
திதி பலன்கள்
எந்த திதியில் எந்த செயல்களை செய்தால்
நமக்கு வெற்றி கிடைக்கும்?
நம் முன்னோர்கள் எந்த ஒரு செயலையும் செய்வதற்கு முன்னர் அதை எந்த திதியில் செய்தால் சிறப்பான பலன்களைப் பெற முடியும் என்பதை அறிந்து அதற்கேற்ப செய்தார்கள். இப்பொழுது எந்த திதியில் எந்த செயல்களை செய்தால் வெற்றி கிடைக்கும் என்பதைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
அஷ்டமி :
இந்த திதிக்கு அதிதேவதை சிவபெருமான். அஷ்டமி திதியில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். தளவாடம் வாங்கலாம். நடனம் பயிலலாம்.
நவமி :
இந்த திதிக்கு அதிதேவதை அம்பிகை ஆவார். இந்நாளில் கெட்ட விஷயங்களை அழிப்பதற்கான செயல்களை துவங்கலாம்.
தசமி :
தசமி திதியில் எல்லா சுப காரியங்களிலும் ரூடவ்டுபடலாம். இந்த திதிக்கு அதிதேவதை எமதர்மன். ஆன்மிகப்பணிகளுக்கு உகந்த நாளிது.
மேலும், மதச் சடங்குகளைச் செய்யலாம். கிரகப்பிரவேசம் செய்யலாம். அரசு காரியங்களில் ரூடவ்டுபடலாம். பயணம் மேற்கொள்ளலாம்.
ஏகாதசி :
இந்த திதிக்கு அதிதேவதை ருத்ரன். ஏகாதசி திதியில் விரதம் இருக்கலாம். திருமணம் செய்யலாம். நோய்க்கு சிகிச்சை செய்து கொள்ளலாம். சிற்ப காரியம் மற்றும் தெய்வ காரியங்களில் ஈடுபடலாம்.
துவாதசி :
இந்த திதிக்கு அதிதேவதை விஷ்ணு ஆவார். துவாதசி திதியில் மதச்சடங்குகளில் ஈடுபடலாம்.
திரயோதசி :
இந்த திதிக்கு மன்மதன் அதிதேவதை ஆவார். திரயோதசி திதியில் சிவ வழிபாடு செய்வது விசேஷமாகும். மேலும், தெய்வ காரியங்களில் ரூடவ்டுபடலாம். பயணம் மேற்கொள்ளலாம். புத்தாடை அணியலாம்.
மேலும், புதியவர்களை நண்பர்களாக்கிக் கொள்ளலாம். கேளிக்கைகளில் ஈடுபடலாம்.
சதுர்தசி :
இந்த திதிக்கு அதிதேவதை காளி ஆவார். ஆயுதங்கள் உருவாக்கவும், மந்திரம் பயில்வதற்கும் சதுர்தசி திதி உகந்த நாள்.
பௌர்ணமி :
பௌர்ணமி திதியில் விரதம் மேற்கொள்ளலாம். மேலும் சிற்ப, மங்கல காரியங்களில் ஈடுபடலாம்.
அமாவாசை :
அமாவாசை திதியில் பித்ருக்களுக்கு ஆற்றவேண்டிய கடன்களை, வழிபாடுகளை செய்யலாம். இயந்திரப்பணிகளை மேற்கொள்ளலாம். இந்த திதி தான, தர்ம காரியங்களுக்கு உகந்தது.