Type Here to Get Search Results !

Translate

உத்கீத தியானம் - பகுதி 1 ( ஓங்காரம் அனைத்திற்கும் சாரம் ) - தியான பயிற்சி - 1

உத்கீத தியானம் - பகுதி 1 ( ஓங்காரம் அனைத்திற்கும் சாரம் )
ஓங்காரம்
ஓங்காரம்

உயிர்கள் அனைத்தின் சாரமாக பூமி திகழ்கிறது. பூமியின் சாரம் தண்ணீர். தண்ணீரின் சாரம் தாவரங்கள். தாவரங்களின் சாரம் மனிதன். மனிதனின் சாரம் வாக்கு. வாக்கின் சாரம் ரிக் மந்திரம் ரிக் மந்திரத்தின் சாரம் சாம மந்திரம். சாம மந்திரத்தின் சாரம் ஓங்காரம்.


  • சாரம் என்ற வார்த்தையை இடத்திற்கு ஏற்ற படி பொருள் புரிந்துகொள்ள வேண்டும். உயிர்களைத் தாங்குவ தாக, உயிர்களின் ஆதாரமாக விளங்குகிறது பூமி.
  • பூமியின்றி தண்ணீர் இல்லை, தண்ணீரின்றி பூமி செழிப்ப தில்லை. இவ்வாறு பூமியும் தண்ணீரும் ஒன்றிற்கொன்று ஆதாரமாக விளங்குகின்றன.
  • தாவரம், மிருகம், மனிதன் என்று எல்லா உயிர்களின் உடம்பிலும் தண்ணீரே பெரும் பங்கு வகிக்கிறது. இங்கே, அனைத்து உயிர்களின் பிரதிநிதியாக தாவரம் எடுக்கப்பட்டு, தண்ணீரின் சாரமாக அது கூறப்பட்டது. அதாவது, தண்ணீரின் சாரமாக பல்வேறு உயிரினங்கள் திகழ்கின்றன என்பது பொருள்.
  • தாவரம், மிருகம் என்று அனைத்து உயிரினங்களிலும் மேலானவனாகத் திகழ்பவன் மனிதன். இதனால் அவன் உயிரினங்களின் சாரமாகக் கூறப்படுகிறான்.
  • மனிதனின் ஆற்றல்களில் மிக மேலானதும், வேறெந்த உயிரினங்களுக்கும் இல்லாததுமான ஆற்றல் வாக்கு. எனவே மனிதனின் சாரமாக அது கூறப்பட்டது.
  • அறிவில் சிறந்தது ஆன்மீக அறிவு. ஆன்மீக அறிவின் சிகாமாகத் திகழ்பவை (வேதங்கள். வேதங்களைப் பாடும் (போதே வாக்கு அதன் மிகவுயர்ந்த பலனைப் பெறுகிறது. எனவே வாக்கின் சாரமாக ரிக் வேத மந்திரம் கூறப்பட்டது.
  • எந்தச் சூழ்நிலையும் இசையால் வளம் பெறுகிறது, மேன்மையுறுகிறது. ரிக்வேத மந்திரம் இசையுடன் பாடப்படும் போது சாம மந்திரம் ஆகிறது. இவ்வாறு இசையால் மேன்மை யுற்றுச் சிறப்பு பெறுவதால் ரிக் மந்திரத்தின் சாரமாக சாம மந்திரம் கூறப்பட்டது.
  • சாம மந்திரத்தின் சாரமாகத் திகழ்வது இசையுடன் பாடப்படுவதான ஓங்காரம் அல்லது உத்கீதம்.

ஓங்காரமாகிய உத்கீதம் சாரங்களுக்கெல்லாம் சாரமானது, மேலானது, மிகவும் போற்றத்தக்கது; இந்த வரிசையில் எட்டாவதாக வருவது.

பூமியிலிருந்து தொடங்கி ஓங்காரம் வரை ஒன்றன்பின் ஒன்றாக எட்டு சாரங்களைக் கண்டோம். அனைத்தின் சாரமாகத் திகழ்வது எட்டாவதான ஓங்காரம். இவ்வாறு ஓங்காரத்தை அல்லது உத்கீதத்தை அனைத்தின் சாரமாகத் தியானிக்கச் சொல்கிறது இந்த மந்திரம். இது முதல் வகை உத்கீத தியானம் ஆகும்.


அதாவது இந்த அண்ட சராசரங்களும் பிரபஞ்சமே ஓங்காரமாக நினைத்து மனதை ஒரு நிலைப்படுத்தி தியானிக்க வேண்டும் என்பதே உத்கீத தியானத்தின் முதல் பகுதி ஆகும்.

 மேலும் தொடர்புக்கு 
 நக்கீரன் 
+917904599321

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad