மனநிம்மதியிருந்தால் உடல் சுகம் அடையுமா?
மனித மனதில் சமாதானமிருந்தால் உடலுக்கும் சுகமே என்பது முதியோர்கள் அடிக்கடி கூறுவதுண்டு. இதன் பொருளாவது, நோய்கள் வராமலிருக்க மனதை சீர்செய்து நிறுத்த வேண்டும். மனதை நிம்மதியின் பாதைக்கு செலுத்தினால் அது உடலை நிம்மதியின் பாதைக்கு செலுத்தும்.
நோய்களு. மனிதனைப் பாதிக்கும் பல நோய்களுக்கும் காரணம் நிம்மதியின்மையே என்று விஞ்ஞானம் உறுதி செய்துள்ளது. நிம்மதி இழந்து மனப்பாரம் அதிகரிப்பதனால் உடலைப் பாதிக்கும் ஒரு நோயான 'அல்சர்' குறித்து மருத்துவத்துறை கண்டறிந்த உண்மைகள் பிரசித்தியானவை. 'டென்ஷன்' அதிகரிக்கும் போது உடலில் 'ஹைட்ரொக்லாரிக் ஆசிட்' உற்பத்தியும் அதிகரிக்கின்றது. இந்த அமிலம் சிறு குடலின் 'ம்யூகஸ்' கவசத்தில் பாதிப்புண்டாக்கி குடல் தசைகளில் இரணங்களை நிருவாக்குன்றது. உருவாக்குகின்றது. இரணங்கள் வளர்ந்து 'அல்சர்' ஆகவும் சிலநேரம் 'கான்சர்' ஆகவும் மாற்றமடைகின்றன இவ்வாறு மனிதனை பாதிக்கும் நோய்களை 'சைகோசமாடிக் நோய்கள் என்று அழைக்கப்படும் மனதிலுள்ள பாதிப்பு வளர்ந்து உடலில் நோயாக உருவெடுக்கும் சூழ்நிலையே இது.