ஓட்டு விளக்கின் சுடரை இரவின் காவல்காரன் என்பது ஏன்?
உலோகர் ஓட்டுக் குத்து விளக்கின் சுடரை இரவின் காவல்காரனென்று பொதுவாகக் கூறுவதுண்டு. ஓட்டு விளக்கு என்றால் ஓடு என்ற கலப்பு உலோகத்தால் செய்யப்பட்ட விளக்கு என்று பொருள். இது போன்ற குத்து விளக்குகளிலிருந்து மனித உடலில் செம்பு, வெள்ளி, ஈயம் என்ற உலோகங்களின் பற்றாக்குறை ஓரளவு குறையும். மேலும் இதில் எள்ளெண்ணை ஊற்றும் போது இரும்புசத்தும் கிடைக்கப் பெறலாம். தங்க நகைகள் அணிந்து ஓட்டு விளக்கில் எள்ளெண்ணை ஊற்றி பயன்படுத்தினால் பஞ்சலோகத்தின் நன்மைகள் நமக்கு கிடைக்கும். ஓட்டு விளக்கின் கூட்டுலோகங்களின் சக்தியும்,எள்ளெண்ணையின் இரும்பின் சக்தியும் சேர்ந்து வரும் போது எரியும் சுடரைச் சுற்றிலும் ஆரோக்கிய சக்தி பரவுகின்றது.
அவை நோய் வரும் காரணங்களை அழித்து விடும் என்று நவீன சாஸ்திரம் கூறுகின்றது. இதை துஷ்டமூர்த்திகளை அழிக்கும் சக்தி என்று பாட்டிமார் கூறுகின்றனர்.பகலில் சூரியன் காவல் காரனாக இருப்பது போல் இரவில் ஓட்டு விளக்கில் ஒளிரும் சுடர் மனிதருக்கு
இரட்சகனாகவும் காவல் காரனாகவும் இயங்குவதாக முதியோர்கள் கூறுவார்கள்.