இறவா நிலையை அடைய சூக்ஷும இரகசியம் -
அமானுஷ்ய ஆற்றல் பாகம் - 1
அஷ்டாங்க யோகம் கைவரப் பெற்றால் மனிதனால் ராஜயோகத்தை அடைய முடியும். எட்டு அங்கங்கள் முறையே யமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்தியாஹாரம், தாரணை, தியானம், சமாதி நிலை ஆகும்.
மனம் எப்பொழுதும் இனிமையோடு கூடிய உற்சாகமும் சாந்தமும் கொண்டு இருக்க வேண்டும்.
யோக சாதனம் பயிலுகின்ற ஒருவன் அமர்ந்திருக்க வேண்டிய முறை ஆசனம். சுவாசிப்பதன் மூலம் உண்டாகிற பிராணனுடைய போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவது பிராணாயாமம். பொறிகளைப் புலன்கள் வழு செல்லவொட்டாது தடுத்து வைப்பது பிரத்தியாஹாரம். ஏதேனும் ஒரு இலக்கில் மனதை உறுதியாக நிலை நிறுத்துவது தாரணை. சிந்தனையில் ஈடுபட்டு இருப்பது தியானம். மனம் ஒடுங்கிப் பாரமார்த்திகப் பேருணர்வைப் பெறுவது சமாதி.
மேலான எட்டு அங்கங்கள் யமம், நியமம், ஆகிய இரண்டும் யோகி சீலத்திலே நிலை நிற்கச் செய்கின்றன. வ்விரண்டையும் முறையாக அனுஷ்டிக்காதவன் யோகத்தில் வெற்றி அடைய மாட்டான். இவ்விரண்டில் யோகி உறுதிபெற்று விடுவானாகில் தன்னுடைய சாதனத்தின் விளைவுகளை "சுவானுபூதி"யில் கண்டறிவான். உடல் பரிபக்குவமாக யோகி ஒருவன் யோகாசனங்கள் சிலவற்றைச் செய்தாக வேண்டும். ஸ்திரமாகவும் மனதுக்கு சுகமாகவும் எந்த ஆசனம் இருக்கிறதோ அதுவே பொருத்தமான ஆசனம் "என பகரப்படுகிறது.
உடலில் உண்டாகும் இயக்கங்களுள் பெரும்பகுதி சுஹூமனை நாடியில் நிகழ்ந்து கொண்டிருக்கும்.
முதுகெலும்பு அல்லது முள்ளந்தண்டில் இருக்கும் ஈஷூமனை நாடிக்கு இடைஞ்சல் ஏதும் ஏற்படாதவாறு வைத்திருப்பது அவசியமாகிறது. நெஞ்சு, கழுத்து, தலை, ஆகிய மூன்று உறுப்புகளையும் நேர்கோட்டில் இருக்கும்படி வைத்து முதுகெலும்பு எப்பக்கத்திலும் வளைந்து போகாது நிமிர்ந்து இருக்கும்படி ஆசனம் போட்டு அமர்வது அவசியமாகிறது.
மனிதனை நீடுவாழச் செய்வது ஹடயோகத்தின் நோக்கமாகும். ஆரோக்கியமும், நூறு வருஷம் வாழ்வதும் ஹடயோகத்தின் மூலம் சாத்தியமே. அதற்கு மேல் உயர்ந்த மனநிலை எதையும் ஒருவன் எட்டுவது இல்லை.
ஐயாயிரம் ஆண்டுகள் வாழ்ந்திருக்கிற ஆலமரம் இருக்கிறது. அதற்கு மேல் அதனிடத்து முன்னேற்றம் ஒன்றும் இல்லை.
மனதின் நோக்கமோ அதனின்று முற்றிலும் வேறுபட்டது. மனதைப் பண்படுத்தி அதன் கூறுகளை எல்லாம் கடந்து அப்பால் ஏகுவதையே அது லட்சியமாகக் கொண்டிருக்கிறது.
காலையில் எழுந்து நாசித்துவாரம் வாயிலாகச் சிறிது தண்ணீர் அருந்துவது தலைவலியைப் போக்கும். நாசித் துவாரம் மூலம் நீரை அருந்துவதனால் நாள் முழுவதும் மூளையானது அமைதியான நல்ல நிலையில் இருக்கும். சளி பிடிக்காது. விரைந்து நீரை உறிஞ்சாமல் நிதானமாக நீரை உறிஞ்சுங்கள். சிரமமின்றி நீரை அருந்தலாம்.
பிராணாயாமத்தின் முதல் படி நாடி சுத்தி. வலது நாசித் துவாரத்தை அடைத்துக் கொண்டு இட நாசித் துவாரத்தின் வாயிலாக காற்றை உள்ளே வாங்க வேண்டும். பிறகு நேரம் விடாமல் இடது நாசித் துவாரத்தை அடைத்துக்கொண்டு வலது நாசித் துவாரத்தினை வாயிலாக அவ்வளவு காற்றையும் வெளிப்படுத்த வேண்டும். காற்று முழுவதும் வெளியான அதே கணத்தில் வலது நாசித் துவாரத்தின் வாயிலாக உட்கொள்ள இயலுமளவு காற்றை வாங்கி பின்னர் இடது நாசித் துவாரத்தின் வாயிலாக வெளிப்படுத்த வேண்டும். மூன்று தடவைகளுக்குக் குறையாமல் ஐந்து தடவை வரையில் இப்படி நாடி சுத்தி செய்ய வேண்டும். சூரியோதயம் முன்பு ஒரு முறை
ஒரு முறை நண்பகலில் ஒரு முறை, மாலையில் ஒரு முறை, இரவில் இங்ஙனம் நான்கு வேளைகளில் நாடி சுத்தி பயிலுதல் வேண்டும்.
ஒவ்வொரு வேளையிலும், மூன்றுக்கு குறையாமல் ஐந்து தடவைகள் வரையில் பழகுதல் அவசியம். இப்பயிற்சியை முறையாகக் கையாண்டால் ஒரு மாசத்துக்குள் நாடி சுத்தி உண்டாகும். அதன் பிறகு பிராணாயாமம் துவக்கலாம்.
தேக ஆரோகயம் என்பது ஓர் உயர்ந்த நிலையை அடைவதற்கான உபாயமே என்பதை நாம் மறந்துவிடலாகாது.
மனம் குவிந்த நிலை சமாதி எனப்படுகிறது. சாஸ்திரத்தின் முக்கிய கோட்பாடு சமாதி யோக நிலையைப் பெறுதலேயாம். மற்ற சாதனங்களை எல்லாம் விட மனம் குவிதல் என்னும் சாதனம் மிக உயர்ந்தது. ஈசனிடம் சரணாகதி கூடுகிற பண்ணுகிறவன் ஈசனோடு ஒன்றித்து விடுகிறான். சமாதியும் பரிபூர்ண நிலையெய்துகிறது.
|
நமது உடம்பிலுள்ள
|
கோவிலில் உள்ள
|
|
ஆசனவாய்க்கும் உயிர் நிலைக்கும் இடைப்பகுதி
|
மூலாதாரம்
|
பாம்பு
|
சபா மண்டபம்
|
|
தொப்புளுக்கு சிறிது
கிழ்பகுதி
|
சுவாதிட்டாணம்
|
நிலம்
|
அலங்கார மண்டபம்
|
|
தொப்புளுக்கு சிறிது
கிழ்பகுதி உள்ள இடம்
|
மணிபூரகம்
|
நீர்
|
மகா மண்டபம்
|
|
இதயம் நெஞ்சைக் குறிக்கும்
இடம்
|
அநாகதம்
|
நெருப்பு
|
அபிஷேக மண்டபம்
|
|
தொண்டைப்பகுதி
|
விசுத்தி
|
காற்று
|
அர்த்த மண்டபம்
|
|
நெற்றிப்பொட்டு
|
ஆக்ஞை
பிரம்மஹாத்திரம்
|
ஆகாயம்
|
கர்ப்பகிரகம் இறைவன்
|
பிரம்மஹாந்திரம் என்னும் இறுதிப்படியை அடைய மூலாதாரம், சுவாதிட்டாணம், மணிபூரகம், அநாகதம், விசுத்தி. ஆக்ஞை
எனும் படிகளைத் தாண்டி அடைதல் வேண்டும்.
