Type Here to Get Search Results !

Translate

தேவதா-சூரிய-உத்கீத தியானங்கள் -தியான பயிற்சி

தேவதா-உத்கீத தியானங்கள்

தியான பயிற்சி
தியான பயிற்சி 

இந்தப் பகுதியில் வருபவை அதிதைவத தியானங்கள்; அதாவது, பல் வேறு தேவதைகளை உத்கீதமாகத் தியானிக்கின்ற முறைகள். அதிதைவத தியானங்கள் என்று உபநிஷதம் கூறினாலும் சில அத்யாத்ம தியானங்களும் இதில் கலந்துள்ளன.

சூரிய-உத்கீத தியானம்

சூரிய தேவனை உத்கீதமாகத் தியானிப்பது இந்த உபாசனை. சூரிய தேவனுக்கும் ஓங்கார மந்திரத்திற்கும் நான்கு ஒற்றுமைகள் இருப்பதால் இரண்டையும் இணைத்து இந்தத் தியானம் செய்யப்படுகிறது.

இனி, அதிதைவத தியானங்கள் கூறப்படுகின்றன.

அங்கே தகிக்கின்ற சூரியனை உத்கீதமாகத் தியானிக்க வேண்டும். சூரியன் உதிக்கும்போது உயிர்களுக்காக உரக்கப் பாடுகிறான். அவன் இருளையும் பயத்தையும் விலக்குகிறான். இவ்வாறு யார் அறிகிறானோ அவனிடமிருந்து இருளும் பயமும் விலகுகின்றன.

i. சூரியன் உதித்தெழுகிறான்; உத்கீதம், அதாவது, சாம கானத்தில் இசைக்கப்படுகின்ற ஓங்கார மந்திரம், உச்ச ஸ்வரத்தில் எழுப்பப்படுகிறது.

ii. ஆற்றலையும் மழையையும் தந்து சூரியன் வாழ்க்கைக்கு வளம் சேர்க்கிறான்; ஓங்கார மந்திரம், ஜபிப்பவர்கள் மற்றும் தியானிப்பவர்களின் வாழ்க்கையில் வளம் சேர்க்கிறது. ரிக் மற்றும் யஜுர்வேதங்களில் ஓங்கார மந்திரம் சாதாரண ஸ்வரத்தில் உச்சரிக்கப்படுகிறது. சாம கானத்தில் மட்டும் ஆரம்பத்திலேயே உச்ச ஸ்வரத்தில் ஓங்கார மந்திரம் இசைக்கப் படுகிறது. யாகத்தைச் செய்பவருக்கும் மற்ற உயிர்களுக்கும் இதன் வாயிலாக செல்வ வளம் சேர்கிறது. சூரியனிலிருந்து

கிரணங்கள் உதித்தெழுவது சாம கான புரோகிதரின் உத்கீத இசைக்கு ஒப்பிடப்படுகிறது. சூரிய தேவன் தனது கிரணங் களால் உலகிற்கு வளம் சேர்ப்பது போல் புரோகிதரும் தன் ஓங்கார இசையால் எல்லோருக்கும் செல்வ வளம் சேர்க்கிறார்.

iii. சூரியன் உதித்தெழும்போது இருள் விலகுகிறது, பயம் அகல்கிறது; ஓங்கார மந்திரம் அறியாமை இருளை அகற்றுகிறது, சம்சார பயத்தைப் போக்குகிறது.

இவ்வாறு பல ஒற்றுமைகள் இருப்பதால் சூரிய தேவனை உத்கீதமாகத் தியானிக்கச் சொல்கிறது இந்த வித்யை. இந்த உண்மையை உணர்ந்து சூரிய-உத்கீத தியானத்தைச் செய்ப வனின் அறியாமை இருளும் சம்சார பயமும் அகல்கின்றன.

பிராண-சூரிய-உத்கீத தியானம்

பிராணனையும் சூரிய தேவனையும் உத்கீதமாகத் யொனிக்க வேண்டும். மனிதப் பகுதியான பிராணனும், தேவ சக்தியான சூரிய தேவனும் இந்தத் தியானத்தில் இணைவதால் இது அத்யாத்ம-அதிதைவத தியானம் ஆகிறது.

