீயம் கூறுகிறது. 'ஆம்' என்று சொல்வதற்கும், அனுமதி அளிப்பதற்கும் ‘ஓம்' என்று சொல்வதாக அந்த மந்திரம் குறிப்பிடுகிறது. சாம வேதத்தின் இந்த மந்திரம் அதையே பேசுகிறது.
இதன்மூலம், அன்றாட வாழ்க்கையில் நாமும் அந்த மந்திரத்தை ஏற்றுக்கொண்டு, பயன்படுத்த முடியும்; இவ்வாறு எப்போதும் ஓங்கார தியானத்தில் ஈடுபட முடியும் என்பது சுட்டிக்காட்டப்படுகிறது.
இத்தகைய ஓங்கார தியானத்தால் என்ன பலன் என்று பார்க்கலாம்.
‘ஓ என்கிற ஓங்காரத்தை பிந்துவுடன் கூடியதாக, அதாவது, “*ம்*” என்று எழுத்தையும் சேர்த்து இசை கூட்டி தினமும் தியானிப்பவன் என்ன விரும்புகிறானோ அது கிடைக்கும் அவன் செல்வ வளத்தை விரும்பினால் அது கிடைக்கும்; மோட்சத்தை நாடினால் அது கிடைக்கும். அந்த ஓங்காரப் பரம்பொருளை வணங்குகிறேன்' என்கிறது சுலோகம் ஒன்று.'
இந்த உண்மையை உணர்ந்து, ஓங்காரத்தை உச்சரித்து, ஒருவன் ஓங்கார தியானம் செய்தால் அவன் செல்வ வளம் பெறுகிறான்; அதாவது, எல்லா ஆசைகளும் நிறைவேறப் பெறுகிறான். இதுவே இந்த உத்கீத வித்யையின் பலன்.
அடுத்த பதிவு ஓங்காரத்தின் மகிமையை பற்றி பார்ப்போம்.
இஎஸ்.நக்கீரன்
கிருஷ்ணகிரி
+917904599321
நன்றி
சிவயநம