"மெஞ்ஞான தோர்க்கு சிவதனுமேவுமே"
- திருமந்திரம்
"அக்ஞானி ஒருவனுக்கு பிராணன் நவதுவாரங்களின் வழியாக கூட்டை
விட்டுப் போகிறது"
"ஞானிக்கோ அது புருவ மத்தியில் நின்று உச்சந்தலையில்
பிரம்மாந்திரத்தின் வாயிலாக வெளியேறுகிறது."
புலன்களை அடக்காவிட்டால் துன்பம் உண்டு. தண்டனையும்
உண்டு. இது நவநாயகர்கள் மூலம் நடைபெறுகிறது.
நல்வழி நடப்போமானால் மனம் ஒருநிலைப்படும். மனம்
ஒருநிலைப்படும்போது இல்லறத்தில் ஈடுபட்டால் நன்மக்கள் -உருவாகுவார்கள். தர்ம நெறியில் வாழ்தல் அவசியம்.
|
பஞ்சபூதங்கள்
|
தனிமங்கள்
|
கடவுள்
|
|
நிலம்
|
கார்பன் டை ஆக்சைடு
|
பிரம்மா
|
|
நீர்
|
அடர் ஹைட்ரஜன் ஆக்சைடு
|
நாராயணன்
|
|
நெருப்பு
|
அடர் ஆக்சிஜன்
|
ருத்ரன்
|
|
காற்று
|
ஐயோடின் டை ஆக்சைடு
|
மகேஸ்வரன்
|
|
ஆகாயம்
|
அடர் நைட்ரஜன் ஆக்சைடு
|
சதாசிவன்
|
|
|
பாஸ்பரஸ்
|
வினாயகர்
|
- ·
பிட்யூட்டரியில் நைட்ரஜன் அதிகம்.
- ·
தைராய்டில் அயோடின் அதிகம்.
- ·
அட்ரினலில் ஹைட்ரஜன் அதிகம்.
- ·
இனப்பெருக்கச் சுரப்பியில் கார்பன் தனிமம் அதிகம்.
- ·
குண்டலினியில் பாஸ்பரஸ் அதிகம்.
(அமானுஷ்ய சக்தி பெறலாம்)
(ஒளி, மூலாதாரம், குண்டலினி, ஆழ்மனம்)
சகஸ்ராரம் - பெருவெளி - பரமாத்மா - நியூட்ரான்
பிட்யூட்டரி - ஆக்ஞாசக்கரம் - புத்தி
தைராய்டு - விசுத்தி - அயோடின் - காற்று மகேஸ்வரன்
கணையம் - அனாகதம் - ஆக்சிஜன் - ருத்ரன் (நெருப்பு சக்தியை உடலில் பரப்புதல்)
அட்ரினல் - மணிபூரகம் (நீர்) -ஹைட்ரஜன் - நாராயணன்
னப்பெருக்கச் சுரப்பி - சுவாதிஷ்டானம் - கார்பன் கார்பன்
- பிரம்மா
குண்டலினி சுரப்பி - மூலாதாரம் - வினாயகர்ஆழ்மனம், ஆதார சக்தி
பாஸ்பரஸ்
குருதீட்சை தருவது மூலாதாரத்தில் - தொடு தீட்சை
அக்குபஞ்சர் (சீன முறை) நாடிகளின் அடைப்பை நீக்குவது அதனால் உடல் குணமாகிறது,
கடவுளையும் அமானுஷ்ய சக்திகளையும், விஞ்ஞான ரீதியாக ஆராய்ந்து ஒளிமயமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறது. இந்த அமானுஷ்ய ஆற்றல் என்ற பதிவு மனித வாழ்க்கைக்கு மிகப்பெரிய வழிகாட்டியாக அமையும் என்பது திண்ணம்.
மேலும் தகவலுக்கு _
ஸிவ ஸ்ரீ நக்கீரன்
+917904599321
தொடரும் -