உடலில் செயல்படுகின்ற பிராணனும் அங்கே தகிக்கின்ற சூரிய தேவனும் ஒன்றே. இரண்டும் சூடாக உள்ளன; இரண்டும் ஸ்வரங்களாகவும் உள்ளன. சூரிய தேவனை ‘ஸ்வரம்' என்றும் பிராணனைப் 'ப்ரத்யாஸ்வரம்' என்றும் அழைக்கிறார்கள். எனவே இந்தப் பிராணனையும் அந்த சூரியனையும் ஓங்காரமாகத் தியானிக்க வேண்டும்.

பல ஒற்றுமைகளின் காரணமாக பிராணனும் சூரியனும் ஒன்றாகக் கருதப்படுகிறார்கள்.

 i. பிராணன் உடம்பிற்குச் சூட்டைத் தருகிறது; பிராணன் பிரிந்த உடம்பு குளிரத் தொடங்கிவிடுகிறது. சூரியன் உலகிற்கே சூட்டைத் தருகிறான்.

ii. பிராணன், சூரிய தேவன் ஆகிய இருவரும் ஸ்வரங் களாக உள்ளனர். ‘ஸ்வரம்' என்ற சம்ஸ்கிருதச் சொல்லிற்குப் பல பொருள்கள் உள்ளன. அவற்றுள் 'இசையுடன் பாடப்படு வது', 'பிரிந்து செல்வது' என்பவை இரண்டாகும். சூரிய தேவன் தினமும் பிரிந்து செல்கிறான், அதாவது மறைகிறான்; (ஆனால் திரும்பியும் வருகிறான்-ப்ரதி ஆஸ்வர:). பிராணன் உடம்பை விட்டுப் பிரிந்து செல்கிறது (ஆனால் திரும்பி வருவ தில்லை). இந்தக் கோணத்தில் பிராணன், சூரிய தேவன் ஆகிய இருவருமே ஸ்வரங்கள் ஆகின்றனர்.

உத்கீதமோ இசையுடன் பாடப்படுவதால் ஸ்வரம் ஆகிறது.

இத்தகைய ஒற்றுமை காரணமாக பிராணனையும் சூரிய தேவனையும் உத்கீதமாகத் தியானம் செய்ய வேண்டும்.

வியான-உத்கீத தியானம்

வியானனை ஓங்கார மந்திரமாகத் தியானிப்பது.

இப்போது வியானனை ஓங்காரமாகத் தியானம் செய்வதுபற்றி பார்ப்போம்:

எது வெளிமூச்சோ அது பிராணன். எது உள்மூச்சோ அது அபானன். பிராணன் மற்றும் அபானன் இணையும் இடம் வியானன். எது வியானனோ அது வாக்கு. எனவே வெளிமூச்சு விடாத மற்றும் உள்மூச்சு வாங்காத நிலையிலேயே ஒருவன் பேசுகிறான்.

பிராண சக்தி மனித உடம்பில் முக்கியமாக ஐந்து வித மாகச் செயல்படுகிறது. ஒவ்வொரு செயல்பாட்டிலும் அது ஒவ்வொரு பெயர் பெறுகிறது. இவற்றுள் வெளிமூச்சு பிராணன் எனப்படுகிறது, உள்மூச்சு அபானன் எனப்படுகிறது. மூச்சை வெளியே விட்டு மீண்டும் உள்ளே இழுப்பதற்கு முன்புள்ள

இடைவெளியும், அதுபோலவே மூச்சை உள்ளிழுத்து மீண்டும் வெளியே விடுவதற்கு முன்புள்ள இடைவெளியும் வியானன் எனப்படுகிறது.'

வியானனே வாக்கு என்கிறது மந்திரம். இங்கே வாக்கு என்ற செயல் எல்லா புலன்களின் செயல்பாடுகளையும் குறிக் கிறது. அதாவது, மூச்சை உள்ளிழுக்காத நிலையிலும் வெளி விடாத நிலையிலுமே எல்லா செயல்களும் நடைபெறுகின்றன. மிகவும் ஆச்சரியமானதும் கவனிக்கத்தக்கதுமான உண்மை இது. நாம் மூச்சு விடும்போது பேசவோ வேறு எந்தச் செயல்களைச் செய்யவோ இயலாது. புலன்கள் செயல்படுகின்றபோது மூச்சு தடைபடுகிறது. கூர்ந்து கவனித்தால் இந்த உண்மையைப் புரிந்து கொள்ளலாம்.

வியானன் செயல்படுகின்ற, அதாவது பிராணனும் அபானனும் செயல்படாத நிலையிலேயே மற்ற எல் செயல்பாடுகளும் நடைபெறுகின்றன. எனவே ஒருவகையில் வியானனே எல்லா செயல்களுக்கும் ஆதாரம் என்று கூறலாம்.

இந்த வியானனை உத்கீதமாகத் தியானிப்பது வியானஉத்கீத தியானம்.

» எது வாக்கோ அது ரிக். எனவே வெளிமூச்சு விடாத, உள்மூச்சு இழுக்காத வேளையிலேயே ஒருவன் ரிக் மந்திரங்களை உச்சரிக் கிறான். எது ரிக் மந்திரமோ அதுவே சாம கானம். எனவே வெளி மூச்சு விடாத, உள்மூச்சு இழுக்காத வேளையிலேயே ஒருவன் சாம கானத்தை இசைக்கிறான். எது சாம கானமோ அதுவே உத்கீதம். எனவே வெளிமூச்சு விடாத, உள்மூச்சு இழுக்காத வேளையிலேயே ஒருவன் உத்கீதத்தை இசைக்கிறான். உ

ரிக் மந்திரங்களும் வாக்கினாலேயே உச்சரிக்கப்படு கின்றன. எனவே வாக்கே ரிக் மந்திரம் என்று கூறப்படுகிறது. ரிக் மந்திரங்களை இசையுடன் பாடுவதே சாம கானம். சாம கானத்தின் ஒரு பகுதியே உத்கீதம். வெளிமூச்சு விடாத, உள்மூச்சு இழுக்காத நிலையே வியானன் செயல்படுகின்ற நிலை. மற்ற செயல்களைப் போலவே ரிக் மந்திரங்களை உச்சரிப்பதும், சாம கானம் பாடுவதும், உத்கீதம் இசைப்பதும் எல்லாம் வியானன் செயல்படுகின்ற போதே நடைபெறுகின்றன. அதாவது, வியானனால்தான் நடைபெறுகின்றன.

அரணிக்கட்டைகளைக் கடைந்து அக்கினி மூட்டுதல், ஓர் இலக்கை அடைவதற்காக நடைபெறுகின்ற ஓட்டப்பந்தயம், திட மான வில்லை விளைத்தல் போன்ற வலிமை மிக்க செயல்களை ஒருவன் வெளிமூச்சும் உள்மூச்சும் இயங்காத நிலையிலேயே செய்கிறான். (அது வியானன் செயல்படுகின்ற நிலை.) எனவே வியானனையே உத்கீதமாகத் தியானிக்க வேண்டும்.

வலிமையுடன் செய்ய வேண்டிய செயல்களையும் மூச்சுவிடாத நிலையிலேயே, அதாவது, வியானன் செயல் படுகின்ற நிலையிலேயே ஒருவன் செய்ய இயலும். இப்படி செயல்களின் ஆதாரமாக இருப்பதால் வியானனையே ஒருவன் உத்கீதமாக தியானிக்க வேண்டும்.

உத்கீத எழுத்துக்கள்-உத்கீத தியானம்

'உத்கீதம்' என்ற வார்த்தையைத் தனித்தனியாக உத்கீத மாகத் தியானிப்பது இந்தத் தியானம். உத்கீதம் என்ற சொல் லின் ஒவ்வோர் எழுத்திற்கும் மகிமை உள்ளது ; எனவே அவற்றைத் தனித்தனியாக உத்கீதமாகத் தியானிக்கலாம்.

இனி ‘உத்', 'கீ' ‘த' என்று உத்கீத எழுத்துக்களைப் பிரித்து அவற் றைத் தனித்தனியாக உத்கீதமாகத் தியானிப்பதுபற்றி பார்ப்போம்: பிராணனே ‘உத்'; ஏனெனில் பிராணனாலேயே ஒருவன் எழுகிறான். வாக்கே 'கீ'; ஏனெனில் வாக்கே சொல் எனப்படுகிறது. உணவே 'த'; ஏனெனில் அனைத்தும் உணவிலேயே நிலைபெறுகின்றன.

