Type Here to Get Search Results !

Translate

திருநீர் அணிவது எதற்காக?

திருநீர் அணிவது எதற்காக?

திருநீர் அணிவது எதற்காக?

குளியலைப் போலவே திருநீரணிவதும் அன்றாட வாழ்க்கையின் முக்கிய பாகமாயிருந்தது முற்காலத்தில்.

முழு விசுவாசத்துடன் ஒரு சிட்டிகை திருநீர் எடுத்து நெற்றியில் வைத்த பின்னே பண்டைய பக்தர்கள் ஜெபத்துக்கு அமருவர். ஜெபத்தில் மருத்துவ குணங்கள் நிறைந்திருக்கின்றன.

சுத்தமான திருநீர் தயாரிக்கும் முறை காலப்போக்கில் மாற்றமடைந்த போதிலும் பழைய முறைகளை கடைபிடிப்பவர்களுமுண்டு. புல் மட்டும் அருந்தும் பசுவின் சுத்தமான எருவை சிவராத்திரி அன்று உமியில் எரித்துக் கிடைக்கும் சாம்பலை தண்ணீரில் கலக்கி மறுபடியும் உலர வைத்து சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்தபின் நெற்றியிலிடுவதற்காக பாதுகாத்து வைக்க வேண்டும்.

. திருநீரை நனைத்தும் நனைக்காமலும் அணிவதுண்டு. திரு நீரணிந்தால் உடலின் துர் நீரை உறிஞ்சி எடுப்பதற்கும், உடல் வெப்பத்தைக் குறைப்பதற்கும், உடல்நிலையை மேன்மையடையச் செய்வதற்கும் வாய்ப்புண்டு என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

தியாகத்தின் வடிவமான சிவபெருமானை மகிழ்விக்க மிகச்சிறந்தது திருநீர் அணிதல் என்று இந்துமதம் கருதியுள்ளது. நெற்றி, கழுத்து, தோள், முட்டு முதலிய இடங்களில் திருநீர் அணிய வேண்டும் என்று பொதுவாகக் கூறுவதுண்டு.

திருநீரை நனைத்து அணிவதன் மூலம் உடல் வெப்பம் குறைவதனால், ஜுரம் பாதித்தவர்களின் நெற்றியில் நனைந்த திருநீர் பூசினால் ஜுரம் இறங்குவதைக் காணலாம்.

மூலிகைச் செடிகளை சுத்தமான நெயில் ஹோமகுண்டத்தில் வேக வைத்த பின் எஞ்சியிருப் பதை திருவிபூதி என அழைப்பதுண்டு. இக்காலத்தில், உடலில் திருநீர் பூசவேண்டும் என்று சொன்னால் சொல்லுபவருக்கு அடிப்படையாக எதோ குழப்பம் இருப்பதாக கேட்பவர்கள் எண்ணுவர்.

இறைவனருள் இதனால் கிடைக்கப் பெறும் என்ற நம்பிக்கை இருந்தாலும் உடலெங்கும் விபூதி அணிவதால் மற்றுமொரு நன்மை உண்டாகும் தலை உச்சியில் திருநீர் பூசினால் அங்குள்ள நீர்க் கெட்டை இழுத்தெடுக்கும் என்பது பலரும் கண்டறிந்துள்ளனர். அதற்காக உடலெங்கும் விபூதியணிவது அலங்கோலமாக்க வேண்டுமோ என்றால் அதற்கு தான்.

பூசுவது மிக அவசியம். ஏனென்றால் நீரை உறிஞ்சி எடுக்கும் வாய்ப்பு மிக அதிகம் உள்ள இடம் அது. காதுகளும் மிக முக்கியமான இடம், உடம்பின் எழுபத்திரண்டாயிரம் நரம்புகளும் ஒன்று சேரும் வர்மமாகும் காதுகள் ஒவ்வொரு நரம்புகளிலும் நீரும் கொழுப்பும் கட்டுவதற்கு வாய்ப்பு அதிகமுண்டு. இதனால் வாதம் பாதிப்புண்டாகலாம் என்று ஆய்வேதம் கூறுகின்றது. பார்க்கும் போது உடலில் எந்த இடத்தில் விபூதி அணிந்தாலும் அந்த இடத்தில் உள்ள ஈரத்தை உறிஞ்சி எடுக்கும். அவ்வாறு திருநீரணந்தால் நவீன உலகமும் அங்கீகரித்த உடல் மருத்துவத்தை நாம் அடைகின்றோம் என்பதில் சந்தேகம் இல்லை.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad