இடுப்புக்குக் கீழ் சந்தனம் அணியலாமா?
திருநீர் அணிவதைப் போலவே சந்தனம் பூசுவதற்க்கும் இந்து மத ஆசாரம் பல விதிகள் வகுத்துள்ளன. ஆனால் இடுப்புக்கு கீழ் சந்தனம் அணிவது விலக்கப்பட்டுள்ளது. இதுபோலவே காலில் தங்கம் அணியக்கூடாது என்றும் போதிக்கப்பட்டுள்ளது.
தங்கத்தில் லட்சுமி குடியிருப்பதாக நம்புவதால் அதை காலில் அணியவேண்டாம் என்று கூறப்படுகின்றது. இது மூட நம்பிக்கை என்பதை விட இதில் விஞ்ஞானமும் அடங்கியிருக்கிறது.
தங்கம் நிரந்தரமாக காலில் அணியும் போது வாதம் வர வாய்ப்புண்டு என்று நம் நாட்டு மருத்துவ துறை கண்டறிந்துள்ளது. தேவர்களுக்கு படைக்கும் சந்தனம், திருநீர், குங்குமம் முதலியவற்றை இடுப்புக்கு கீழ் அணிய கூடாது என்று போதிக்கப்பட்டுள்ளது.
இதுவும் முற்றிலும் விஞ்ஞான அடிப்படையில் கண்டுபிடிப்புகள் வெளிப்படுத்துகின்றன. சந்தனம் 8 என்பது அண்மையில் சில பொதுவாக ஒரு குளிரச் செய்யும் பொருள். இதை இடுப்புக்குக் கீழ் மிகையாகப் பூசினால் இன விருத்தித்திறனை பாதிக்கும் என்று நவீனசாஸ்திரம் கூறுகின்றது.