உத்கீதம் என்ற சொல் உத் +கீ+தம் என்று பிரிக்கப் படுகிறது.

‘எழுகிறான்' என்பதற்கு சம்ஸ்கிருதத்தில் உத்+திஷ்டதி என்றாகும். 'திஷ்டதி' என்றால் அமர்ந்திருப்பது. அதனுடன் 'உத்' சேரும்போது 'எழுகிறான்' என்றாகிறது. எழுவதற்கு ஆற்றல் அல்லது பிராணன் தேவை. எனவே பிராணன் 'உத்' எனப்படுகிறது.

வாக்கு அல்லது சொல் என்பதற்கு சம்ஸ்கிருதத்தில் 'கிர:' என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. 'கிர:' என்பது 'கீ' ஆகிறது. எனவே 'கீ' என்றால் வாக்கு.

ஆதாரம் என்பதற்கு சம்ஸ்கிருத சொல் 'ஸ்த:', 'ஸ்த:' என்பதில் 'த' உள்ளது. 'த' என்றால் ஆதாரம். அனைத்து உயிர் களுக்கும் ஆதாரமாக இருப்பது உணவு. எனவே 'த' என்றால் உணவு என்றாகிறது.

இவ்வாறு உத்கீதம் என்ற சொல்லின் ஒவ்வோர் எழுத்தையும் ஓங்காரமாக தியானிக்கும்போது பிராணன், வாக்கு, உணவு ஆகியவற்றை ஓங்காரமாகத் தியானித்தது ஆகிறது.

தேவதை-உத்கீத தியானம்

சொர்க்கம், பித்ருலோகம், பூலோகம், சூரியன், வாயு, அக்கினி, சாமவேதம், யஜுர்வேதம், ரிக்வேதம் ஆகிய ஒன்பதும் ஒன்பது தேவதைகளாக பாவிக்கப்பட்டு அவர்களை உத்கீதத்தின் எழுத்துக்களாகத் தியானிக்கின்ற வித்யை இது. ,

சொர்க்கமே உத், பித்ருலோகம் கீ, பூமி த; சூரியனே உத், வாயு கீ, அக்கினி த; சாமவேதமே உத், யஜுர்வேதம் கீ, ரிக்வேதம் த. இந்த உண்மைகளை உணர்ந்து, உத்கீதத்தின் உத், கீ, த ஆகிய எழுத்துக்களை யார் ஓங்காரமாக தியானம் செய்கிறானோ, அவனுக்கு வாக்கின் பலனான பாலை வாக்கு தருகிறது; அவன் ஏராளம் உணவைப் பெறுகிறான், உண்பவன் ஆகிறான்.

மூன்று தொகுதிகளின் தியானம் இங்கே கூறப்படுகிறது; ஒவ்வொரு தொகுதியையும் உத்கீதத்தின் உத், கீ, த ஆகிய எழுத்துக்களாகத் தியானிப்பது இது.

இந்தத் தியானங்களுக்கு இரண்டு பலன்கள் கூறப் படுகின்றன:

i. வாக்கின் பலனான பாலை வாக்கு அவனுக்குத் தரு கிறது. நல்வாக்குகளை, உயர்ந்த மந்திரங்களை உச்சரிப் பதே வாக்குசக்தியின் பலன். மந்திரங்களில் மிக மேலானவை ரிக்வேத மந்திரங்கள். அந்த ரிக்வேத மந்திரங்களை உச்சரிக்கின்ற ஆற்றல் இந்தத் தியானம் செய்வதால் கிடைக்கிறது.

ii. இந்தத் தியானம் செய்பவன் ஏராளம் உணவைப் பெறுகிறான் ; உணவை உண்பவனாகவும் ஆகிறான். வகைவகையாக இருந்தால் மட்டும் போதாது. அவற்றை உண்பதற்கான உணவு பேறும் பெற்றிருக்க வேண்டும். அந்தப் பேற்றை தீவிரமான பசி (தீப்த அக்னி:) என்று விளக்கு கிறார் ஸ்ரீசங்கரர். உணவை உண்ண வேண்டுமானால் அதற்கு நல்ல பசி வேண்டும்; நல்ல பசி வேண்டுமானால் ஜீரண சக்தி நன்றாக இருக்க வேண்டும். அது மட்டுமின்றி, நோயற்றவனாக வும் இருக்க வேண்டும். நோயற்றவனாக இருந்தால் மட்டுமே வகைவகையான உணவுகளை உண்ணவும் இயலும்.

