ஆலயத்திற்கு செல்லுமுன் செருப்பைக் கழற்றிப் போடுவது ஏன்?
செருப்பணிவது சுயகௌரவப் பிரச்சனை - யாக மக்கள் கருதுகின்றனர் என்று ஏற்கனவே பார்த்தோம்.
புண்ணியகருமங்கள் எல்லாமே காலணி இல்லாமல் செய்ய வேண்டும் என்று கூறுவதுண்டு என்றாலும் கோயிலில் நுழையும் போது செருப்பணியல் ஆகாது என்பது கட்டாயம், சில கோயில்களில் சட்டையும் அணிவது தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் எல்லாக் கோயில்களிலும் செருப்பணிவது கட்டாயமாக தடை செய்யப்பட்டுள்ளது. இந்த தடை காரணமாக சிலர் கோயிலுக்கு வெளியில் நின்று வணங்கி விட்டுச் செல்வதையும் நாம் காண்கின்றோம்.
கோயில் சுவர்களுக்குட்பட்ட இடம் தெய்வ பூமி என்பதே இந்து மத நம்பிக்கை. இறைவன் வேறெங்கும் நிலைகொள்ளவில்லை என்று இதற்கு அர்த்தம் கொள்ள வேண்டாம். செருப்பை களைந்து கோயிலுக்குள் நுழையும் பக்தரின் பாதங்கள் இயல்பாகவே காந்த சக்தியுடைய தரையில் பதிகின்றன. மனிதனின் உடல் நலத்துக்கு உத்தமமானதெனக் கண்டறிந்துள்ள பூமியின் காந்த சக்தியின் ஒழுக்கு, பாதம் தரையில் பதியும் போது உடலுக்குள் செலுத்தப்படுகின்றது. அதுமட்டுமல்ல மூலிகைகளுடைய மலர்களும் இலைகளும் கலந்த தண்ணீர் விழுந்த பூமியானதால் கோயில் சுற்று முள்ள மண்ணுக்கு மருத்துவ குணங்களும் இருக்கலாம். வவில்லை. என்ன
இவையெல்லாம் மனதில் கொண்டு காவத்தையும் காலணியையும் களைந்து இறை தரிசனம் செய்யும் போது நவீன சாஸ்திரம் விவரிக்கின்ற 'மாக்னடிக் தெரபி' அல்லது காந்த சிகிட்சை நம்முள் நடக்கின்றது.
இஷ்ட தெய்வத்தை நினைத்து தியானித்து வெகுநேரம் கோயிலில் செலவழிக்கும் போது மனதுக்கும் உடலுக்கும் ஒரே போல் நன்மைகள் கிடைக்கப்பெறும் என்பதில் சந்தேகம் இல்லை.
அவ்வாறு ஆராதிக்க நாம் அறிந்திருக்க வேண்டியது ஒவ்வொரு தேவருக்கும் தனிப்பட்ட மந்திரம் கூற வேண்டும் என்பது ஆசாரிய விதி. நவீன சாஸ்திரம் அடிப்படையிலும் நன்மையென நிரூபிக்கப்பட்டுள்ள ஒன்பது மந்திரங்களில் முதலாவதாக எல்லா தடங்கல்களையும் அகற்றும் சொல்ல வேண்டிய ஜெபம்.
பிள்ளையார் கோயிலில்
"கஜானனம் கணபதிம்
குணா நாமாலயம் பரம்
தேவம் கிரிஜா சூனும்
வந்தேக மமரார்ச்சிதம்'
நவீன சாஸ்திரம் பிரபஞ்சத்தின் சின்னமாகக் கருதும் பரம சிவனை வணங்கும் போது இவ்வாறு ஜெபம் செய்யவும்
"சிவம் சிவகரம் சாந்தம்
சிவாத்மானம் சிவோத்தமம்
சிவமார்க்க பிரணேதாதரம்
பிரணோதஸ்மி சதாசிவம்"
சரஸ்வதி கோவிலில்
"சரஸ்வதி மகா தேவி
திரிஷீகாலஷி பூஜிதே
காமரூபி கலஜ்ஞனி
நாமோ தேவி சரஸ்வதி"
என்ற மந்திரமும் ஐயப்பன் கோயிலில்
"பூதநாத சதானந்த
சர்வபூததயாபர
ரக்ஷரக்ஷமகாபாஹோ
சாஸ்தெதூபயம் நமோ நம ..."
என்றும், சுபரமணியன் கோயிலில்
"ஷாடானனம் குங்குமரக்தவர்ணம்,
மகா மதிம் திவ்ய மயுரவாகனம் ருத்ரஸ்யசூனும் சூரசைனியநாதனும் குஹம் சதா ஹம் சரணம் பிரவத்யே"
என்ற ஜெபம் சொல்லவும்,
பகவதி கோயிலில் ஜெபிக்க வேண்டியது இவ்வாறு
"சர்வ மங்கள மங்கல்யே
சிவே சர்வார்த்த சாதிகே
சரண த்ரியம்பகே கௌரி
நாராயணி நமோஸ்துதே"
பத்ரகாளி கோயிலில் செல்லும் போது வேண்டிய மந்திரம் இதுவே
"காளி காளி மகா காளி
பத்ரகாளி நமோஸ்துதே
குலசகுல தர்ம்மம்ச
மாம் ச பாலய பாலய"
மகா விஷ்ணுவை ஆராதிக்க,
'ஸ சங்கசக்ரம் ஸ கிரிடகுண்டலம்
ஸ பீதவஸ்திரம் சரசீருஹேஷணம்
ஸ ஹாரவக்ஷஸ்தல சோபிகௌஸ்துபம்
நமாமிவிஷ்ணும் சிரசா சதுர்கஜம்"
என்று சொல்லி ஆராதிக்கவும்.
ராமர் கோயிலில் செல்லும் பக்தர்கள் ஜெபிக்க வேண்டியது இவ்வாறு
"ஸ்ரீராம் ஜய்ராம் ஜய்ராம் ஸ்ரீராம் ஜயராம் ஜய்ராம்"