கோயில் தரிசனத்தின் போது ஆண்கள் மேல் உடைகள் அணியலாமா?
சில கோயில்களில் தரிசனம் செய்யும் போது சட்டை அணியத்தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த ஆசாரத்தை பலரும் ஏளனம் செய்கின்றனர்.
ஆனால் இந்துமத பிரமாணத்தின் படி, மேல் ஆடைகள் ஆண்கள் அணியாமல் ஆராதிக்க வேண்டும் என விதிமுறை வகுக்கப்பட்டுள்ளது.
கோயில் தரிசனம் செய்யும் போது நாம் மனதில் கொள்வது இறைவன் அருள் நம்மில் வந்து நிறைய வேண்டும் என்பதே . கோயில் வாசலுக்கு முன் தெய்வ விக்கிரகத்துக்கும் சமாந்தரமாக வணங்கி நிற்கும் பக்தரில் இறையருள் வந்து நிறையும் என்பது நம்பிக்கை. விக்கிரகத்தின் மூலாதாரம் முதல் எல்லா பாகங்களிலிருந்தும் இறை வல்லமை புறப்பட்டு பக்தனின் ஒவ்வொரு பாகத்தையும் நோக்கி வந்து சேர்ந்து ஒவ்வொரு பாகமும் உணர்வடைகின்றன.
இவ்வாறு நாம் படிக்கும் போது, பெண்கள் மேல் உடைகள் அணிவதுண்டே என்று கேட்கவும் வாய்ப்புண்டு. பெண்களுக்கு கோயில் தரிசனத்துக்கு செல்வதில் எந்த தடைகளும் ஆடை அணிவது சம்பந்தமாக இல்லை என்பதன் முக்கிய காரணம் நன்நெறியைப் பாதுகாப்பதுவே. பெண்களின் மேலாடை மூடாமலிருப்பது பெரும் நெறிகேடு என்பதால் அவர்கள் ஆடை அணிவதில் எந்த விதியும் போதிக்கப்படவில்லை. லாடை மூ
பிரம்ம முகூர்த்தத்தில் ஈரத்துணி உடுத்து கோயில் தரிசனம் மிக உணர்வளிக்கின்ற ஒன்றாக நாம் அறிந்துள்ளோம். ஈரம் உடலில் உள்ள போது தெய்வீக உணர்வு பக்தரின் உடலில் குடியேறும்.
பொதுவாக அதிகாலையிலும் மாலையிலும் கோயில் தரிசனம் செய்வது வழக்கம். இந்நேரங்களில் ஆண்கள் மேலாடை இன்றி கோயில் தரிசிக்க வேண்டும் என்பது விதி. உதயசூரியனிலும் மறையும் சூரியனிலும் இருந்து புறப்பட்டு வரும் ஒளிக்கதிர்கள் ஆடை அணியாத உடல் பாகங்களில் பதிந்து வைடமின் டி உட்கொள்ள உதவுவது உடல்நலத்துக்கு மிகச் சிரப்பானது என்று விஞ்ஞானம் கண்டறிந்துள்ளது.