இந்தத் தியானங்கள் வாக்கு சக்தியையும் வளமான வாழ்வையும் தரும் என்பது பொருள்.

ஆசை பூர்த்தி தியானங்கள்

சாமவேதத்தை ஓதுமுன் அது சம்பந்தமான ஒன்பது விஷயங்களை ஆழ்ந்து சிந்திப்பது பற்றிய பகுதி இது. சாமம், ரிக், ரிஷி, தேவதை, சந்தம், ஸ்தோமம், திசை, தற்சிந்தனை, விரும்பிய பொருள் ஆகியவையே அந்தச் சிந்தனைகள். இந்தச் சிந்தனைகள் எல்லா ஆசைகளையும் பூர்த்தி செய்யும் என்று கூறப்படுகிறது.

சாமகான சிந்தனை

இப்போது ஆசைகளின் பூர்த்தி பற்றிய சிந்தனைகளைப் பார்ப் போம். சிந்தனைக்கான பொருட்களைக் கீழ்க்கண்டவாறு சிந்திக்க வேண்டும்:

யாகக் கிரியையில் எந்த சாம கானத்தை இசைத்து துதிக்கப் போகிறானோ அந்த சாம மந்திரத்தை முதலில் சிந்திக்க வேண்டும்.

சிந்திக்க வேண்டிய ஒன்பது விஷயங்களில் முதலில் சாம கானத்தையே ஆழ்ந்து சிந்திக்குமாறு கூறப்படுகிறது; அதாவது, அந்த சாம கானம் எப்படி தோன்றியது, அதன் சந்தம் என்ன, எந்தத் தேவதையை அந்த கானம் துதிக்கிறது போன்றவற்றைச் சிந்திப்பதே இந்தச் சிந்தனை.

ரிக்-ரிஷி-தேவதை சிந்தனைகள்

இசைக்க வேண்டிய சாம மந்திரம் இடம்பெற்றுள்ள ரிக் மந்திரம், எந்த ரிஷியின் பெயரில் அந்த மந்திரம் இடம்பெற்றுள்ளதோ அந்த ரிஷி, எந்தத் தேவதையைப் பிரார்த்திக்க வேண்டுமோ அந்தத் தேவதை ஆகியோரைச் சிந்திக்க வேண்டும்.

ரிக்வேதத்தின் சில மந்திரங்களைத் தேர்ந்தெடுத்து அவற்றை இசையுடன் பாடுவதே சாமவேதம். ஏறக்குறைய எல்லா சாம மந்திரங்களுக்கும் அடிப்படையாகத் திகழ்பவை ரிக்வேத மந்திரங்களே. எனவே சாம மந்திரத்தை இசைக்குமுன், அந்த மந்திரத்தின் அடிப்படையாகத் திகழ்கின்ற ரிக்வேத மந்திரத்தைச் சிந்திக்க வேண்டும்.

வேதங்கள் 'அபௌருஷேயம்', அதாவது 'மனித முயற்சியால் உருவாகாதவை'. அவை இறைவனால் அளிக்கப்பட்டவை. மனித மனம் பக்குவப்படுத்தப்பட்டு, உலகத் தொடர்புகளற்ற உயர்நிலைகளில் திளைக்கும்போது, உயர் உலக உண்மைகள் அந்த மனத்தில் வெளிப்படுகின்றன. அவ்வாறு வேத கால ரிஷிகளின் மனத்தில் வெளிப்பட்ட அழியா உண்மை களே வேதங்கள். எந்த ரிஷியின் மனத்தில் குறிப்பிட்ட மந்திரம் வெளிப்பட்டதோ அந்த ரிஷியின் பெயரால் அந்த மந்திரம் வழங்கப்படுகிறது. எனவே வேத மந்திரங்களை ஓதுமுன் அந்த மந்திரங்களை வெளிப்படுத்திய ரிஷியைச் சிந்திக்க வேண்டும்.

