குத்துவிளக்கு ஏன் எள்ளெண்ணை ஊற்றி எரிக்கின்றோம்?
குத்து விளக்கில் எள்ளெண்ணை விட்டு பற்ற வைக்க வேண்டும்எனக் கூறும் போது எந்த எண்ணையானால் என்ன, விளக்கு எரிந்தால் சரிதானே என்று பலரும் பதிலளிக்கலாம்.
இது முற்றிலும் தவறு. கண்டிப்பாக எள்ளெண்ணையே குத்து விளக்கில் ஊற்ற வேண்டும்.சனி தேவனை துதித்து ஆசிபெறவே எள்ளெண்ணை உபயோகிப்பது. எள்ளெண்ணை சனி கிரகத்தின் பிரதிநிதியாகக் கருதப் படுகின்றது. எள்ளெண்ணை இரும்புச் சத்தடங்கியது என்பது நம்மில் பலருக்கும் தெரியாது, நம்நாட்டில் இரும்புச் சத்து பற்றாக் குறையால் அதிகமாக உள்ளது. வரும் பாதிப்பு மில்
பண்டைக் காலத்தில் இதை அறிந்திருந்ததனால் விளக்கிற்கும், குளிப்பதற்க்கும். சமையலுக்கும் எள்ளெண்ணையே பயன்படுத்தி வந்தனர். இடைப் பயிராக பெரும்பகுதி எள் பயிரிடப்பட்டிருந்தது. ணையே பயன்படுத்தி
நோயுற்று மருத்துவரிடம் செல்லும் போது: மருத்துவர் இரும்பு மாத்திரைகளும், டானிக்குகளும் பரிந்துரை செய்யும் போதெல்லாம் நமக்கு எள்ளின் மேன்மை தெரியாமல் போகின்றது. எள்ளெண்ணை உபயேகித்து விளக்கு எரிக்கும் போது சுற்றுச் சூழலில் இரும்பின் பிராணசக்தி பரவியிருப்பதும் நாம் அறிவதில்லை.
இரும்பின் பற்றாக்குறை தீர்ப்பதற்கு இதன் சக்தியின் உறைவிடமான சனி கிரகத்திலிருந்து சக்தியை இழுத்தெடுக்க சாஸ்தா கோயில்கள் பல இடங்களிலும் அமைக்க பண்டையவர்கள் தயாரானார்கள்.