அமானுஷ்ய இரகசியங்கள் வெளிப்படும்!.
அமானுஷ்ய துறையில் எந்த கோணத்தில் ஆராய்ந்தாலும், அதில் எங்காவது ஒரு இடத்தில் சில தடங்கல்கள், சில கருத்து வேறுபாடுகள் ஏற்படத்தான் செய்கிறது.
ஆன்மிக வரலாறு. புராணம், இதிகாசம், சித்தர் நூல்கள், வேதம், உபநிஷதம்.... போன்றவற்றிலும் ஆராய்ச்சியை தொடர்ந்து சென்றால், அங்கும் பல தடைக்கற்கள் பரிபாஷையிலும் மறைபொருளிலும் அவர்கள் சொல்லி உள்ளது தெரிகிறது. அவற்றை எல்லாம் நம்மால் கடக்க முடியாமல் தவிக்கிறோம்
அக்காலத்து சித்தர்கள், ரிஷிகள், ஞானிகள் தங்கள் புத்தகங்களை பரிபாஷையில் எழுதினார்களா? என்றால், அப்படி இருக்க வாய்ப்பு சற்று குறைவாகவே இருக்கின்றது.
ஏனெனில், அவர்கள் நடந்துகொண்ட விதம் மிகவும் பெருந்தன்மை உனையனவாகவும், மனித சமுதாயத்திகற்கு பயன்படும்படியாகவும் தான் இருந்து இருக்கிறார்கள்.
பிறகு, ஏன் அவர்களது நூல்களின் கருத்துக்கள் மட்டும் புரியாமல் இருக்கின்றன?
இந்த கேள்விக்கு பதில் இதுதான்!
சித்தர்களும் பல புத்தங்களும்
ஒரு மருத்துவரிடம் சென்று, "இந்த நோய்க்கு மருந்து என்ன?" என்று கேட்டால், அவர் "இந்த மாத்திரை சாப்பிட்டால் குணமாகும் என்று தான் சொல்வார். ஆனால் அவர் அந்த மருந்து தயாரிக்கும் முறையைப் பற்றி எல்லாம் விளக்கமாகச் சொல்லிக் கொண்டு இருக்க மாட்டார்.
நம்மைப் பொருத்தமட்டில் மருத்துவர் தனது மருந்தை சொல்லி உள்ளார் மறைபொருளாகச் என்றுதான் கருதுவோம். உண்மையில் மருத்துவர் மறைபொருளில் சொல்லவில்லை. மருந்தைத்தான் சொன்னார். ண்மையோ அதைத்தான் சொன்னார்.
ஆனால் பேதையான நமக்குத்தான் அந்த மருந்து செய்யும் முறை தெரியாது. நாம் அவரிடம் சென்று, அய்யா, மருந்து செய்யும் முறை மட்டும் சொல்லுங்கள் என்று கேட்டால் அதையும் அவர் விளக்கமாகச் சொல்வார்.
இங்குதான் விஷயமே இருக்கு!
எப்படி மருத்துவர் உடலில் ஏற்படும் நோய்களுக்கு எல்லாம் மருந்தைச் சொல்கிறாரோ, அதே போல் மருந்து செய்யும் முறைகளையும் ஒருநாள் சொல்லத்தான் செய்வார்.
அதேபோல தான் சித்தர்களும் நோய்களுக்கான மருந்தைப் பற்றி நூல்களாக எழுதினர். பிறகு, இந்த மருந்து எவ்வாறு செய்வது என்று மக்களுக்குத் தெரிய வேண்டும் என நினைத்து மருந்து செய்யும் முறையையும் நூலாக எழுதினார்.
இவ்வாறே ஆன்மிகத்தைப் பற்றியும், அமானுஷ்ய சக்தியைப் பற்றியும் அவர்கள் நூலாக எழுதி வைத்துள்ளனர். பின் அமானுஷ்ய சக்திகள் எவ்வாறு பெற வேண்டும்; என்ன முறைகளில் செயல்பட வேண்டும் என்பது பற்றியும் மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என நினைத்து அவற்றையும் நூலாக எழுதியுள்ளனர்.
ஆனால் காலம் மாறிக்கொண்டே வரவர அவர்களுக்குப் பின்னால் வந்தவர்களில் பலபேர் கைகளுக்கு நூல்கள் மாறிமாறி ப் போனது. அப்போது அந்த நூலை வைத்திருந்தவர்கள் சாதாரண நூலை மட்டுமே அப்போது உள்ள மொழி நடைக்கு மொழிபெயர்த்து வெளியிட்டனர்.
ஆனால் சித்தர்கள் எழுதிய அற்புத வழிமுறை கூறும் நூலை அப்படி ஓர் நூல் மொழிபெயர்த்து வெளியிடவில்லை. இருப்பதையே வெளியே காட்டிக் கொள்ளவில்லை.
இப்படியே அற்புத நூல்கள் எல்லாம் தாந்திரிக்கள் கையில் மாட்டிக் கொண்டு விட்டது. அவர்கள் மட்டுமே அந்த வித்தைகளை அறிந்து அற்புதமான செயல்களை எல்லாம் செய்து வருகின்றனர்.
நாடி ஜோதிடம், ஓலைச் சுவடிகள் பல பேரிடம் இருப்பதும், பல ஓலைகள் அழிந்து செல்லரித்து இருப்பதும், பல ஓலைகள் இன்னும் கண்டுபிடிக்கப்படாமல் இருப்பதும் நாம் அறிந்ததே.
அதேபோல் மூலிகைகளைக் கொண்டு மணலை கயிராகத் திரிக்கலாம், கண்ணைத் திறந்துகொண்டே மண்ணைக் கண்ணில் போட்டாலும் கண் அரிக்காது. கண்ணாடி புட்டியைக் கடித்து மென்றுத் துப்பினாலும் வாய், நாக்கு அறுபடாது. நீர் உள்ள சொம்பினைத் தலைகீழாகக் கவிழ்த்தாலும் நீர் கொட்டாது. முள் படுக்கையில் படுத்துப் பெருங்கல்லை மேலே வைத்தாலும், முள் உடலின் உள்ளே ஏறாது.
இன்னும் அநேக சித்துக்கள் செய்யும் அற்புத வித்தைகள் அடங்கிய நூல்கள் எல்லாம், ஆங்காங்கே சிலர் கைகளில் இருப்பது உண்மையே. அந்த வித்தைகளை அறிந்தவர்கள் அத்திபூத்தாற்போல், எப்போதாவது தங்கள் வித்தையை உலகிற்கு காட்டுவதையும் நாம் பார்க்கத்தான் செய்கிறோம்.
இப்படி பல வெளியே அமானுஷ்ய விஷயங்கள் தெரியாமலும், சித்தர் பாடல்கள் பொருள் புரியாமலும் போய்க் கொண்டு இருக்கின்றன. அந்த நூல்கள் எல்லாம் எங்கோ ஓர் மூலையில் பருந்தைப் போல் படுத்துத் தூங்காமல், செல் அரித்துப் போகாமல் சரியானவர்கள் கையில் கிடைத்தால் அவை உலகிற்கே பயன்படும்.
என்னதான் இவர்கள் மறைத்தாலும் இயற்கை தனது அமானுஷ்ய சக்தியை காட்டாமலா போய்விடும்! இயற்கையும் காட்டியது. எனது உண்மையான தேடலுக்கு இணங்கி இயற்கையும் தனது இரகசியங்களை சித்தர்களுக்குக் காட்டியது போல எனக்கும் கொண்டதை இனி காட்டியது. அப்படி நான் அறிந்து தெரிவிக்கின்றேன்.
மறைந்து இருக்கும் இரகசியங்கள்
நான் என்னுள் உள்ள சக்தியை அடைய, தேடப் பல ஆராய்ச்சிகள் செய்தேன். அதில் ஒன்றுதான் பிராண ஆராய்ச்சியாகும். இந்தப் பிராண ஆராய்ச்சியில் இறங்க முக்கிய காரணமாக இருந்தது. தொலைக்காட்சியில் வரும் ஒரு விளம்பரம் (Advertisement) தான்.
சில திருடர்கள் ஒரு பள்ளிக்கூட அறைக்குள் சென்று மிரட்டுவர். அப்போது ஒரு மாணவன் N20 உள்ள ஒரு பாட்டிலை திறந்துவிடுவார். அதில் இருந்து வரும் வாயுவின் மணத்தை (Gas) நுகரும் திருடர்கள் அவர்களை மறந்து சிரிக்க ஆரம்பித்துவிடுவார்கள்.
இந்த விளம்பரத்தைப் பார்த்த பிறகு என்னால் பல நாட்கள் முடியவில்லை. ஏனெனில், இந்த விளம்பரத்தில் மிகப்பெரிய ஒன்று அடங்கி இருப்பதாக நான் உணர்ந்ததே.
"இந்த N20 வாயுவிற்கும் நமது சிரிப்பு உணர்விற்கும் என்ன சம்பந்தம்? எப்படி இந்த N20 வாயு நம்மைச் சிரிக்க வைக்கிறது? நமது கோப உணர்வுகளை இது எப்படி மாற்றுகிறது? நமது மனதையே மாற்றும் N20 என்பது என்ன?" போன்ற கேள்விகள் என் மனதில் பறந்தன.
அதற்கான பதிலையும் பல வேதியியல் நூல்களில் படித்து அறிந்தேன். அதன் மூலம் கிடைத்த வேதியியல் உண்மைகள் இதோ.
நைட்ரஜன்
Ng0 என்பது "அடர் நைட்ரிக் ஆக்சைடு" ஆகும். இது நமது மூளைக்குச் சென்று, மூளையில் சிரிப்பு உணர்வைத் தூண்டும் செல்களைத் தூண்டி சிரிக்க வைக்கிறது.
நைட்ரஜன் என்பது ஒரு தனிமம். ஆக்சிஜன் என்று மற்றோர் தனிமம். இந்தத் தனிமங்கள் மனிதனை இயக்குகிறது. மனிதனின் குணநலன்களை மாற்றுகிறது. ஆக்சிஜன் என்ற தனிமம் மனிதனுக்கு மிகமிக இன்றியமையாதது. இது இல்லாமல் நம்மால் உயிர் வாழவே முடியாது.
அப்படியானால் மனிதனின் சக்தி (Energy), அபூர்வ சக்திகள், ஏன் அடிப்படை ஆற்றல்கள் எல்லாமே இந்தத் தனிமங்களில் தான் இருக்க வேண்டும். சித்தர்கள் சொன்னார்களே மணி, மந்திரம். ஒளஷதம், ரசவாதம்.... மூலமும் அற்புத சித்திகளைப் பெற முடியும் என்று அந்த முறைகளில் இதுவும் ஒன்றாக இருக்குமோ
தனிமங்களைப் பற்றி நாம் இன்னும் அதிகமாக ஆராய்வது தான் சரியானதாக இருக்கும். அமானுஷ்ய சக்திகளின் மூலகாரணமாக ஏன் இந்தத் தனிமங்கள் இருக்கக் கூடாது? ஆம், இந்தத் தனிமங்கள்தான் அமானுஷ்ய சக்திக்குக் காரணமாக இருக்கின்றன.
இந்த இரகசியங்களை அறிய, தனிமங்களைப் பற்றி நாம் முழுமையாக அறிந்துகொள்ள வேண்டியது அவசியமாகும்.
தனிமங்களைப் பற்றி இனி பார்ப்போம்.
மேலும் தொடர்புக்கு :-
ஸிவ ஸ்ரீ இஎஸ். நக்கீரன்
+917904599321
தொடரும் _