பொதுவாக வேத மந்திரங்கள் அக்கினி, இந்திரன், வாயு போன்ற குறிப்பிட்ட ஒரு தேவதையைப் போற்றுபவையாக அல்லது அவர்களிடம் பிரார்த்திப்பவையாக அமைந்திருக்கும். எனவே அந்தத் தேவதையையும் ஆரம்பத்தில் சிந்திக்க வேண்டும்.

சந்த-ஸ்தோம சிந்தனை

துதிக்கப் போகின்ற சாம மந்திரம் எந்தச் சந்தத்தில் அமைந் துள்ளதோ அந்தச் சந்தத்தைச் சிந்திக்க வேண்டும்; அதனுடன் இணைந்த ஸ்தோம மந்திரங்களைச் சிந்திக்க வேண்டும்.

ஒரு வேத மந்திரத்தில் எத்தனை அடிகள், எத்தனை பதங்கள், எத்தனை எழுத்துக்கள் போன்றவற்றை நிர்ணயிப்பது சந்தம். குறிப்பிட்ட மந்திரம் எந்தச் சந்தத்தில் அமைந்துள்ளது என்பதைச் சிந்திக்க வேண்டும்.


சாந்தோக்ய உபநிஷதத்தின் இந்தப் பகுதியில் நாம் பார்க் கின்ற தியானங்கள் எல்லாமே யாகங்களின் அங்கங்களாகச் செய்யப்படுபவை. இன்ன யாகத்திற்கு இன்ன சாம மந்திரம் இசைக்கப்பட வேண்டும் என்ற நியதி உள்ளது. அந்த மந்திரங் களும் தொகுதிகளாக இசைக்கப்பட வேண்டும். யாகத்திற்கு ஏற்றபடி 3, 15, 17, 21 போன்ற மந்திரத் தொகுதிகள் இசைக்கப் பட வேண்டும். இந்த மந்திரத் தொகுதி 'ஸ்தோமம்' எனப் படுகிறது. இந்த ஸ்தோமத்தையும் சாம கானம் இசைக்குமுன் சிந்திக்க வேண்டும்.

பொதுவாக கர்மாங்க தியானங்களின் பலன், யாகம் யாருக்காகச் செய்யப்படுகிறதோ அந்த யஜமானனையே சேரும். ஆனால் ஸ்தோம சிந்தனையின் பலன், சிந்திப்பவரைச் சேர்கிறது.

திசை சிந்தனை

கர்மாங்க தியானங்களில் யாகங்கள் இன்ன திசையில் செய்யப்பட வேண்டும், சாம கானம் இன்ன திசையில் சைக்கப்பட வேண்டும் என்ற நியதிகள் உள்ளன. அந்த திசையைச் சிந்திக்குமாறு இங்கே உபதேசிக்கப்படுகிறது. உ

தற்சிந்தனை, ஆசை சிந்தனை

இறுதியாகத் தன்னை நினைக்க வேண்டும்; தனது ஆசைக் குரிய பொருளை நினைக்க வேண்டும். அதன்பிறகு பிழையின்றி சாம கானத்தை இசைக்க வேண்டும். அவனது ஆசை வெகு விரைவில் கைகூடும், வெகுவிரைவில் கைகூடும்.

 தியானங்கள் பல்வேறு ஆசைகளைப் பூர்த்தி செய்து கொள்வதற்கானவை ஆகும். இதில் ஒன்பது சிந்தனைகளைக் கண்டோம். சாம கானம் இசைப்பவன் இறுதியாகத் தன்னையே நினைக்க வேண்டும்; பிறகு தனது ஆசைக்குரிய பொருளை நினைக்க வேண்டும். அதன்பிறகு சாம கான இசையைத் தொடங்க வேண்டும், பிழையின்றி இசைக்க வேண்டும். இப்படிச் செய்தால் அவனது ஆசை நிறைவேறும். 'ஆசை வெகு விரைவில் கைகூடும்' என்று இரண்டுமுறை கூறியிருப்பது, இந்த தியானம் உறுதியாகப் பலனளிப்பது என்பதைத் தெரிவிப்பதற்காக ஆகும்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad